ஈஷா ருசி

பழங்களும் காய்கறிகளும் சத்தானவைதான். ஆனால் அவற்றை உண்ணும் முறையினால் அவற்றிலுள்ள சத்துக்களை நாம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். அவற்றை சமைக்காமல் இயற்கையாகவே உட்கொள்ளும்போது, அவை உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தருகின்றன. சில எளிய ரெசிபிகள் இங்கே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாஸ்தா சாலட்

தக்காளி - 100 கிராம்
மஞ்சள் குடைமிளகாய் - 100 கிராம்
வெள்ளரிக்காய் - 100 கிராம்
கருப்பு ஆலிவ் - 15 எண்கள்
பிராக்கோலி (Broccoli)- சிறியது
பன்னீர் - சிறிது
ஸ்பிரிங் பாஸ்தா - 100 கிராம் (வேக வைத்தது)

அனைத்தையும் பொடியாக நறுக்கவும். ஆலிவ் எண்ணெய், புதினா, எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து, சாலட்டில் கலக்கவும். கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

பழ சாலட்

பாஸ்தா சாலட், pasta salad
மாதுளை - ஒன்று
ஆப்பிள் - ஒன்று
வாழைப்பழம் - ஒன்று

சிறிய துண்டுகளாக வெட்டி தேன் கலந்து பரிமாறவும்.

பழ காய்கறி சாலட்

வெள்ளரிக்காய் - 100 கிராம்
ஆப்பிள் - 150 கிராம்
ஆரஞ்சு - ஒன்று (விதை நீக்கி வெட்டவும்)
பாலக் கீரை - ஒரு கட்டு

அனைத்தையும் துண்டுகளாக நறுக்கவும். கடுகு விழுது, மிளகுத் தூள், உப்பு இவற்றை சாலட் மேல் தூவவும். எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பரிமாறவும்.