ஈஷா ருசி

ஓட்ஸ் என்றாலே கஞ்சி மட்டுமே செய்ய முடியும் என்பதல்ல. "கஞ்சியா?" என்று அலுத்துக் கொள்ளும் ரகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதோ, சத்தான ஓட்ஸில் அல்வாவும், பக்கோடாவும் ரெசிபியாய் வழங்குகிறோம். சுவைத்து மகிழுங்கள்!

ஓட்ஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஓட்ஸ் - 100 கிராம்
சோள மாவு - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
சோம்பு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - கால் லிட்டர்

செய்முறை

ஓட்ஸை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சோள மாவு, தேங்காய் துருவல், சோம்பு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து வடை பதத்திற்கு நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். எண்ணெயில் இட்டு பொரித்து எடுத்தால் சூடான ஓட்ஸ் பக்கோடா ரெடி. ஓட்ஸ் சேர்த்து செய்வதால் இது மிக சத்தான பதார்த்தம்.

ஓட்ஸ் உதிர் புட்டு


தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 200 கிராம்
நாட்டு சர்க்கரை - 150 கிராம்
நெய் - சிறிதளவு
தேங்காய் - அரை மூடி (துருவியது)
உலர் திராட்சை - சிறிதளவு
முந்திரி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

செய்முறை

ஓட்ஸை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து ஆவியில் வேகவைக்க வேண்டும். பின்னர் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்துகொள்ளவும். வாணலியில் சிறிது நெய் ஊற்றி காய்ந்தவுடன் முந்திரி, திராட்சை சேர்த்து, பின் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி ஓட்ஸில் கலந்து பரிமாறவும். ஓட்ஸ் என்றாலே கஞ்சி மட்டுமே அல்ல, அதிலும் பல வெரைட்டிகள் செய்ய முடியும்.

ஓட்ஸ் அல்வா


தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 100 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரி, திராட்சை - சிறிதளவு
பால் - சிறிதளவு

செய்முறை

ஓட்ஸை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியைப் பாலில் ஊறவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். கம்பி பதத்தில் சர்க்கரைப் பாகு செய்து, அதில் ஓட்ஸ் மாவைப் போட்டு கிளறவும். பின்னர் அதில் அரைத்து வைத்த முந்திரியை ஊற்றி, திராட்சை மற்றும் நெய் சேர்த்து நன்றாக கிளறவும். நல்ல பதத்தில் வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.