“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 5
“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணி இன்று பாண்டிச்சேரியிலிருந்து...
 
 

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.

இன்று பாண்டிச்சேரியில் இப்பேரணி நிகழ்கிறது. அதன் பதிவுகள் கீழே. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

செப்டம்பர் 7 - காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரை

நேரடி இணைய ஒளிபரப்பைக் காண: RallyForRivers.org/Tamil-Live

பாண்டிச்சேரியில் சத்குரு

pondy-24

பாண்டிச்சேரியில் ஏற்பாடுகள்

குழந்தைகளும் குதூகலமாக மக்களை வரவேற்று வருகின்றனர். இப்பேரணியில் உற்சாகமாகப் பங்கேற்கும் மக்களுடன் பாண்டிச்சேரி களைகட்டுகிறது.

Rally-for-Rivers-event-at-Pondicherry-8

pondy-9

pondy-58 (1)

pondy-3

இன்று பாண்டிச்சேரியில் போக்குவரத்தை சமாளிப்பதற்கு கல்லூரி மாணவர்கள் முன்வந்திருக்கின்றனர்.

pondy-10

Rally-for-Rivers-event-at-Pondicherry-13

pondy-56

pondy-57

பேரணிக்கு மக்கள் ஆதரவு

Pondicherry-for-Rally-for-Rivers-1

காரைக்கால், நெய்வேலி, சிதம்பரம் என புதுச்சேரியை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க இளைஞர்கள் பலர் வந்திருக்கின்றனர்.

pondy-63

pondy-67

pondy-28

pondy-16

pondy-54

ncc

பேரணிக்கு பள்ளி மாணவர்கள் ஆதரவு

Rally-for-Rivers-event-at-Pondicherry-26

Rally-for-Rivers-event-at-Pondicherry-6

pondy-53

சத்குருவை வரவேற்க ஏற்பாடுகள்

மாண்புமிகு புதுவை முதலமைச்சர் திரு.வி.நாராயணசாமி அவர்கள் விழா நடக்கும் இடத்திற்கு வந்தபின், சத்குருவிற்கு மலர்க்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

pondy-15

pondy-14

pondy-59

pondy-61

pondy-62

pondy-38

pondy-37

சிறப்பு விருந்தினர்கள் வருகை

Rally-for-Rivers-event-at-Pondicherry-18

Rally-for-Rivers-event-at-Pondicherry-25

pondy-23

மாண்புமிகு புதுவை முதலமைச்சர் திரு.வி.நாராயணசாமி அவர்கள், மதிப்பிற்குரிய பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஏ.நமசிவாயம் அவர்கள், மதிப்பிற்குரிய நலத்துறை அமைச்சர் திரு எம்.கந்தசாமி அவர்கள்

அமைச்சர்கள் பேச்சு

முதலாவதாக பேசிய அமைச்சர் திரு. கந்தசாமி அவர்கள், “நாம் நிதி சேர்க்கா விட்டாலும் நீரை சேர்க்கவேண்டும். எப்போதுமே யார் ஆரம்பிப்பது என்பதுதான் தடங்கலாக இருக்கும். இந்த முயற்சியை இப்போது சத்குரு ஆரம்பித்துவிட்டார். இது வெற்றியடைய வேண்டும்” என்றார்.

அடுத்ததாகப் பேசிய அமைச்சர் திரு. நமசிவாயம் அவர்கள், “நம் குழந்தைகளுக்கு பணம் சேர்த்துத் தருவதைவிட, நலமான இயற்கை சூழலைத் தருவதுதான் அவசியம். அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு. பொன்னும் பொருளும் அல்ல. எந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என்றாலும் பொதுமக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியம். உங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் இப்பேரணிக்கு அளித்து, இதை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார்.

pondy-29

முதலமைச்சர் அவர்கள் பேச்சு

“இயற்கையை நாம் வஞ்சித்தால், இயற்கையும் நம்மை வஞ்சித்துவிடும். நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் அரசியல் காரணங்களைத் தாண்டி, இந்தப் பணியில் ஈடுபட வேண்டும்” என்றார்.

pondy-64

சத்குரு அவர்கள் பேச்சு

கார் ஓட்டினா நீர் வந்துடுமா? ன்னு கேக்கறாங்க...

