“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 7

“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணி - பெங்களூருவிலிருந்து Live Blog
 

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.

இன்று பெங்களூரில் இப்பேரணி நிகழ்கிறது. அதன் பதிவுகள் கீழே. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

7 வது நாளான இன்று, பூங்கா நகரம் என்றழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தின், ஏன் இந்தியாவுக்குமே மென்பொருள் தலைநகரமான பெங்களூருவிலிருந்து உங்களை சந்திக்கிறோம். இன்று பொதுமக்களுக்கான பேரணி நிகழ்ச்சி மாலை 5 மணிக்குத் துவங்கவுள்ளது. இதன் நேரலை ஒளிபரப்பை மாலை 5 மணி முதல் RallyForRivers.org/Tamil-Live ல் காணலாம். அதுவரை எப்படிக் காத்திருப்பது என்று, நம்மவர்கள் இன்று காலையே நகரம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டார்கள்.

பூங்கா நகரம் பெங்களூரு

பழமையும் புதுமையும் பின்னிப்பிணைந்து இருக்கும் பெங்களூரு…

Blore-17

Blore-19

Blore-18

Blore-20

காலையிலேயே துவங்கிவிட்ட பைக்-பிரச்சாரம்

இன்று நகரத்தில் பைக்கில் பிரச்சாரம் நடந்தது… அதெப்படி சத்குரு இல்லாமல்? அவருக்கென தனியாக ஒரு பைக் வந்திட, நீல நிறத்தில் உடையணிந்து, “நதிகளை மீட்போம்” பேரணியின் கொடி / விளம்பர அட்டையை வைத்துக்கொண்டு, கூட்டமாக பல ஆதரவாளர்கள் நகர்வலம் வந்திருக்கின்றனர். சத்குருவின் டி-ஷர்ட், பைக், ஏன் ஹெல்மெட்டிலும் கூட “Rally For Rivers” எழுதப்பட்டிருக்கிறது. பைக் முடித்து ஆட்டோவிலும் பேரணிக்கு ஆதரவு திரட்டும் சத்குரு!

Blore-4

Blore-6

Blore-1

Blore-7

Blore-8

Blore-9

Blore-27

Blore-11

Blore-23

Blore-12

Blore-13

Blore-14

Blore-24

Blore-28

Blore-15-small

Blore-26

Blore-25-s

ஆதரவாளர்களின் பேரணிப் பிரச்சார முயற்சிகள்

நாடு முழுவதும் ஆதரவாளர்கள் பலர் அவரவருக்குத் தெரிந்த வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் மக்களின் கவனத்தை ஈர்க்க புதிதுபுதிதாக முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

Blore-3

Blore-5-small

பேரணி நடைபெறும் இடம்

பொதுமக்கள் அமரும் இடம், இந்திய வரைபட அமைப்பிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அமர, அமர ஒரு அருமையான காட்சி நம் கண்முன் விரிய இருக்கிறது. முதல்வர் வருவதால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குழுமியுள்ளனர். தன்னார்வத் தொண்டர்கள் பலரும் சிரித்தமுகத்துடன் பங்கேற்பாளர்களை அமரும் இடத்திற்கு வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Blore-32

Blore-38

Blore-30

Blore-31

Blore-29

Blore-36

Blore-37

திட்டமிட்டு, இந்திய வரைபட அமைப்பிலே இருக்கைகள் அடுக்கப்பட்டுள்ளன. அதன் வான்வெளி நிழற்படம்:

Blore-91-small

இளைஞர்கள் மக்கள் வருகை

கல்லூரி மாணவர்கள் பலர் வந்திருக்கிறார்கள். பெரும் கொண்டாட்டமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. வருபவர்களில் பலர் “நதிகளை மீட்போம்” டி-ஷர்ட் அல்லது நீல நிற உடை அணிந்து வந்திருக்கிறார்கள்.

