புரிந்ததும் புரியாததும்
நம் அன்றாட வாழ்வில், நாம் கேட்டு, படித்து, பார்த்து புரிந்தவைகள் சில, புரியாதவைகள் பல. ஆனால் புரியாத பட்டியல்தான் நீண்டுகொண்டே இருக்கிறது. அப்படி நமக்கு புரியாதவைகளையும், புரிந்தவைகளில் உள்ள மற்றொரு கோணத்தையும் இந்த புத்தகத்தின் வாயிலாக நமக்கு விளக்குகிறார் சத்குரு...
 
 

நம் அன்றாட வாழ்வில், நாம் கேட்டு, படித்து, பார்த்து புரிந்தவைகள் சில, புரியாதவைகள் பல. ஆனால் புரியாத பட்டியல்தான் நீண்டுகொண்டே இருக்கிறது. அப்படி நமக்கு புரியாதவைகளையும், புரிந்தவைகளில் உள்ள மற்றொரு கோணத்தையும் இந்த புத்தகத்தின் வாயிலாக நமக்கு விளக்குகிறார் சத்குரு...

நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, மறையியல், ஆன்மீகம், கடவுள், முக்தி, சொர்க்கம் - நரகம், மாந்திரீகம், மந்திரம், தர்க்கம், ஆழ்மனம், பகுத்தறியும் மனம், உள்ளுணர்வு, யோகா, தியானம், ஒருமை-இருமை, பற்று, ஆளுமை, முற்பிறவி, அமாவாசை-பௌர்ணமி, பிரபஞ்சம் என்றெல்லாம் அநேக சொற்கள் நம் முன் வந்து விழுகின்றன.

இந்த வார்த்தைகளும் அதற்கான விளக்கங்களும் எப்போதும் புரிந்தும் புரியாததுமாகத்தான் நமக்கு இருந்திருக்கிறது.

உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உண்மையையும் எடுத்துச் சொல்லும் பாணி ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் கூட ஒரே பாடத்தை ஒரு ஆசிரியர் நடத்தும்போது மாணவர்கள் 'புரிகிறது' என்கிறார்கள், வேறொரு ஆசிரியர் நடத்தும்போது, 'சரியாக புரியவில்லை' என்கிறார்கள்.

அதே போல், இங்கே தன்னை உணர்ந்த ஞானியும் யோகியுமான சத்குரு அவர்கள், வாழ்வின் புதிரான பக்கங்களை நமக்கு விளக்கும்போது, இதற்குமுன் நாம் அறிந்ததை விட, இப்போது ஒவ்வொன்றையும் தெள்ளத் தெளிவாக உள்வாங்க முடிகிறது.

அதனால்தான் சத்குருவிடம், மக்கள் தங்களுக்கு விளங்காத எந்த ஒரு விஷயத்தையும் - அந்த விஷயம் எதைப் பற்றியதாக இருந்தாலும் - திரும்பத்திரும்ப கேட்டு தெளிவான விடை பெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படி சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இந்த நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நூலை நீங்கள் படித்து முடிக்கும்போது, உங்களுக்கு இருந்த பல வருட குழப்பங்கள் கூட நீங்கி, இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறோம்.

மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூல் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளிவந்து பாராட்டுகள் பெற்ற 'Mystics and Mistakes' என்ற நூலின் தமிழாக்கமே. இந்நூல் ஜுலை 12, 2013 அன்று வெளியிடப்பட்டது.

பக்கம்: 288
விலை: ரூ. 120

ஈஷாவின் புத்தக வெளியீடுகளைப் பெற: 0422-2515415

இந்த புத்தகத்தை ஆன்லைனில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

டவுன்லோடு

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1