  • நம்ம நதிங்கள மீட்கறதுக்கு ஒரு திட்டப் பரிந்துரைய வல்லுநர்களோட உதவியோட உருவாக்கி இருக்கோம். இந்த திட்டப்படி நாம் மிகத் தீவிரமா செயல்பட்டா, இது பலன் கொடுக்கறதுக்கு 15-20 வருடங்க்கள் ஆகலாம். இதுக்கான பட்ஜெட்டும் ரொம்ப அதிகமா இருக்கும். இந்த மாதிரி ஒரு திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் எல்லாமே ஒத்துழைக்கனும். இந்த ஒத்துழைப்பு கிடைக்கதான், 16 மாநிலங்களுக்கும் நாம பயணம் செய்யறோம். "எனக்கு இது வேணும்" அப்படின்னு பெரும்பான்மையான மக்கள் உறுதியா குரல் கொடுத்தா, அதை அரசாங்கம் நிச்சயமா செயல்படுத்தும். அதுக்குதான் இந்த மிஸ்டு-கால் எல்லாம். ஒவ்வொரு மிஸ்டு-காலும் ஒரு வாக்குக்கு சமானம்.

நம்ம ஊர்ல 45 நாள்தான் மழை பெய்யும். அதை சரியான விதத்துல பிடிச்சுவெச்சு, வருடம் முழுவதும் நாம உபயோகிக்கனும். "நடந்தாய் வாழி காவேரி"ன்னு சொன்னாங்க. ஆறு ன்னா, அது நடக்கனும். நம்மளால பிடிக்கமுடியாத மாதிரி அது வேகமா ஓடினா, நமக்கு தண்ணி இருக்காது. அப்படின்னா அணை கட்டனுமா? நிச்சயம் கூடாது. நம்ம ஊர் மாதிரி சமநிலையான நிலப்பரப்புல அணை கட்டறது, இன்னும் மோசமான விளைவுகள உருவாக்கும். அதனால, மழை பெய்யும்போது, தண்ணி பூமிக்குள்ள போய் நிலத்தடி நீர்மட்டத்த உயர்த்தனும். இதுக்கு நிறைய காடுகள உருவாக்கறது அவசியம்.

நம்ம நாட்டுல நீர்நிலைகள்ல இருக்கற தண்ணில 84% விவசாய நீர்பாசனத்துக்கு செலவாகுது. மற்ற நாடுகள்ல அதே அளவு பயிர் செய்ய, இதுல 10-15% தான் தண்ணி தேவை. ஏன்னா, நம்ம நிலத்துக்கு ஏத்த விதமான பயிர்களையும், சரியான நீர் பாசன முறைகளையும் நாம பின்பற்றல. அதோட நம்ம நிலம் வளமா இருக்கனும்னா அதுக்கு கரிமசத்து 2% இருக்கறது ரொம்ப முக்கியம். இப்போ வெறும் 0.05% தான் இருக்கு. ஏன்னா கரிமசத்து, மரத்தோட இலை, ஆடு/மாடு சாணத்துல இருந்து வருது. எப்பவோ மரம் இல்லாம செய்துட்டோம், இப்ப ஆடு/மாடுகள் எல்லாம் வெளிநாட்டுக்கு போகுது. ஆடு/மாடு எல்லாமே நம்ம மண். அதை வெளியேத்துனா, வளமான மண்ணுக்கு பதிலா மணல்தான் இருக்கும்.

இங்க ஃப்ரென்சு கூட்டறவு அதிகம். நீர் அமைப்பு நிர்வாகத்துல ஃப்ரான்சு நாடு சிறந்த வல்லுநர்களா இருக்காங்க. அதனால புதுவை மாநிலத்துல இந்த திட்டப்பரிந்துரைய செயல்படுத்தி, இது வேலைசெய்யும் அப்படிங்கறத மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டா காண்பிக்கலாம்.

