புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஈஷாவின் அஞ்சலி!

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் பலியாகினர். வீரர்களின் உயிர்த்தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா crafts பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் இதயப்பூர்வ அஞ்சலியை சமர்ப்பித்தனர். இதுகுறித்து மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!
pulvama-thaakudaluku-baliyana-veerargaluku-ishavin-anjali
 

ஒரு தேசம் என்பது நிலவியல் அமைப்பின்படி அதன் எல்லைக்கோடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்திய தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் இராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்பு படையினரும், CRPF வீரர்களும் அயராது பணியாற்றி வருவதோடு, சில நேரங்களில் தங்கள் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.

siachen-sg-yoga-pic

நம் நாட்டின் பல்வேறு மோசமான நிலப்பகுதிகளில், கடுமையான சீதோஷண நிலைகளில், ஆக்சிஜன் கிடைக்காத மலைச் சிகரங்களில் என உடல்நிலையிலும் மனநிலையிலும் பல்வேறு சிரமங்களையும் சகித்துக்கொண்டு, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நம் படைவீரர்களுக்கு நம் நன்றியை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதென்பது இயலாத காரியம்தான்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது தேசம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் அடங்குவர்.

பலியான வீரர்களின் உடல்களுக்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினார்கள். சத்குரு அவர்கள் உடனடியாக தனது ட்விட்டர் பதிவின் மூலமாக தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு, உள்நாட்டு பயங்கரவாத ஆதரவு தரப்பின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தற்போது இன்னொரு ட்விட்டர் பதிவின்மூலம் பிரதமரிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

sg-tweet-on-terrorattack

sgtweet-enoughisenough

ஈஷா Crafts பணியாளர்களின் இதய அஞ்சலிகள்:

பலியான வீரர்களுக்கு தங்கள் இதயப்பூர்வ அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் காணிக்கையாக்கும் விதமாக, ஈஷா ஷாப்பி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலியை செலுத்தினர்.

adiyogi-crpf-banner

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1