இன்று காலை லக்னோவில் இருந்து கிளம்பி, ராஜஸ்தானின் ஜெய்பூருக்கு, ஆக்ரா, பாரத் வழியாகப் பயணிக்கிறோம்.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

வெயில் என்றாலும், மழை என்றாலும்…

வெயில் என்றாலும், மழை என்றாலும் “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டைதான் அடுத்த 30 நாளுக்கு என்று கிளம்புகையில் சத்குரு கூறினாரே… கடைபிடித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ இக்குழந்தை செய்கிறது!

lcknw-to-jaipur-1

செல்லும் வழியில் கங்கை நதி

லக்னோ-ஆக்ரா அதிவிரைவு நெடுஞ்சாலை

பஸ்ஸில் செல்லும் எங்களை தாண்டிச் செல்கிறது சத்குருவின் கார்

கையசைத்து சிரித்துக் கொண்டே வேகமாக தாண்டிச் செல்கிறார்.

lcknw-to-jaipur-2

லாரி டிரைவர்களுடன் சத்குரு

lcknw-to-jaipur-3

கான்பூரில் பி.எஸ்.ஐ.டி கல்லூரியில் மாணவர்களை சந்தித்துவிட்டு லக்னோ வரும் வழியில் நடுவில் ஓரிடத்தில் நின்றோம். அங்கிருந்த லாரி டிரைவர்களுடன் சத்குரு உரையாடிய வீடியோ, மற்றும் அவர்களில் ஒருவரின் பகிர்வு.

சத்குருவுடன் உரையாடல்:

முதல் நபர்: நீங்கள் செய்வது மிகப் பெரிய வேலை…

சத்குரு: பழங்காலத்தில் இருந்து நதிகள்தான் நம்மை ஒரு நாடாக கட்டி வைத்திருந்தது. ஆனால் இப்போது நாட்டின் பல பகுதிகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம், நதிகளில் தண்ணீர் வற்றிக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் நபர்: இப்போது கங்கையில் நீர் சுத்தமாக வற்றிவிட்டது.

சத்குரு: நம் இருவருக்கும் சேர்த்து ஒரேவொரு டம்ளர்தான் தண்ணீர் இருக்கிறது என்றால், நமக்குள் சண்டை வருமா? வராதா? நிச்சயம் சண்டை வரும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதல் நபர்: ஆமாம், தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினை. நீங்கள் சொல்வது சரிதான். உத்திரப்பிரதேசத்தைவிட இப்பிரச்சினை பஞ்சாப்பில் மிக அதிகமாக உள்ளது. 3 வருஷத்துக்கு முன்னால் 60-80 அடி ஆழத்தில் நீர் இருக்கும். இப்போது 150 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

சத்குரு: இதற்குத் தீர்வு உள்ளது. அதை செயல்படுத்தத்தான் “நதிகளை மீட்போம்” பேரணி.

முதல் நபர்: ரொம்ப நல்லது. நீங்கள் மிகமிக நல்ல விஷயம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

சத்குரு: நீங்கள் ஒரு மிஸ்டு-கால் கொடுத்தால், பிரச்சினை தீர்ந்துவிடாது. பஞ்சாப் முழுவதும் மிஸ்டு-கால் கொடுக்க வேண்டும்.

முதல் நபர்: நிச்சயமாக. என் கிராமம் முழுவதையும் மிஸ்டு-கால் கொடுக்கச் சொல்கிறேன்.
(லாரி ஓட்டிப் பார்க்கிறீர்களா? – என்னிடம் அதற்கு லைசென்ஸ் இல்லையே – அதனால் என்ன? சும்மா இங்கேயே ஓட்டிப் பாருங்க – இது என்னது? எல்லாம் ஆட்டோமேடிக் ஆயிடுச்சா? – மாசத்துக்கு 2 தடவை இந்தப்பக்கம் வந்திடுவேன் – தென்னிந்தியா வர்றதில்லையா? – தென்னிந்தியாவுக்கா… சரி,வர்றேன் )
 

 
இரண்டாம் நபரின் பகிர்வு:

சத்குருவிடம் பேசிக் கொண்டிருந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு தூரத்தில் இருந்து அவரே கார் ஓட்டிக் கொண்டு வந்து எங்களுக்காக இத்தனை பெரிய விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார். எல்லாரும் 80009-80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள். பலரும் இதற்கு ஆதரவு அளித்து, மத்திய அரசாங்கம் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, நம் ஆறுகளில் சீக்கிரம் நீரோட வேண்டும் என்பதே என் விருப்பம். சத்குரு… அவர் எவ்வளவு பெரிய மனிதர், ஆனால் இத்தனை சாதாரணமாக, அன்பாக எங்களோடு பேசியது எனக்கு மிகவும் சந்தோஷம்.
 

