பன்னீர் பாவ்
பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் என்று பன்னீர் வகையறாக்களை விரும்பி சுவைக்கும் உணவு விரும்பிகளுக்கு, இதோ புதிதாய் பன்னீர் பாவ்... சுவைத்து மகிழுங்கள்!
 
 

ஈஷா ருசி

பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் என்று பன்னீர் வகையறாக்களை விரும்பி சுவைக்கும் உணவு விரும்பிகளுக்கு, இதோ புதிதாய் பன்னீர் பாவ்... சுவைத்து மகிழுங்கள்!

தேவையான பொருட்கள்

பன்னீர் - கால் கிலோ
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
முட்டைகோஸ் - 150 கிராம்
மிளகு - 10 கிராம்
மைதா - 150 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

  • முட்டைகோஸை நறுக்கி எண்ணெய்யில் வதக்கவேண்டும்.
  • வதக்கிய முட்டைகோஸ், மிளகு, சிறிதளவு முந்திரி, உப்பு எல்லாவற்றையும் அரைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதிக்கும்பொழுது அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • சிறிதளவு பன்னீரை எடுத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும்.
  • முந்திரி, திராட்சையை சிறிதாக உடைத்து, அதை உதிர்த்த பன்னீரில் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மைதா மாவில் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
  • மீதமுள்ள பன்னீரை slice சாக ஒரே அளவாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • ஒரு slice கீழ் வைத்து அதன் மேல் உதிர்த்த பன்னீர் கலவையை வைத்து, அதன்மேல் ஒரு பன்னீர் slice வைத்து மூடி மைதா கரைசலில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
  • முட்டைகோஸ் கொண்டு செய்து வைத்துள்ள கிரேவியை பொரித்த பன்னீரின் மேல் ஊற்றி சாப்பிட்டால் இனிப்பும், காரமும் கொண்ட சுவையுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1