26வது நாள். 11வது மாநிலம் – ராஜஸ்தான். 7500 கி.மீ தாண்டியாயிற்று. பரத்பூர் துவங்கி ஜெய்பூர் வரை அனைத்து இடங்களிலும் “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டைகளைப் பார்க்க முடிகிறது. அனைத்தும் நன்றாகக் கூடிவருகிறது.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

முஸ்லீம் இயக்கங்கள் பேரணிக்கு முழு ஆதரவு தெரிவித்திருக்கின்றன

அஜ்மீர் சூஃபி தர்கா ஷரீஃப் மற்றும் அனைத்து இந்திய உலேமா – மஷைக் மன்றம் நம் பேரணிக்கு முழு ஆதரவு தெரிவித்து அவர்கள் பத்திரிக்கைகளில் மக்களின் முழு ஆதரவு வேண்டி இருக்கிறார்கள்.

jaipur-3

ஜெய்பூர் ஏற்பாடுகள்

jaipur-4-1   jaipur-5

jaipur-6

நிரம்பிவிட்ட உள்ளரங்கம்

பேரணி நடக்கும் “ஜெய்பூர் எஃஸ்சிபிஷன் மற்றும் கன்வென்ஷன் சென்டர்” அரங்கத்தில் 10,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கின்றனர். அரங்கம் நிரம்பியும், மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

jaipur-8-1   jaipur-9-1

jaipur-10
jaipur-16

வீடியோ:

விழா ஆரம்பிக்கும் முன், இருக்கைகள் நிரம்பிய உள்ளரங்கம்:

விழா நடக்கும்போது, தரையிலும் அமர்ந்து விழாவில் பங்கேற்ற மக்கள்:

சிறப்பு விருந்தினர்கள்

jaipur-27-1

jaipur-28-1

jaipur-36-1

jaipur-13

  • முதல்வர் திருமதி. வசுந்தரா ராஜே அவர்கள்
  • ஜோத்பூர் மஹாராஜா உயர்திரு கஜ் சிங் அவர்கள்
  • தலைமைச் செயலாளர் மாண்புமிகு அஷோக் ஜெயின் அவர்கள்
  • கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்தி ராஜ் அமைச்சர் மாண்புமிகு ராஜேந்திர ராத்தோர் அவர்கள்
  • நகர மேம்பாடு மற்றும் வீட்டுவாரிய அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீசந் க்ரிப்லானி அவர்கள்
  • ராஜஸ்தான் மாநில ஆறுகள் வடிநிலம் மற்றும் நீர்வளத் திட்டமிடல் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீராம் வெடிரே அவர்கள்

இசை நிகழ்ச்சிகள்

Rally-for-Rivers-Event-at-Jaipur-7

Rally-for-Rivers-Event-at-Jaipur-28

Rally-for-Rivers-Event-at-Jaipur-30

Rally-for-Rivers-Event-at-Jaipur-6

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று இசை நிகழ்ச்சி வழங்கியோர்:

  • திரு.கௌரவ் பட் மற்றும் குழு
  • திரு.மாமே கான் மற்றும் குழு
  • ராஜஸ்தான் ரூட்ஸ்
  • நம் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா

கொல்கத்தாவின் மணல் ஓவியர், திரு. படல் பராய் அவர்களும் இன்று நீர் காக்க வேண்டிய அவசியத்தை மணலில் வரைந்து விளக்கினார்.

சத்குரு அவர்கள் பேச்சு

jaipur-29

jaipur-30-1

jaipur-31-1

சத்குரு கூறியதாவது:

