கோவை ஈஷா யோக மையத்திற்கு அருகே உள்ள மத்வராயபுரம் கிராமம். கைப்பந்தாட்ட போட்டி ஒன்று நடக்கவிருந்தது. வீரர்கள் தங்களை தயார்செய்து கொண்டிருந்தார்கள், இருள்சூழ்ந்த, அந்த இரவில், மைதானம் மட்டும் மின்விளக்குகளால் மின்ன, மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அவ்வப்போது ஆட்டத்தின் முன்னோட்டம் குறித்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. அந்த நடுஇரவிலும் கூட ஆட்டத்தைக் காண சுமார் 200 ரசிகர்கள் கூடி இருந்தனர்.

இரவு மணி 12:

விளையாட்டு தொடங்க இருந்தது! ஒலிபெருக்கியில் ஆட்டம் தொடங்குவது தொடர்பான அறிவிப்புகள் சொல்லப்பட்டன. அந்த மின்விளக்கு வெளிச்சத்தில், சற்று தொலைவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். மிகத் தீவிரமாக, எல்லோரும் விளையாட்டைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால், யாரும் அவரை கவனிக்கவில்லை.

நள்ளிரவு போட்டிகளில் கைப்பந்தாட்டத்தில் ஒரு சஸ்பென்ஸ், nalliravu pottigalil kaippanthattathil oru suspense

ஒருவர் பின் ஒருவராக அவரை அடையாளம் கண்டனர். சிறிது நேரம் கடந்தபின் விளையாட்டை விட்டுவிட்டு எல்லோரும் அந்த இடத்தை நோக்கி விரைந்தனர். ஒரு கட்டத்தில் எல்லோரும் அவரைச் சுற்றியே இருந்தனர். அவர் நம் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கூடி இருந்தவர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர். ஒலிபெருக்கியிலும் சத்குருவின் வருகை குறித்து அறிவிப்பு வெளியானது. இதனால், அக்கம்பக்கத்தில் இருந்த மக்களும் மைதானம் நோக்கி வரத்தொடங்கினர். மைதானத்தில் இருந்த இளைஞர்கள் சத்குருவுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க முற்பட்டனர்.

இளைஞர்கள் சத்குருவுடன் உரையாடினார்கள், அவர், "நான் இங்கு வந்தது விளையாட்டுப் போட்டிகளைக் காண," என்று சொல்லிப் பார்த்தார். மக்கள் கேட்கவில்லை. மக்களின் ஆரவாரத்துடன் கூட்டமும் அதிகரித்தது. இரவு நேரம் என்பதால் மிகக் குறைவான தன்னார்வத் தொண்டர்களே அங்கு தென்பட்டனர். சிறிது நேரம் காத்திருந்த சத்குரு விளையாட்டு தொடங்குவதற்கு தாமதமாவதை உணர்ந்து எல்லோரையும் வாழ்த்தி, அங்கிருந்து புறப்பட்டார்.

ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து ஈஷா யோக மையம் மற்றும் சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் கைப்பந்தாட்டப் போட்டியின் தொடர்ச்சி இது. ஈஷா யோக மையம் நடத்தும் கிராமோத்சவம் திருவிழாவின் முன்னோட்டம். கிராமங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் எண்ணத்தோடும் நிகழ்த்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் இவை.

சத்குருவின் வருகை குறித்து அங்கிருந்த சக்திகுமரன் கூறுகையில்...

ஒருவர் பின் ஒருவராக அவரை அடையாளம் கண்டனர். சிறிது நேரம் கடந்தபின் விளையாட்டை விட்டுவிட்டு எல்லோரும் அந்த இடத்தை நோக்கி விரைந்தனர். ஒரு கட்டத்தில் எல்லோரும் அவரைச் சுற்றியே இருந்தனர். அவர் நம் சத்குரு.

தொலைக்காட்சியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தில் சத்குருவை கண்டேன். அங்கிருந்த வர்ணனையாளர் சத்குருவை யோகி, மிஸ்டிக் என்று வர்ணித்தார். அவரை அந்தப் போட்டியில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அதே சத்குரு இன்று நாங்கள் விளையாடுவதைக் காண வந்திருக்கிறார் என்று நினைக்கும்போது எங்கள் சந்தோஷத்திற்கு அளவில்லை.

அருண்குமார், கைப்பந்தாட்ட வீரர்:

அவரது வருகை ஆச்சரியம் அளிக்கும்படி இருந்தது. அவரைக் காண்பேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. அவருடன் செல்ஃபி எடுத்தபோது இது வாழ்நாளில் மறக்க முடியாத செல்ஃபியாக இருக்குமென்று எனக்குள் ஆழமாய் உணர்ந்தேன்.

ஆனந்தகுமார், கைப்பந்தாட்ட வீரர்:

என்ன ஒரு பாக்கியம் சத்குருவை காண்பதற்கு... அவருடன் உரையாடி, புகைப்படமெடுத்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அன்றிரவு வெகு நேரம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தோம். இனி எப்போது கைப்பந்தாட்டம் விளையாடச் சென்றாலும் இந்தக் காட்சி என் ஞாபகத்திற்கு வரும்.

முரளி, பார்வையாளர்:

சத்குரு இங்கு வருவார், எங்களுடன் உரையாடுவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கனவுபோல இருந்தது, நான் முதலில் யாரோ என்று எண்ணினேன், பிறகு உற்று நோக்கியபோதுதான் அவர் சத்குரு என்று எனக்குத் தெரிந்தது. ஓடிச்சென்று புகைப்படம் எடுத்தேன், அவருடன் உரையாடிய நிமிடங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத கணங்கள். மிகவும் கனிவாக எங்களுடன் உரையாடினார். விளையாட்டின் மீதான தனது ஆர்வத்தை குறித்தும் பேசினார்.