ஈஷா ருசி

பிரியாணியின் சுவைக்கு மயங்காத நாவும் உண்டோ என்று சொல்லும் அளவுக்கு, அசைவப் பிரியர்களும், சைவம் சாப்பிடுபவர்களும் பிரியாணி என்றாலே ஆர்வமாகிவிடுகின்றனர். இங்கே உங்களுக்காக பொரி பிரியாணியும், பலாப்பழ பிரியாணியும் காத்திருக்கிறது. ச்சும்மா ட்டிரை பண்ணி பாருங்க!

பொரி பிரியாணி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.


தேவையான பொருட்கள்

கேரட் - 100 கிராம்
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
ஆப்பிள் தக்காளி - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 100 கிராம்
புதினா, மல்லித்தழை - 1 கப்
பொரி - 1 கிலோ
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
டோமேடோ சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு, எலுமிச்சபழச் சாறு - சுவைக்கேற்ப

செய்முறை

கேரட், முட்டைக்கோஸ், ஆப்பிள் தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், புதினா, கொத்தமல்லி இவற்றை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணியை போட்டு வதக்க வேண்டும். நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தனியா தூள் போட்டு நன்றாக பச்சை வாசம் போக வதக்க வேண்டும். இறுதியாக உப்பு, சோயா சாஸ், டோமேடோ சாஸ் ஊற்றி இறக்கி பொரியை போட்டு கிளறி எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறி பரிமாறலாம்.

பலாப்பழ பிரியாணி

பொரி பிரியாணி, Pori Biriyani

தேவையான பொருட்கள்

இனிப்பான பலாப்பழ சுளைகள் - 20 (கொட்டை நீக்கியது)
அரிசி - ஒரு ஆழாக்கு
தக்காளி - 4
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
புளிக்காத தயிர் - ஒரு டம்ளர்
மஞ்சள் - ஓரு ஸ்பூன்
கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை பழச்சாறு - 5 ஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப
இஞ்சி விழுது - 2 ஸ்பூன்
வாசனைப் பொருட்கள் - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் அரிசியை நன்கு களைந்து அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் நெய் அல்லது எண்ணெய் விட்டு காய்ந்த பின் வாசனைப் பொருட்களைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்ததாக இஞ்சி விழுது போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கும் போதே அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் மற்றும் சிறிதளவு கரம் மசாலா பொடியும் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை நன்கு வதக்கவும். இதில் ஊற வைத்த அரிசியையும் சேர்த்து வதக்கவும், அரிசியில் இந்த மசாலா சேரும் போது உணவின் சுவை கூடும்.

கடைசியாக கொட்டை நீக்கிய பலாச்சுளைகளையும் சேர்க்கவும். சுளைகள் உடையாமல் கிளறவும். தயிரையும் இதனுடன் சேர்த்து விடலாம். முந்திரி, உலர்ந்த திராட்சையையும் இப்போது சேர்க்கலாம். ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.

மூன்று விசில் விட்டு இறக்கவும். மணமான பலாப்பழ பிரியாணி ரெடி.