 

லக்னோ- ஆக்ரா அதிவிரைவு நெடுஞ்சாலையில் இருந்து சத்குரு…

வீடியோவில் சத்குரு சொல்வதாவது:

  • கடந்த 24 மணி நேரங்களாக லக்னோவில் இருந்தோம். இங்கு வரவேற்பும், பேரணிக்கு ஆதரவும் மிக அற்புதமாக இருந்தது.
  • இதோ பிரம்மாண்டமான கங்கையின் முன் நிற்கிறோம். மலைகளிலே மழை பெய்கிறது போல. தண்ணீர் செம்மண் நிறமாக உள்ளது. ஆனால் அது ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது.
  • இதுவரை 7100 கி.மீ பயணித்துள்ளோம். டில்லிக்குச் செல்லும்போது 9500-9600 கி.மீ பயணித்திருப்போம் என்று நினைக்கிறேன். இதுவரை 120 நிகழ்ச்சிகள், எண்ணற்ற நேர்காணல்கள் நடந்திருக்கிறது.
  • நாட்டின் இப்பகுதியிலும் ஊடக நண்பர்கள் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள். மக்கள் பலரும் முழு உத்வேகத்துடன் இதற்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
  • இது என்னைப் பற்றியோ, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பற்றியோ, அரசியல் பற்றியோ அல்ல. இது ஆறுகள் பற்றி, நம் வாழ்க்கை பற்றி, நம் பூமியின் எதிர்காலம், நம் எதிர்கால சந்ததியினர் பற்றி. அதனால் எல்லோரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
  • இன்னும் சில நாட்களில் இப்பயணம் முடிவிற்கு வருகிறது. பெருமளவில் இது வெற்றிபெற வழி செய்யுங்கள்.
  • நதிகளை மீட்டு, அவை நிலையாய் ஓடுவதற்கு வழி செய்து, அவற்றை வணங்கிப் பாதுகாப்பது நம் தேசத்தின் கலாச்சாரமாகவும், சட்டமாகவும் ஆகவேண்டும்.
  • அவரவர் விருப்பப்படி அவற்றை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் மறையவேண்டும். பயன்படுத்தவே கூடாது என்றில்லை – பயன்படுத்தலாம், ஆனால் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அவற்றை அழித்துவிடாமல்.
  • அழகான இந்த கங்கை நதி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடியதுபோலவே இனியும் தொடர்ந்து, மகத்துவம் குறையாது ஓடவேண்டும்.
  • ஒரு தலைமுறையாக நாம் செய்ய நினைப்பது இதுதான். நம் நதிகள் ஓடவேண்டும்.

ராஜஸ்தான் வந்துவிட்டோம்!

பாரத்பூரில் உள்ள “லக்ஷ்மிவிலாஸ் பேலஸ்” – பாரம்பரிய ஹோட்டலாக பராமரிக்கப்படும் பழங்காலத்து அரண்மனை. எங்களுக்கு மதிய உணவு இங்கு வழங்கப்பட்டது. இவ்விடத்தின் நிர்வாகம் நம் பேரணிக்கு முழு ஆதரவு அளித்திருக்கிறது.

lcknw-to-jaipur-7

lcknw-to-jaipur-8   lcknw-to-jaipur-11

lcknw-to-jaipur-9

எங்களுக்கு வரவேற்பு

ராஜஸ்தான் கிராமிய பாடல் கலைஞர்களின் இசை, கிராமியக் கலைகளுக்கே உரிய பாணியில் எங்களை வசீகரித்தது. அவர்களுடன், அவர்கள் பாட்டிற்கு இசைத்து மகிழும் நம் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழு.

lcknw-to-jaipur-5   lcknw-to-jaipur-10

வீடியோ:

பகிர்வு:

முதலில் மார்வாரி மொழியில் பேசியவர், பின் எங்களுக்காக உடைந்த ஆங்கிலத்தில் பகிர்ந்ததாவது, “நான் மிஸ்டு-கால் கொடுத்துவிட்டேன். என் நண்பர்களையும் கொடுக்கச் சொல்லி, என் குடும்பத்தினரையும் கொடுக்கச் செய்தேன். இது மிகப் பெரிய விஷயம். இதை செய்வதற்கு மிக்க நன்றி. எனக்கு தண்ணீர் மிகவும் பிடிக்கும். அதை நாம் காக்க வேண்டும்”

ராஜஸ்தான் பற்றி சத்குரு

சத்குரு சொல்வதாவது:

ராஜஸ்தானில் நுழைகிறேன் – 7338 கி.மீ. இந்தியாவின் பாலைவன மாநிலம். ராஜஸ்தான் என்றால், ராஜாக்களின் ஊர் என்று பொருள். இந்நிலத்தில் பற்பல அரசர்கள் இருந்தனர். இந்தியாவின் மேற்கு மூலையில் இருக்கும் ராஜஸ்தான் மிகவும் வண்ணமயமான ஊர். இங்கு பெரும்பாலும் மண்ணே சூழ்ந்துள்ளதால், வண்ணமயமான உடை, இசை, கலாச்சாரம், காரசாரமான உணவு என இவர்களே இவ்விடத்தை வண்ணமயமாக மாற்றியுள்ளனர். பாரத்பூரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்மை வரவேற்க அங்கு காத்திருக்கிறார்கள். மாலையில் ஜெய்பூரை அடைந்துவிடுவோம்.

ராஜஸ்தான் காட்சிகள்

lcknw-to-jaipur-14   lcknw-to-jaipur-15

lcknw-to-jaipur-12   lcknw-to-jaipur-13

ஜெய்பூரில் வரவேற்பு

ராஜஸ்தான் முதல்வர் திருமதி.வசுந்தரா ராஜே அவர்கள் ஜெய்பூரில் சத்குருவை வரவேற்கிறார். இங்கு ராஜஸ்தான் கிராமியக் கலைஞர்களின் இதமான இசை நிகழ்ச்சியும், அருமையான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்பின் நம் ஆதரவாளர்களை சத்குரு தனியே சந்திக்கவிருக்கிறார்.

மேலும் சில தகவல்கள் வர உள்ளன. தொடர்ந்து காண்க.