பருப்பு அடை பொடிமாஸ்
பொடிமாஸை பலவகை உணவுப் பொருட்களை வைத்து நாம் தயாரிக்க முடியும். பருப்பு அடை பொடிமாஸ் எப்படி தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.
 
 

ஈஷா ருசி

பொடிமாஸை பலவகை உணவுப் பொருட்களை வைத்து நாம் தயாரிக்க முடியும். பருப்பு அடை பொடிமாஸ் எப்படி தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
துவரம்பருப்பு - 2 டம்ளர் (வேகவைத்தது)
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

  • புழுங்கல் அரிசியை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின் தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக கெட்டியாக அரைக்கவும்.
  • பின் அடுப்பில் தோசை கல் வைத்து காய்ந்ததும் சிறிது எண்ணெய் விட்டு அரிசி மாவை சிறிய சிறிய அடையாக சுட்டு எடுக்கவும்.
  • ஆறியதும் அடையை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி உதிர்த்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை இவைகளை சேர்த்து தாளித்து அதில் வெந்த துவரம்பருப்பு, எலுமிச்சை சாறு, சிறிது மஞ்சள் பொடி, சாம்பார் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • பின் உதிர்த்து வைத்துள்ள அடை துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும். இது மிகவும் ருசியாக இருக்கும்.
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1