யோகக் கலாச்சாரத்தில், தட்சிணாயன காலத்தை சாதனா பாதை என்று அழைப்பார்கள். உத்தராயணத்தை ஞானப் பாதை என்று அழைப்பார்கள். சாதனா பாதையில் இது தேவியின் பாதை. சில வகையான சாதகர்கள் சில வகையான சாதனாக்களை அன்றைய தினத்திலிருந்து செய்யத் துவங்குவார்கள். அடிப்படையில் இது பெண் தெய்வத்துக்கான காலகட்டம். இந்த காலகட்டம் தேவிக்கு உரியது. இந்த காலகட்டத்தில் பூமி கனிவாகிவிடுகிறது. பூமியின் வடக்கு அரைகோளப் பகுதி மென்மையாகிவிடுகிறது. ஏனென்றால் இச்சமயத்தில் பூமியின் வடக்குப் பகுதிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாகக் கிடைக்கிறது. எனவே அனைத்துமே மென்மையாகி, பெண் தன்மை மிகுந்தவையாகிவிடுகின்றன. எதுவும் மிகத் துடிப்பாக இருப்பதில்லை. எனவே இது பெண்மையின் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது. எனவே பெண்மையின் காலகட்டத்தின் துவக்கம்தான் நவராத்திரி அல்லது தசரா. இப்பண்டிகை முழுக்க முழுக்க தேவிக்கு உரியது.

இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் லிங்கபைரவி கோவிலில் சில விஷயங்கள் நடைபெற இருக்கின்றன. பிரம்மச்சாரிகள் போன்று சாதனாவில் இருப்பவர்களுக்கு அது எந்த நாளாக இருந்தாலும் அது ஒன்றுதான். ஆனால் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டங்கள் முக்கியமானவை என்பதால் அவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இயற்கை அளிக்கும் சிறிய உதவிகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. எனவே இந்த ஒன்பது நாட்களும் இங்கு நீங்கள் இருந்தால், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவியுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். இந்த ஒன்பது நாட்களில் அப்படி செய்வது மிகவும் நல்லது.

கோவை லிங்கபைரவி திருக்கோயிலில் இவ்வருடம் நவராத்திரி கொண்டாட்டங்கள் செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெறுகின்றன. தினசரி மாலை தேவிக்கு சிறப்பு அபிஷேகங்களும் உற்சவ மூர்த்தி ஊர்வலமும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று லிங்கபைரவியின் அருள் பெற அன்போடு அழைக்கின்றோம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.