புல்லாங்குழல் இசை வெள்ளத்தில் மிதந்த 6ஆம் நாள் யக்ஷாவைப் பற்றி சில வரிகள்!


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திரு. ஷஷாங்க் சுப்ரமணியம் மற்றும் ராகேஷ் சௌராஷியா ஆகிய இருவரும் கர்நாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானி இசையை சேர்த்து ஜுகல்பந்தி இசைநிகழ்ச்சியாக, 6ஆம் நாள் யக்ஷா திருவிழாவான இன்று வழங்கினார்கள். 'வாஜஸ்பதி' ராகத்தை இருவரும் மாறிமாறி கர்நாடக - இந்துஸ்தானி இசைகளில், தங்கள் புல்லாங்குழல்கள் வழியாக காற்றில் அனுப்ப, அங்கு இசையை ரசித்துக்கொண்டிருந்த அனைவரும் இன்னிசையில் இரண்டறக்கலந்தனர்.

'வாதாபி கணபதிம் பஜேஹம்' பாடலை அவர்கள் வாசித்ததை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அற்புத இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில் இசைக்குழுவினருக்கு சத்குரு அவர்கள் மலர் கொடுத்து ஆசி வழங்கிப்பாராட்டினார்.

யக்ஷாவைப் பற்றி அறிய

திரு.ஷஷாங்க் சுப்ரமணியம் அவர்களின் சிறப்புகள்

மூங்கில் புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஷஷாங் சுப்ரமணியம் அவர்கள் இந்திய பாரம்பரிய இசைக்காக இந்தியாவிலிருந்து கிராமி விருதுக்கு பாரிந்துரை செய்யப்பட்டவர் என்பது குற்ப்பிடத்தக்கது. ஒரு குழந்தை மேதையான இவர், தமது இசை நிகழ்ச்சிகளை ஆறாவது வயதிலேயே வழங்கத் தொடங்கியவராவார். ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில் தனது இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள ஷஷாங், கர்நாடக இசைத்துறையில் ஒரு மூத்த புல்லாங்குழல் இசை கலைஞராக வலம் வருகிறார்.

திரு. ராகேஷ் சௌராஷியா அவர்களின் சிறப்புகள்

ராகேஷ் சௌராஷியா அவர்கள் புகழ் பெற்ற புல்லாங்குழல் வித்வான் மேஸ்ட்ரோ பண்டிட் ஹரிபிரசாத் சௌராஷியா அவர்களின் மருமகன் ஆவார். இரண்டாவது தலைமுறையினரில் பல நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்களின் மத்தியில் ராகேஷ் சௌராஷியா திறமையான புல்லாங்குழல் கலைஞராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவர் தனது மாமா பண்டிட் ஹரிபிரசாத் சௌராஷியாவின் இசை பாரம்பரியத்தை இணைத்து ஒரு புது அம்சத்தினை உருவாக்கி கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இசைக்கிறார்.

பண்டிட் ஹரிபிரசாத் அவர்களின் திறமையான சீடர்களில் ஒருவரான ராகேஷ் சௌராஷியா அவர்கள், புல்லாங்குழல் இசையில் புதிய உயரங்களை தன் தனித்திறனால் அடைந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.