ஈஷா ருசி

நெல்லிக்காயில் ஊறுகாய் செய்யலாம், உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம். ஆனால் பாயசம் செய்ய முடியுமா? முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றி நெல்லிக்காய் பாயசம் செய்து ருசியுங்கள்...

தேவையான பொருட்கள்:

சீவிய நெல்லிக்காய் - 100 கிராம்
வெல்லம் - 300 கிராம்
ஏலம், சுக்கு பொடி - சிறிதளவு
தேங்காய் பால் - 1 கப்
முந்திரி - 10
பச்சரிசி மாவு - அரை கப்
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

  • விதை நீக்கி சீவிய நெல்லிக்காயை ஒரு கடாயில் தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும்.
  • பிறகு அதை மசித்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை நீர் விட்டு மண் இல்லாமல் காயவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
  • வெல்லப்பாகு, மசித்த நெல்லிக்காய் இரண்டையும் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பச்சரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்ற வேண்டும்.
  • அரிசி மாவு கட்டிப்படாமல் இருக்குமாறு விடாமல் கிளறவேண்டும். கொதித்தவுடன் தேங்காய்பால், ஏலம், சுக்கு பொடி, நெய்யில் பொறித்த முந்திரி ஆகியவற்றை போட்டு மெல்லிய தீயில் சிறிது நேரம் வைத்து இறக்கவேண்டும்.
  • இது சத்தான பாயசம், வெகு ஜோராக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.