பாசிப்பயறு பானகம்
சுட்டெரிக்கும் கோடையில் நம் தாகத்தை தணிக்க ஆங்காங்கே நீர்மோர் பந்தல்களும், மோர் மிளகாயுடன் கூடிய கம்பங் கூழ் வண்டிகளும் முளைத்துக் கொண்டிருக்க, வீட்டிலேயே தயாரித்து உங்கள் உடல் உஷ்ணத்தைக் குறைத்துக் கொள்ள இரண்டு ரெசிபிக்கள் இங்கே...
 
 

ஈஷா ருசி

சுட்டெரிக்கும் கோடையில் நம் தாகத்தை தணிக்க ஆங்காங்கே நீர்மோர் பந்தல்களும், மோர் மிளகாயுடன் கூடிய கம்பங் கூழ் வண்டிகளும் முளைத்துக் கொண்டிருக்க, வீட்டிலேயே தயாரித்து உங்கள் உடல் உஷ்ணத்தைக் குறைத்துக் கொள்ள இரண்டு ரெசிபிக்கள் இங்கே...

பாசிப்பயறு பானகம்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்
கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
சுக்குப்பொடி - 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)

செய்முறை:

  • ஒரு வாணலியில் பாசிப்பயறை போட்டு வாசனை வரும்வரை வறுக்க வேண்டும்.
  • பிறகு அதை ஆற வைத்து மிஷினில் போட்டு நைஸாக அரைத்து தேவையான அளவு நீர் ஊற்றி, ஏலக்காய் பொடி, சுக்குபொடி மற்றும் சுவைக்கேற்றாற்போல் வெல்லம் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்.

வெள்ளரி மோர் கறி

தேவையான பொருட்கள்:

வெள்ளரி - 3
தேங்காய் -அரை மூடி
தேங்காய் எண்ணெய் - தாளிக்க
சீரகம் - 1 ஸ்பூன்
தயிர் - 500 எம் எல்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
மிளகாய் - சுவைக்கேற்ப
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

  • நறுக்கிய வெள்ளரியுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • தேங்காய், கசகசா, முந்திரி, மஞ்சளை ஒன்றாக சேர்த்து நைய அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த கலவையை நன்றாக அடித்த தயிருடன் கலந்துக் கொள்ளவும்.
  • வெள்ளரிக்காய் வெந்தவுடன் தயிர்க் கலவையை அதில் கலக்கவும். சிம்மில் வைத்து சமைக்கவும். கொதி வரக் கூடாது.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து கொட்டி, நுரை கட்டியவுடன் இறக்கவும்.
  • எண்ணெயில் நன்கு வதக்கிய தக்காளியை தயிர்க் கலவை சேர்க்கும்போதே சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியாவதற்கு அரிசி மாவையும் சேர்த்து அவியல் பதத்தில் இறக்கினால் சுவையான வெள்ளரி மோர் கறி ரெடி.
  • இதை குழம்பு பதத்தில் இறக்கினால் மிகச் சுவையான வெள்ளரி மோர் குழம்பு ரெடி.
  • வெயிலுக்கு மிகவும் சுவையான, குளிர்ச்சியான பதார்த்தம் இது!
 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் க்கு முன்னர்

Can someone please post the recipes of food items prepared at ashram for Annadhanam and other events held by Isha? They are simple items like Upma, tamarind rice or tomato rice, but healthy and tastes divine.