Pondicherry-for-Rally-for-Rivers-6

pondy-65

திரு.வி.பி.சிவகொழுந்து அவர்கள் சத்குருவிற்கு மரியாதை செய்கிறார்

புதுச்சேரியின் சட்டப் பேரவைத் துணைத் தலைவர், மதிப்பிற்குரிய திரு.வி.பி.சிவகொழுந்து அவர்கள் சத்குருவிற்கு பொன்னாடை போர்த்தி, பேரணி வெற்றிபெற வாழ்த்துகிறார்.

pondy-42

“நதிகளை மீட்போம்” போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிறுவர்கள்

Rally-for-Rivers-event-at-Pondicherry-2

Rally-for-Rivers-event-at-Pondicherry-36

Rally-for-Rivers-event-at-Pondicherry-37

pondy-44

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு

WhatsApp-Image-2017-09-07-at-08.54.45

விடைபெற்றுக் கிளம்பும் சத்குரு

pondy-45

WhatsApp-Image-2017-09-07-at-12.40.53

pondy-66

pondy-39

Rally-for-Rivers-event-at-Pondicherry-41

உணவகத்தில் சுவாரஸ்யம்

உணவை முடித்துவிட்டு வெளியே வந்தபோது, ஆரோவில்லைச் சேர்ந்த லூகா பல்தேசி என்பவரை முதல்முறையாகச் சந்தித்தார் சத்குரு. சாதாரணமாகத் துவங்கிய உரையாடல், அப்படி-இப்படி சுற்றி, லூகா அவர்களின் பைக்கில் சென்று முடிந்தது. அது ஒரு 1000 cc-பைக். அந்த பைக்கைப் பிடித்துப் பார்த்து, அதைப் பற்றி பேசிவிட்டு, மாலை கோபிசெட்டிபாளையத்தில் நடக்கவிருக்கும் பேரணிக்காக காரில் ஏறிக் கிளம்புகிறார் சத்குரு.

pondy-47

pondy-48

pondy-82

pondy-50

pondy-46

கள்ளக்குறிச்சி அருகே மக்கள் திரள்

கள்ளக்குறிச்சி அருகே, சத்குருவை சந்தித்து பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க நெடுஞ்சாலையில் காத்திருக்கும் மக்கள். நீல நிற உடையில், மதிய வேளையில், வெயிலைப் பொருட்படுத்தாது இவர்கள் காத்திருக்கிறார்கள்.

pondy-68

pondy-69-small

pondy-70-small

pondy-71

கள்ளக்குறிச்சி அருகே மக்கள் திரள்

வழியில் திரண்ட மக்களுடன் பேசும் சத்குரு

கள்ளக்குறிச்சி அருகே தன்னை சந்திக்கக் காத்திருந்த மக்களிடம் சில நிமிடங்கள் பேசுகிறார் சத்குரு. “30 நாளும் நதிகளை மீட்போம் விளம்பர அட்டைகளுடன் எப்போதும் இருக்கவேண்டும், ஒவ்வொருவரும் 100 பேரை மிஸ்டு கால் கொடுக்கச் செய்யவேண்டும். செய்வீர்களா?” என்று சத்குரு கேட்க அனைவரும் ஆரவாரமாக செய்வோம் எங்கின்றனர்.

சின்ன சேலத்தில் காத்திருக்கும் மக்கள்

இங்கும்கூட தங்கள் ஊரில் ஒரு காலத்தில் ஓடிய தீர்த்தவரம் நதி பற்றிக் கூறி வருத்தத்தில் ஆழ்கின்றனர் மக்கள். கல்வராயன் மலையில் தோன்றி சின்ன-சேலம், விருத்தாச்சலம், கடலூர் வழியாக கடலில் சேரும் இந்நதி இப்போது ஓடுவதில்லை. “நதிகளை மீட்போம்” பேரணிக்கு எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. சத்குருவைக் காணவே காத்திருக்கிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

pondy-72

ஆத்தூர் பள்ளி மாணவர்கள்

ஆத்தூரில் உள்ள மாருதி க்ரூப்பின் கல்வி அமைப்புகள் இப்பேரணிக்கு முழு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சத்குரு வரும் வழியில் அவரைப் பார்ப்பதற்கு, "நதிகளை மீட்போம்" விளம்பர அட்டைகளுடன் அப்பள்ளியின் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளியின் வெளியே அணிவகுத்து நிற்கின்றனர்.

pondy-73

pondy-74

pondy-75

pondy-77

pondy-76

pondy-86

pondy-85

pondy-84

pondy-83

pondy-81

pondy-79

pondy-78

WhatsApp Image 2017-09-07 at 8.45.08 PM

மற்றுமொரு பள்ளியில் இருந்து சிறுவர்கள்

வழியில் சந்திக்கும் மக்களும், பள்ளி மாணவ-மாணவியரும் சத்குருவிற்கு பெருமிதத்தோடு நன்றி சொல்கின்றனர்.

pondy-88

pondy-87

pondy-89

ஈஷா வித்யா பள்ளி மாணவி

விழுப்புரம் ஈஷா வித்யா பள்ளி மாணவி ஒருவர், மிகவும் பெருமிதத்தோடு சத்குருவிற்கு தம் நன்றியைப் பதிவு செய்கிறார்!

