புதுச்சேரி துணைநிலை ஆளுநரை அசத்திய மாணவர்கள்

செப்டம்பர் 4... கோவையில் நடந்த 12வது ஈஷா கிராமோத்சவ கொண்டாட்டங்களுக்கு முக்கிய விருந்தினராய் வருகை தந்திருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்கள் கோவை ஈஷா யோக மையத்திலுள்ள பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலை மாணவர்களையும் சந்தித்தார். அதன்பின், நமக்களித்த பேட்டி இங்கே...
புதுச்சேரி துணைநிலை ஆளுநரை அசத்திய மாணவர்கள், Puducherry thunainilai alunarai asathiya manavargal
 

செப்டம்பர் 4... கோவையில் நடந்த 12வது ஈஷா கிராமோத்சவ கொண்டாட்டங்களுக்கு முக்கிய விருந்தினராய் வருகை தந்திருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்கள் கோவை ஈஷா யோக மையத்திலுள்ள பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலை மாணவர்களையும் சந்தித்தார். அதன்பின், நமக்களித்த பேட்டியிலிருந்து...

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி:

கோவையிலுள்ள ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலையை காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு வாய்ப்பு! என்ன ஒரு அற்புதம்! என்ன ஒரு அதிசயம்!

பெரியவர்களாகி நாம் என்ன தேடிக் கொண்டிருக்கிறோமோ அதை இக்குழந்தைகள் இப்போதே பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சமநிலை, அமைதி, ஒற்றுமை, படைப்புத்திறன், புதுமையான சிந்தனை, செயல்பாடு - இதுவல்லவா சிறந்த தேசத்தை உருவாக்கும் முயற்சி!

 

இக்கேள்வியை வேறுபல பள்ளிகளில் நான் கேட்டிருக்கிறேன். “என் ஆசிரியரைப் பிடிக்கும், இந்தப் பாடம் பிடிக்கும், நீச்சல் பிடிக்கும்,” என்று ஏதோவொரு அம்சத்தை மட்டுமே பதிலாய் தருவார்கள். ஆனால், ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலை மாணவர்களோ ஒரே குரலில் “அனைத்துமே பிடித்திருக்கிறது” என்றனர். இந்த வார்த்தை, இந்தப் பள்ளியைப் பற்றி எல்லாவற்றையும் நமக்கு சொல்லிவிடுகிறது.

தேசத்தை உருவாக்க இக்குழந்தைகள் தயாராகி வருகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். பாடசாலையைச் சேர்ந்த குழந்தைகளிடத்தில் ஒரு கேள்வி கேட்டேன்.

சம்ஸ்கிருதியில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?”

குழந்தைகள் அனைவரும் ஒரே குரலில், “அனைத்துமே பிடித்திருக்கிறது” என்று குதூகலமாய் பதிலளித்தனர். இக்கேள்வியை வேறுபல பள்ளிகளில் நான் கேட்டிருக்கிறேன். “என் ஆசிரியரைப் பிடிக்கும், இந்தப் பாடம் பிடிக்கும், நீச்சல் பிடிக்கும்,” என்று ஏதோவொரு அம்சத்தை மட்டுமே பதிலாய் தருவார்கள். ஆனால், ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலை மாணவர்களோ ஒரே குரலில் “அனைத்துமே பிடித்திருக்கிறது” என்றனர். இந்த வார்த்தை, இந்தப் பள்ளியைப் பற்றி எல்லாவற்றையும் நமக்கு சொல்லிவிடுகிறது.

பெற்றோரை விட்டு தனியே வளரும் குழந்தைகள், இதுபோன்ற ஒரு ஆன்மீக சூழலில் வளர்வதும், குதூகலத்தோடு “எல்லாமே பிடித்திருக்கிறது” என்பதும் எனக்கு அபூர்வமாகத் தோன்றுகிறது. இதுபோன்ற பள்ளிகள் அதிகளவில் வரவேண்டும். ஏனெனில், இதுதான் நமது உண்மையான நாகரிகம். பல முனிவர்களையும், மகான்களையும், தீர்க்கமான சிந்தனையாளர்களையும் உருவாக்கிய நாகரிகம் இது. பாரத தேசத்தை உருவாக்கிய, செதுக்கிய நாகரிகம் இது.

இந்தக் குழந்தைகள் அவர்களைப் போலவே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை சந்தித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். இதுபோன்ற பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவர்கள்தான் நமது தேசத்தின் நாளைய தூண்கள். நம் இந்தியாவை உருவாக்க இவர்கள் இன்றே தயாராகின்றனர். ஈஷா அறக்கட்டளைக்கு நன்றி!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1