பாட்டியை யோகியாக்கிய ஈஷா யோகா!

'யோகா செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் வயதாகிவிட்டதே!' என சொல்லி தட்டிக்கழிப்பவர்கள் இங்கே அதிகம்தான்! அதுபோன்ற மனிதர்களுக்கு வார்த்தைகளால் அல்லாமல், தன் வாழ்க்கையால் பதில் சொல்லி அசரச்செய்கிறார் இந்த பாட்டி! பாட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது பேத்தி அனு பேசுகிறார்!
 

'யோகா செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் வயதாகிவிட்டதே!' என சொல்லி தட்டிக்கழிப்பவர்கள் இங்கே அதிகம்தான்! அதுபோன்ற மனிதர்களுக்கு வார்த்தைகளால் அல்லாமல், தன் வாழ்க்கையால் பதில் சொல்லி அசரச்செய்கிறார் இந்த பாட்டி! பாட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது பேத்தி அனு பேசுகிறார்!

அனு:

"ஆண், பெண், இளையவர்கள், பெரியவர்கள் வசதிமிக்கவர், வசதிக்கு முயல்பவர் என எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் ஒருசேர அரவணைத்து நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை நினைவூட்டும் தனித்துவமான பாங்கு சத்குருவுடையது.

எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அற்புதமான குருவை அறிமுகப்படுத்தி வைத்து, இந்த பாதையில் எங்கள் குடும்பத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறார் எங்கள் பாட்டி. இன்று எங்கள் குடும்பம் முழுவதும் ஈஷா யோகா கற்றுக்கொள்ள காரணமும்​ இவர்தான்.

பாட்டி சொல்லும் யோகா சீக்ரெட்!, patti sollum yoga secret

இந்த செப்டம்பர் மாதம் வந்தால் எங்கள் பாட்டிக்கு எழுபத்தைந்து வயது துவங்குகிறது. 2004ம் ஆண்டு ஈஷாவின் தன்னார்வத் தொண்டர் ஒருவர் எங்கள் தாத்தாவிடம் சக்தி சலன க்ரியா பயிற்சி கற்றுக் கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். என்ன காரணத்தினாலோ தன் மனைவி (பாட்டி)யின்​ பெயரை மட்டும் பதிவு செய்தவர், தன் பெயரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டார்.

2004ம் ஆண்டு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பாட்டிக்கு தினமும் அதிகாலையில்​ எழுந்து பயிற்சியை​ செய்வது இயல்பானதாக, ஒரு வழக்கமாகவே மாறிவிட்டிருந்தது. தினமும் செய்யும் பயிற்சி தன்னில் ஏற்படுத்திய மாற்றங்கள் பாட்டிக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்க, இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் ஆசிரமத்தில் நடக்கும் அடுத்தடுத்த வகுப்புகளில் தன்னார்வத் தொண்டராக பங்குபெறத் துவங்கினார்.

இந்நிலையில், 2005ம் ஆண்டு தாத்தா காலமானார். சோகத்தில் மூழ்கிய பாட்டிக்கு​, தாத்தாவின் இழப்பு மீளமுடியாத துயரமாக இருந்தது. ஆறுதலும், மாற்றமும் வேண்டி ஆசிரமம் சென்றார். உள்ளே நுழைந்தவரை வரவேற்ற ஸ்வாமியின் புன்னகையில் உடைந்தவராக, தம் இழப்பைப் பற்றி தெரிவித்தார்.

பயிற்சிசெய்யத் துவங்கிய நாளிலிருந்து இன்றுவரை தலைவலி, காய்ச்சல் போன்ற எந்த உடல்நலக் குறைவும் ஏற்பட்டதில்லை என்பதை நினைவுகூறும் பாட்டிக்கு, நீண்டநாட்களுக்கு முன் ஜலதோஷம் மட்டும் இருந்ததாக ஞாபகம்.