Blore-33

Blore-39

Blore-34

Blore-49

Blore-51

Blore-62

டொல்லு குனிதா – கிராமிய நடனக் கலை

நேற்றுபோல் இன்றும் டொல்லு குனிதா நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய வாசிப்பும் தாளமும் நேற்றையதை விட மிக வித்தியாசமாக இருந்தது. அவர்களின் மத்தள இசை அவ்விடத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

Blore-42

Blore-43

Blore-47

வாசு தீக்ஷித் மற்றும் அவரது சுவராத்மா குழு

Event-Rally-for-Rivers-at-Bengaluru-11

நதியைப் போற்றும் பாடல் ஒன்றை மிக உயிர்ப்போடு பாடி, அடுத்த பாட்டில் பங்கேற்பாளர்களையும் வாசு தீக்ஷித் ஈடுபடுத்தினார். மக்கள் மேலும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மக்கள் சேர்ந்து பாடும் வீடியோ

ரகு தீக்ஷித் “நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு

மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பத்மஸ்ரீ உஷா உதுப் அவர்கள்

பாடல் ஒவ்வொன்றும் சரவெடியாக வெளிவருவதால், பத்மஸ்ரீ உஷா உதுப் பாடுகின்ற இடத்தில் மக்கள் ஆர்ப்பரிப்பத்து உற்சாகத்தில் ஆழ்வது இயல்புதான். இன்றும் மக்கள் அவ்வாறே உள்ளனர். இந்த மாபெரும் பணியை ஏற்றுள்ள சத்குருவிற்கு, ஆழ்மனதில் இருந்து நன்றி தெரிவிக்கும் உஷா உதுப் அவர்கள், பாடும்போது “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டையைக் கையில் தூக்கிக் காண்பித்து இப்பேரணிக்கு மக்களின் ஆரவாரமான ஆதரவையும் வேண்டுகிறார்.

Blore-59

உஷா உதுப் அவர்களுடன் பாடும் நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்கள்

Blore-57

Blore-82

முதலமைச்சர், மற்ற சிறப்பு விருந்தினர்கள் வருகை

கர்நாடகத்தின் முதல்வர் மாண்புமிகு சித்தராமையா அவர்கள், நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.பி.பாட்டில் அவர்கள், பாரளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு அனந்த் குமார் அவர்கள், பாரளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சதானந்த கௌடா அவர்கள், மைசூர் மஹாராஜா உயர்திரு யடுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் அவர்கள், பிரபல கன்னட நடிகர் திரு. புனீத் ராஜ்குமார் அவர்கள், பெங்களூரு முன்னேற்றம் மற்றும் நகரமைப்புத் திட்டமிடல் அமைச்சர் மாண்புமிகு கே.ஜே.ஜார்ஜ் அவர்கள்

Blore-56

Blore-55

Blore-50

மற்ற பிரபலங்கள்

Blore-61

Blore-89

Blore-90

சின்னஞ்சிறு பிள்ளைகளின் ஈடுபாடு

Blore-44

Blore-45

Blore-46

Blore-74

25 கோடி மரங்களை நடுவதற்கு கர்நாடக அரசாங்கம் முடிவு!

karnataka- chief-minister

Blore-65

Blore-67

Blore-68

Blore-71

Blore-72

நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் அவர்கள் பேச்சு

Blore-73

இங்கு மூன்றாவது உலகப்போர் நடந்தால் அது நீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இன்று தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. இதற்குத் தீர்வு காண சத்குரு எடுத்திருக்கும் முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். ஏற்கெனவே கர்நாடகத்தில் நுண்ணிய பாசனமுறைகளை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறோம். சத்குருவின் வழிகாட்டுதலில் இன்னும் தேவையான செயல்களை நிச்சயம் செய்வோம்.

பாரளுமன்ற உறுப்பினர் சதானந்த கௌடா அவர்கள் பேச்சு

Blore-75

"இங்கு நான் ஒரு அமைச்சராக வரவில்லை, இப்பேரணிக்கு தளபதியாக வந்திருக்கிறேன். நம் நதிகளை நாம் மீட்டே ஆகவேண்டும். இதற்கு எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டும்" என்றார்