சத்குருவிற்காக காத்திருக்கும் மழலைச் செல்வங்கள்

முக்தா, லேகாஸ்ரீ, யுவன் கிருஷ்ணா என்ற 3 சின்னஞ்சிறு குழந்தைகளும் சத்குருவைப் பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து, தங்கள் பெற்றோருடன் தர்மபுரியில் இருந்து சேலம் வரை வந்திருக்கின்றனராம். இதில் “முக்தா” என்பவருக்கு சத்குருதான் பேர் வைத்தாராம்.

pondy-81-1

pondy-82-1

pondy-83-1

சேலத்தில் சத்குருவை வரவேற்கும் மக்கள்

சேலத்தில் ஒரு சிறு ஹாலில் 500 க்கும் மேற்பட்டவர்கள் சத்குருவைக் காண கூடியிருந்தனர். இப்பேரணியில் பயணிப்பவர்களுக்கு பதார்த்தங்களும் கொண்டுவந்திருந்தனர். உள்ளே நுழைந்ததும் உற்சாகமான ஆரவாரத்துடன் இவர்களை வரவேற்றனர். அவ்விடத்தின் சூழலே பெரும் கொண்டாட்டமாக மாறிப்போனது.

pondy-86-1

pondy-85-1

pondy-84-1

pondy-87-1

pondy-88-1

pondy-89-1

பவானியில் கல்லூரி மாணவர்கள்

எக்செல் கல்வி குழுமத்தின் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் பிரிவில் பயிலும் 400 மாணவர்கள், சத்குரு வரும் வழியில் இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அணிவகுத்து நிற்கின்றனர்.

pondy-91-small

pondy-92

pondy-95

வறண்டு காணப்படும் அகண்ட காவிரி

பவானி அருகில் காவிரி நதியை, அகண்ட காவிரி என்பர். இப்போது அகலம் முழுவதும் காய்ந்துபோய், நடுவில் ஆங்காங்கே சிறு குட்டைகள் போல் அது தென்படுகிறது.

கல்லூரி மாணவியர் அணிவகுப்பு

பவானி அருகே ஜெ.கே.கே.முனிராஜா குழுமத்தின் கல்வி ஸ்தாபனத்தில் பயிலும் மாணவிகள், சத்குரு வரும் வழியில் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து அணிவகுத்து நிற்கின்றனர்.

pondy-94

வழியில் மற்றுமொரு இடத்தில் மக்களை சந்திக்கிறார் சத்குரு

pondy-97

கோபிசெட்டிபாளையத்தில் சத்குரு

கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக லிங்கபைரவி கோவில் ஒன்றை சத்குரு அவர்கள் செப்-20 அன்று பிரதிஷ்டை செய்ய உள்ளார். இன்று அவ்விடத்திற்கு வந்து அங்கும் மக்களைச் சந்தித்தார். 500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தார்கள். “எத்தனை தீர்வுகளைச் சொன்னாலும், அதில் ஒரு பிரச்சினையைக் கண்டுபிடிப்பதையே சிலர் வேலையாகக் கொண்டுள்ளனர். அதை விட்டுவிட்டு, வரும் பிரச்சினைகளை அவ்வப்போது சந்தித்து சரிசெய்யலாம்” என்றார். பின் அங்கு ஒரு வேப்ப மரக்கன்றை நடவுசெய்து, மக்களிடம் விடைபெற்று, மைசூருக்குக் கிளம்பினார். நாளை மைசூரிலிருந்து சந்திப்போம்!

pondy-106-small

pondy-98

pondy-99

pondy-100

pondy-101

pondy-102

pondy-103

pondy-107

pondy-104

pondy-108-small

pondy-105-small

பாண்டிச்சேரி பேரணி - தொகுப்பு

 

பாண்டிச்சேரி பேரணி - முழு வீடியோ

 

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1