  • இப்போது பிரச்சினை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதற்கான தீர்வு என்ன என்பதும் தெரியும். ஆனால் யார் அதைச் செயல்படுத்துவது என்பதுதான் கேள்வி.
  • இதற்கான தீர்வை போர்கால அடிப்படையில் நாம் செயல்படுத்த வேண்டும். அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். இப்போது உடனடியாக இத்தீர்வை செயல்படுத்தத் தவறினால், பின் நிலையை மாற்றுவதற்கு 100-150 ஆண்டுகால தீவிர முயற்சி வேண்டியிருக்கும்.
  • நீர் வளத்தைக் காக்க ராஜஸ்தானில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் முயற்சிகள் மிகச் சரியானவை. அதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.
  • ஆனால் அதைச் செயல்படுத்தும் வேகம் போதாது. இன்னும் 10 மடங்கு வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
  • இத்திட்டத்தை 8-10 வருடங்களில் அல்ல, அடுத்த 2-3 வருடங்களில் நீங்கள் முடித்தால், 5-7 ஆண்டுகளிலேயே பிரமாதமான முன்னேற்றத்தைக் காணலாம்.
  • இதை வருங்காலத்திற்கு பரிசென்று நினைக்காமல், நம் வாழ்நாளில் பார்க்கவேண்டும் என்று செயல்படுத்துங்கள்.
  • “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையை அமல்படுத்துவது அத்தனை எளிதல்ல. அதில் நிறைய சட்டரீதியான, நிர்வாகம், செயல்படுத்துதல் சார்ந்த சிக்கல்கள் உள்ளது.
  • அதையெல்லாம் சந்தித்து இத்திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டுமென்றால், மக்கள் ஒரே குரலாய், சப்தமாக “இது எங்களுக்கு வேண்டும்” என்று சொல்லவேண்டும்.
  • ராஜஸ்தானில் திட்டங்களை செயல்படுத்த ஏன் தாமதமாகிறது என்று கேட்டால், திட்டத்தைச் செயல்படுத்த தேவையான அளவிற்கு மனிதர்கள் இல்லை என்கிறார்கள். நம் நாட்டில் இதற்கு குறைபாடு வரலாமா?
  • அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு எனக்கு ராஜஸ்தானில் இருந்து 100 இளைஞர்கள் வேண்டும். நம் நாட்டிற்கும், வருங்கால தலைமுறைகளுக்கும் நாம் செய்யவேண்டிய அதிமுக்கியமான பணியை செயல்படுத்துவதற்கு. வருவீர்களா?

நீங்கள் செய்யவேண்டிய 3 விஷயங்கள்:

  1. நீங்கள் மிஸ்டு-கால் கொடுக்கவேண்டும்.
  2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் மிஸ்டு-கால் கொடுக்கச் செய்யவேண்டும்.
  3. உங்களுக்குத் தெரியாதவர்களையும் மிஸ்டு-கால் கொடுக்கச் செய்யவேண்டும்.

ஆறுகள் குன்றாத புகழோடு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஓடவேண்டும்:

  • இதுதான் நம் நாட்டின் வரலாற்றிலே நமக்கான நேரம்.
  • 50 ஆண்டுகளுக்கு முன் நம் நாடு முழுவதையும் என் மோட்டார் சைக்கிளிலே நான் வலம் வந்தேன். ஒவ்வோர் ஊரிலும் பிரம்மாண்டமாக ஓடிய நதியின் கரையில்தான் இரவுநேரத்தில் நான் தூங்கி எழுந்தேன்.
  • அந்த ஆறுகளின் பெயர்கூட எனக்குத் தெரியாது. ஆனால் அவற்றின் கரையிலே, அதன் நீரோட்டத்திலே “இது என் வீடு” என்பது போன்ற உணர்வில் திளைத்திருக்கிறேன்.
  • அடுத்த 25 ஆண்டுகளில் அந்த ஆறுகள் அதேபோல் நிரம்பிய நீரோட்டத்துடன் ஓடவேண்டும். இதுதான் நம் வருங்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் பரிசு.
  • இதை நிகழச்செய்வோம் வாருங்கள்.

முதல்வர் திருமதி. வசுந்தரா ராஜே அவர்கள் பேச்சு

jaipur-33-1

30 வருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை எங்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தப் பேரணியை நீங்கள் மேற்கொண்டுள்ளது எங்களுக்குக் கிடைத்த வரம் போல். என் சார்பாகவும், என் மக்கள் சார்பாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் முழுமனதாக உங்களுடன் சேர்ந்து நிற்கிறோம். நதிகளை மீட்பதும், நீர்நிலைகளைக் காப்பதும் வெறும் அரசாங்க வேலை அல்ல. இது எங்கள் வாழ்வின் நோக்கம்.

பேரணிக்கு ஆதரவு

Rally-for-Rivers-Event-at-Jaipur-35

முழு உத்வேகத்துடன் ராஜஸ்தான் ஆதரவாளர்கள்

Rally-for-Rivers-Event-at-Jaipur-37

கடந்த ஒரு மாத காலமாக இப்பேரணிக்கு ஆதரவு திரட்டி வரும் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன், முழு உத்வேகத்துடன் சத்குருவிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்.

வீடியோ:

தனஞ்ஜய்:

கடந்த 3 மாதங்களாக நாம் இப்பேரணிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ரயில், கோவில் என போகும் இடங்களில் பொதுமக்களிடம் பேசி மிஸ்டு-கால் கொடுக்கச் சொல்கிறேன். அவர்கள் மிஸ்டு-கால் கொடுப்பதோடு, நான் நல்லதொரு காரியம் செய்கிறேன் என்று என்னை வாழ்த்துகிறார்கள்.