பாரளுமன்ற உறுப்பினர் அனந்த் குமார் அவர்கள் பேச்சு

Blore-76

இப்பேரணிக்காக உத்வேகத்தோடு செயல்படும் மனிதர்களை "நதி வீரர்கள்" என்றார் சத்குரு. அப்படியெனில், நானும் ஒரு "நதி வீரன்" தான். இப்பேரணிக்காக கடந்த ஒரு வாரத்தில் 1600 கிமீ கார் ஓட்டி 7 இடங்களில் நிகழ்ச்சி தொடர்ந்து செய்திருக்கிறாராம் சத்குரு. இங்கிருந்து கிளம்பி நாளை சென்னையில் பேரணியாம். எப்படித்தான் இத்தனை கடினமாக அவர் செயல்படுகிறாரோ... பிரமிப்பாய் இருக்கிறது. இவர் எடுத்துள்ளது மிகமிகப் பெரியதொரு செயல். அது வெற்றியடைய என் முழு ஒத்துழைப்பும் இருக்கும்.

நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்கள் பேச்சு

Blore-77

Blore-78

"இதுபற்றி நான் பேசுவதைவிட சத்குரு பேசுவதைக் கேட்கவே நான் வந்திருக்கிறேன். நதிகளை மீட்பது நம் பொறுப்பு. நாம் அனைவரும் இம்முயசிக்கு நம் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்." என்றார்.

மைசூர் மஹாராஜா உயர்திரு யடுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் அவர்கள் பேச்சு

Blore-79

சத்குரு பேசுவதைக் கேட்க நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பீர்கள் என்று தெரியும். நானும் அதேபோல்தான். எனினும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்: நம் வரலாறு, நமக்கென்று ஒரு கதை இருப்பது எல்லாமே நதிகள் இருந்ததால்தான். நதிகளைக் காப்பாற்றினால் நம்மையே நாமே காப்பாற்றிக் கொள்கிறோம் என்று பொருள். சத்குருவின் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று என் ஆழ்மனதில் இருந்து வாழ்த்துகிறேன்.

முதல்வர் சித்தராமையா அவர்கள் பேச்சு

Blore-80

Blore-81

சத்குரு இந்த மாபெரும் செயலை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு எங்கள் அரசாங்கத்தின் முழு ஆதரவு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி நதியின் நீரைக் குடித்து நாமெல்லாம் வளர்ந்திருக்கிறோம். அது அழிந்துவிடாமல் அதைப் பாதுகாப்பது நம் கடமை. நாம் நிறைய தண்ணீர் செலவு செய்கிறோம். ஆனால் அதை சேர்த்துவைப்பது பற்றி கவனம் செலுத்தவில்லை. சத்குரு அவர்கள் இப்பிரச்சினையையும், அதற்கான தீர்வையும் மிக ஆழமாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவருடன் இன்று நாம் கையெழுத்திட்டிருக்கும் உடன்படிக்கை ஒப்பந்தம் மூலம், அவருடைய வழிகாட்டுதலில் கர்நாடக மாநிலத்தில் 25 கோடி மரம் நட்டு வளர்க்கவுள்ளோம். அவரது முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