பாட்டிக்கு ஆறுதலாக பேசிய ஸ்வாமி, அடுத்த உயர்நிலை வகுப்பான பாவஸ்பந்தனாவில் கலந்துகொள்ள ஊக்கமளித்தார். இப்போதும் கூட தம் மீளாத் துயரிலிருந்து வெளிவர உதவிய பாவஸ்பந்தனாவைப் பற்றி நன்றியுடன் பாட்டி நினைவு கூர்வார். ஹடயோகாவும் கற்றுக்கொண்ட பாட்டிக்கு, முதுகுத்தண்டுவட பிரச்சனை காரணமாக ஹடயோகா பயிற்சிகளை​ தொடர்ந்து செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும்​ அதிகாலையில் ​ எழுந்து தமது பயிற்சிகளை​ அவர் தொடர்ந்து செய்து வருவதை ​பார்க்கும்போது, பாட்டி மீதும், பயிற்சிகளின் மீதும் தனிமரியாதையே ஏற்படுகிறது. தனது வாழ்நாளில் ஒருநாள்கூட​ அதிகாலை பயிற்சியை​ தவறவிடவில்லை என்பதில் பாட்டிக்கு எப்போதுமே பெருமிதம் இருக்கிறது. பயிற்சிசெய்யத் துவங்கிய நாளிலிருந்து இன்றுவரை தலைவலி, காய்ச்சல் போன்ற எந்த உடல்நலக் குறைவும் ஏற்பட்டதில்லை என்பதை நினைவுகூறும் பாட்டிக்கு, நீண்டநாட்களுக்கு முன் ஜலதோஷம் மட்டும் இருந்ததாக ஞாபகம். அதிலும், ஜலதோஷத்திற்க்கான அறிகுறிகூட இரண்டொரு நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை என்பார்.

இன்றும், தமது அன்றாட தேவைகளை தாமே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு உடலளவில் உற்சாகமாகவும் தெம்பாகவும் இருக்கிறது என்பார். தம் ஆரோக்கியமான வாழ்வுக்கு​ தாம் கற்றுக்கொண்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதே காரணம் என்று நன்றியுடன் நினைவுகூறும் பாட்டி நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்," என்றார் அனு.

தம் உடல் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவதே பெரிய விஷயமாக இன்று மாறிவருகிறது. நாற்பது வயதை நெருங்கும் போதே மருத்துவமனையில் தவமிருக்கத் துவங்கும் மக்களின் எண்ணிக்கை, நாம் எங்கே செல்கிறோம், என்ன செய்கிறோம் என்று நம்மை சிந்திக்க வைக்கிறது. எளிமையாக கையாள வேண்டிய அடிப்படை​ உடல்நலமே புரியாத சமூகமாக மாறி வருவது நம் திசையை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்நிலையில், தம் வாழ்க்கையை ஒரு தவமாக, அதன் இயல்பான​ தன்மையில் வாழமுடியும் என்பதற்கு சாட்சியாக இருக்கும் பாட்டியை போன்றவர்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அவசியம்தானே.

சத்குரு குறிப்பிடுவது போல, நம் உடல் ஆரோக்கியம் என்பது​ நாம் பார்த்துக்​கொள்ள வேண்டிய ஒன்று. அதை மருத்துவர்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள்.

குறிப்பு:

ஆதியோகியின் முன்னிலையில் நிகழவிருக்கும் 3வது உலக யோகா தின கொண்டாட்டங்களுக்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

ஜூன் 21, காலை 7 மணிக்கு
ஈஷா யோக மையம், கோவை.

சத்குருவுடன் நேரில் பங்கேற்க அல்லது நேரடி இணைய ஒளிபரப்பைக் காண...
AnandaAlai.com/YogaDay

சிறப்பு விருந்தினர்:
Dr.மகேஷ் ஷர்மா
மாண்புமிகு மத்திய அமைச்சர்
சுற்றுலா மற்றும் கலாச்சார துறை

முதன்மை விருந்தினர்:
மாண்புமிகு தமிழக சிறப்பு ஆளுநர்
வித்யாசாகர் ராவ் அவர்கள்

இணையம் மூலமாக இலவச உப-யோகா கற்க: AnandaAlai.com/YogaDay