‘நதிகளை மீட்போம்’ கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஈஷாவில் இலவச பயிற்சி!
ஈஷாவில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக இரண்டு நாட்கள் இலவச கலைத்திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. யார் இந்த மாணவர்கள்? எதற்கு இந்தப் பயிற்சி...? தொடர்ந்து படித்தறியலாம்!
 
 

2 நாட்கள் கலைத்திறன் பயிற்சி!

 

ஈஷா அவுட்ரீச் மற்றும் ‘நதிகளை மீட்போம்’ இயக்கம் இணைந்து, பள்ளி மாணவர்களுக்காக 2 நாட்கள் இலவச கலைத்திறன் பயிற்சி முகாமை ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் வழங்கின.

 

அழிந்துவரும் நம் தேசத்தின் நதிகளை மீட்கவேண்டிய அவசியம் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘நதிகளை மீட்போம்’ இயக்கம் கேமலின் (CAMLIN) நிறுவனத்துடன் இணைந்து, 2017 ஆகஸ்ட் மாதம் தேசிய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு கலைத்திறன் போட்டிகளை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் கரடிடேல்ஸ் (KARADI TALES) நிறுவனத்தின் இணை இயக்குனர்

 

திருமதி.ஷோபா விஸ்வநாத் அவர்கள் மற்றும் ஓவியர் திருமதி. உமா கிருஷ்ணஸ்வாமி ஆகியோர் மாணவர்களுக்கான கலைத்திறன் பயிற்சிகளை சிறப்பாக வழங்கினர். மேலும், தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் திருமதி. பங்கஜா ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக நிறைவு நாளில் பங்கேற்றார்.

இப்பயிற்சியில் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் கதை எழுதுதல், கவிதை புனைதல் போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன. முதல்நாள் பயிற்சி ஈஷா யோகா மையத்தின் அருகாமையிலுள்ள குளத்தேரி கரையில் நடந்தது. இதில் இயற்கையின் முக்கியத்துவம் குறித்தும் நீராதாரத்தை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

 

யார் இந்த மாணவர்கள்…

 

அழிந்துவரும் நம் தேசத்தின் நதிகளை மீட்கவேண்டிய அவசியம் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘நதிகளை மீட்போம்’ இயக்கம் கேமலின் (CAMLIN) நிறுவனத்துடன் இணைந்து, 2017 ஆகஸ்ட் மாதம் தேசிய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு கலைத்திறன் போட்டிகளை நடத்தியது. தமிழகம், புதுவை, கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், மற்றும் புதுடில்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். ஓவியம், புகைப்படம், குறும்படம், கதை மற்றும் கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 5, 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நதிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 3 மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான இப்போட்டியில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 3 பேர் வெற்றியாளர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அம்மாநிலங்களில் நடைபெற்ற ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றிபெற்ற அந்த 7 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தவாரம் ஈஷாவில் நடைபெற்ற இலவச பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ‘

நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு உங்களது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க அழைக்கிறோம்.

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1