சத்குரு அவர்கள் பேச்சு

Blore-83

Blore-84

Blore-85

 • 25 வருடங்களுக்கு முன் இந்த முயற்சியை எடுத்திருந்தால், இப்போது தேவைப்படும் செயலில் 10% தான் தேவைப்பட்டிருக்கும். இதையே இன்னும் 25 வருடங்கள் கடத்தினால், இந்நிலையை சரிசெய்ய 100-150 ஆண்டுகள் ஆகலாம், சில சமயம் முழுமையாய் வெளிவர முடியாமலும்கூட போகலாம். இதுதான் நேரம். காலம் கடத்தாமல் நாம் செயலில் இறங்கியே ஆகவேண்டும்.
 • பெங்களூருவில் முன்பு 1000 ஏரிகளும் 3 நதிகளும் இருந்தனவாம். இன்று நதிகளைக் காணவில்லை. 1000ல் வெறும் 81 ஏரிகளே மீதமுள்ளன. மற்றவை கட்டிடங்களாகவோ, விளையாட்டுத் திடல்களாகவோ ஆகிவிட்டன. விளையாடுவது, படிப்பது, தொழில் எல்லாமே நமக்கு முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியமானவை இந்த மண்ணும் தண்ணீரும். அடிப்படையான இந்த இரண்டும் இல்லாமல், நாடு என்பதும் இல்லை.
 • வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கோடு மேடையில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மக்களுக்கு என்ன தேவையோ, அதை செய்துகொடுக்க நம் நாட்டின் அரசியல்வாதிகள் தயாராக உள்ளனர் என்பதற்கு இதுவே ஒரு சான்று. இப்போது நீங்கள்தான் உங்களுக்கு என்ன தேவை என்பதை மிக சப்தமாக அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்குத்தான் மிஸ்டு-கால் 80009 – 80009!
 • கரிமச்சத்து குறைந்து நம் வளமான மண், மணலாகிக் கொண்டிருக்கிறது. இதை இப்படியேவிட்டால், 3-5 வருடத்தில் 25% மண், மணலாகிவிடும்.
 • எல்லாம் மண்ணானால் என்ன? துபாய் போல் வாழ்ந்துவிட்டுப் போகிறோம் என்று வாதிடுவது பொருந்தாது. 130 கோடி மக்களுக்கு உணவும், தண்ணீரும் இறக்குமதி செய்து நாட்டை எப்படி நடத்துவது?
 • மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன். என்ன நதிகளில் நீரைக் காணும் என்று உடனே எட்டிப்பார்த்தால்… என்ன செய்வது? இது அப்படியெல்லாம் நடக்காது. இது பலன் தர 25-30 வருடங்கள் ஆகும், அதுவும் நாம் மிகத் தீவிரமாக செயல்பட்டால்!
 • நம் நாட்டின் பெரிய சாதனை, பெரிதாக தொழில்நுட்பம் எதுவுமே இல்லாமல், பாரம்பரிய முறையிலேயே நம் விவசாயிகள் 130 கோடி மக்களுக்கு உணவளிப்பது. ஆனால் இன்று அவர் உண்ண உணவில்லாமல் தற்கொலை செய்துகொள்வது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம். தக்காளி விலை குறைவு, வங்கிக்கடன் தொல்லையால் விவசாயிகள் இறக்கவில்லை. போதுமான தண்ணீர் இல்லை, மண்ணில் வளமையும் குறைந்துவிட்டது. விவசாயி நம்பியிருக்கும் மண்ணும், தண்ணியும் இல்லாமல், விவசாயம் செய்தால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியிருக்காது.
 • வேண்டுகோள்:
  • காலை, மதியம் விட்டுவிடுங்கள். இரவு உங்கள் தட்டில் உணவு இருக்கும்போது, உண்பதற்கு முன் 20 நொடிகள், முடியாவிட்டால் 10 நொடிகளேனும் கண்மூடி, உங்கள் தட்டில் இந்த உணவை வைத்த விவசாயி உண்ண உணவில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதை நினைத்துப் பாருங்கள். இது உங்களுக்குள் குற்றவுணர்ச்சியைக் கொண்டு வருவதற்கல்ல. உங்களுக்குள் மனிதநேயம் தலைதூக்குவதற்கு.
  • இப்பேரணி என்றால் 1 நாள் உணர்ச்சி பொங்கக் கத்திவிட்டு உற்சாகமாய் இருப்பதல்ல.
  • அடுத்த 30 நாட்களுக்கு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மிஸ்டுகால் கொடுக்கச் செய்யவேண்டும். அதற்கு அவர் கால்களில்கூட விழலாம். இன்னும் சில வருடங்களில் தண்ணீர் இன்றி தண்ணீருக்காக அடுத்தவரின் காலில் விழுவதற்கு, இன்றே மிஸ்டுகால் கொடுக்கச் சொல்லி அவர் காலில் விழலாம். பொறுப்புள்ள ஜனங்களாக இதை நாம் செய்தே ஆகவேண்டும்

  மாநில அளவில் “நதிகளை மீட்போம்” தலைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்கள்

  Blore-86

  விடைபெற்றுக் கிளம்புகிறார் சத்குரு

  மக்களிடம் விடைபெற்று சத்குரு சென்னைக்குக் கிளம்புகிறார். நாளை சென்னையில் இருந்து சந்திக்கிறோம்.
  Blore-87

  பெங்களூரு பேரணி - தொகுப்பு

 

பெங்களூரு பேரணி - முழு வீடியோ

 

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1