அனுப் முத்கல்:

மிகவும் பயந்து பயந்து ஒரு பள்ளியில் மாணவர்களிடம் முதல்முறை இதுபற்றி பேசினேன், சத்குருவின் வீடியோவை போட்டுக் காண்பித்து. அவர்களின் ஈடுபாட்டை கண்டவுடன், அடுத்தடுத்து 20 பள்ளிகளில் இதை செயல்படுத்தி இருக்கிறேன். உள்ளுக்குள் புதுவித சக்தி பிறக்கிறது. சந்தோஷமாக உள்ளது.

அமித்:

கடந்த 2 மாதங்களாக இதே வேலையாக சுற்றுகிறேன். ஒரு பார்க் விடுவதில்லை, ஒரு பொது இடம் விடுவதில்லை. எல்லா இடத்திலும் இப்பேரணி பற்றிப் பேசிவிடுவோம். இன்று இங்கு வந்திருக்கும் கூட்டத்தைப் பார்க்க மிக சந்தோஷமாக உள்ளது. சத்குருவைப் பார்க்கும்போது இன்னும் சந்தோஷமாக உள்ளது. உள்ளுக்குள் உத்வேகம் அதிகரிக்கிறது. இப்பேரணிக்காக சத்குரு என்ன செய்யவேண்டும் என்று சொன்னாலும், அதைச் செய்வதற்கு காத்திருக்கிறோம்.

விஷ்ணுகுமார் ஷர்மா:

என் நண்பன் சத்குரு பற்றி என்னிடம் கூறினான். இதுபற்றி எனக்குத் தெரிந்தபோது, செப்-3 சத்குரு இப்பேரணியைத் துவங்கிய நாளில் இருந்து இங்கு நானும் எனது பைக்கில் இப்பேரணிக்கு ஆதரவு திரட்டி வருகிறேன். 60 வயதில் சத்குரு நமக்காக இவ்வளவு பெரிய முயற்சியை எடுப்பது மாபெரும் விஷயம்.

நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருக்கிறோம். இது உங்கள் கனவு, எங்கள் கனவும் கூட. இது நிறைவேற நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்.

ஜெய்பூரில் இருந்து சண்டிகருக்கு சென்று கொண்டிருக்கிறோம்

பாலைவன மாநிலத்திலும் ஆங்காங்கே தென்படும் பசுமை…

jaipur-21-1   jaipur-22-1

jaipur-23-1

ராஜஸ்தான் – உங்கள் கண்முன்னே

பழங்காலக் கோட்டைகள், இக்கால குகைப் பாதைகள்

jaipur-24   jaipur-25

வீடியோ:

பேரணியில் முதல்முறையாக…

...எங்கள் பேருந்து சத்குருவை ஓவர்டேக் செய்கிறது. என்ன ஒரு நிமிடம்! சத்குருவின் வாகனத்தொடரணியில் ஒவ்வொரு காராக தாண்டினோம். சத்குருவின் கார் தென்பட்டது. பேருந்தில் எல்லோரும் மூச்சைப் படித்துக் காத்திருந்தோம். அந்த நொடியும் வந்தது. சத்குருவின் காரை ஓவர்டேக் செய்துவிட்டோம்!!! எங்களுக்கு குதூகலம் தாளவில்லை!

பத்தே நிமிடங்கள்தான்…

...மீண்டும் சத்குருவும் அவரது வாகனத்தொடரணியும் எங்களை ஓவர்டேக் செய்து தாண்டிச் சென்றனர்!

ஹரியானாவின் பானிபட் வந்தடைந்தோம்

வழியில் எங்கும் நில்லாமல் 11 மணியளவில் ஹரியானாவின் பானிபட் வந்தடைந்தோம். சத்குருவைக் காண இந்நேரத்திலும் மக்கள் காத்திருக்கின்றனர். நாளை காலை 11 மணிக்கு
சண்டிகர் தாகூர் உள்ளரங்கத்தில் பேரணி நடைபெறவுள்ளது.

jaipur-34   jaipur-35

jaipur-36-1

jaipur-37

jaipur-38-1

பேரணி எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கும் கட்டிட-உயர விளம்பரப் படம்

jaipur-39-1

வீடியோ:

நிஜமாகவே இரவு 11 மணிதானா..?

ஜெய்பூர் பேரணி - முழு வீடியோ