இன்று காலை 9:30 மணிக்கு லக்னோவில் பேரணி. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

அரங்கத்தில் மக்கள், மாணவர்கள்

lucknow-5   lucknow-19
lucknow-7   lucknow-14

lucknow-6
lucknow-20

lucknow-12

நதிகளைக் காக்க முழு முனைப்பில் லக்னோ மாணவர்கள்

  • மாணவர்கள் வரைந்த பல ஓவியங்கள் அரங்கத்தை அலங்கரித்திருக்கின்றன.
  • மிஸ்டு-கால் வாக்குகளை சேகரிக்க பல பள்ளி மாணவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
  • எடுகாம்ப் சல்யூஷன்ஸ் மூலம் பல பள்ளிகளை நடத்தும் திரு.ஷாந்தனு பிரகாஷ் அவர்கள் பல லட்சம் மாணவர்களை இதில் ஈடுபடுத்தி இருப்பதாகச் சொல்கிறார்.

WhatsApp-Image-2017-09-26-at-14.18.26
“நதிகளைக் காப்போம், இயற்கை வளம் பெறுவோம், சந்தோஷமாக வாழ்வோம்” மாடல்களை சத்குருவிற்கு விளக்குகிறார்கள்.
WhatsApp-Image-2017-09-26-at-14.18.46
மாணவர்கள் அணிவகுத்து நின்று சத்குருவிற்கு மரியாதை செலுத்தினர்
WhatsApp-Image-2017-09-26-at-14.18.15

சிறப்பு விருந்தினர்கள்

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள்,
துணை முதல்வர் திரு.தினேஷ் ஷர்மா அவர்கள்,
துணை முதல்வர் திரு.கேஷவ் பிரசாத் மௌர்யா அவர்கள்,
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா அவர்கள்

lucknow-13

WhatsApp-Image-2017-09-26-at-14.05.25

DKoNQi9XcAYSYOP

முக்கிய பிரமுகர்கள் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்

துணை முதல்வர் திரு. தினேஷ் ஷர்மா அவர்கள்

WhatsApp-Image-2017-09-26-at-14.19.32

நம் மாநிலத்தின் பல பகுதிகளில், லக்னோவிலும்கூட பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. நிலத்தடிநீர் நிரந்தரமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காத நிலை வரலாம். நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சத்குரு அவர்கள் சரியான நேரத்தில் இப்பேரணியை ஆரம்பித்திருக்கிறார். நம் புண்ணிய பூமியில் வாழும் ஒவ்வொருவரும் இதில் உத்வேகத்துடன் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கிரிக்கெட் வீரர் திரு.சுரேஷ் ரைனா அவர்கள்

WhatsApp-Image-2017-09-26-at-14.19.17

இது ஒரு மாபெரும் முன்னெடுப்பு. நம் பூமிக்கு மிகமிக அவசியமான ஒன்று. குழந்தைகள், பெற்றோர்கள், ஊடகங்கள் அனைவரும் தயவுசெய்து இப்பேரணிக்கு ஆதரவு அளியுங்கள். தண்ணீர் இல்லாமல் நமக்கு வருங்காலம் இல்லை. நாம் நன்றாக வாழவேண்டும் என்றால், நதிகள் நன்னிலையில் இருக்கவேண்டும்.

எடுகாம்ப் நிறுவனர் மற்றும் தலைவர் சாந்தனு பிரகாஷ் அவர்கள்

lucknow-38

எடுகாம்ப் வழியாக நான் பல பள்ளிகளை நடத்தி வருகிறேன். எங்கள் பள்ளிகளில் “நதிகளை மீட்போம்” வீடியோ விளக்கத்தை மாணவர்களுக்குக் காண்பித்தோம். இதன் மூலம் பல லட்சம் குழந்தைகளை இச்செய்தி அடைந்திருக்கிறது. அவர்களும் இப்பேரணியில் பங்கெடுக்க முழு ஆர்வத்துடன் உள்ளனர். எங்கள் பள்ளிகளில் இருந்து தலா 100 குழந்தைகள் இன்று இப்பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு மகத்தான பணியை ஆரம்பித்து, அதில் எங்களுக்கும் பங்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி சத்குரு!

மோஹித் சௌஹான் அவர்கள் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவுடன் இசை நிகழ்ச்சி

மோஹித் சௌஹான் அவர்களின் பாடலும், கிட்டார் வாத்தியமும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வாசிப்புடன் சேர்ந்து மிக அருமையாக ஒலித்தது. மாணவர்களும், பொதுமக்களும் மிக சந்தோஷமாக பாடல்களை ரசித்தனர்.

WhatsApp-Image-2017-09-26-at-14.19.08

“நதிகளை மீட்போம்” போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்

மாநில அளவில், 5, 6, 7ம் வகுப்புகளில் முறையே வெற்றி பெற்ற 3 குழந்தைகளுக்கு, சத்குரு அவர்களும், முதல்வர் அவர்களும் பரிசு வழங்கினார்கள். உடன் இருப்பது, இப்போட்டிகளை நடத்துவதில் நமக்குப் பங்குதாரராக செயல்பட்ட காம்லின் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர், திரு. சௌமித்ர பிரசாத் அவர்கள்.

lucknow-39

lucknow-40

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

lucknow-41

பேரணிக்கு பெருமளவில் மிஸ்டு-கால் திரட்டிய பள்ளி மாணவர்கள்

லக்னோவின் "ஸ்டடி ஹால்", "மில்லெனியம்" மற்றும் "நியூ பப்ளிக் ஸ்கூல்" பள்ளி மாணவர்கள் இப்பேரணிக்கு பெருமளவில் உறுதுணையாக வேலை செய்திருக்கின்றனர். பலரிடம் மிஸ்டு-கால் பெற இவர்கள் முயன்றுள்ளார்கள். அவர்களைப் பாராட்டும் விதமாக...

lucknow-15

முதல்வர் அவர்களும் சத்குரு அவர்களும் பேரணியின் முக்கியத்துவம் பற்றி உரையாடியது

lucknow-42

lucknow-17

முதல்வர், யோகி ஆதித்தியநாத் அவர்கள்:

  • "நதிகளை மீட்போம்" என்பது வெறும் பேரணியோ, கோஷமோ அல்ல. இதுவொரு யாகம், மனித உயிர்களை மட்டுமல்ல, எல்லா உயிர்களையும் காப்பதற்கான யாகம்.
  • அலஹாபாத்தில் 3 நதிகள் சங்கமிக்கும். ஆனால் வெகு நாட்களாக சரஸ்வதி ஓடவில்லை. தென்னிந்தியாவில் காவிரி மட்டுமல்ல, இங்கு டில்லியில் யமுனா, நம் மாநிலத்தில் ஹிந்தோன், கோம்தி, கான்பூரில் கங்கை என பல நதிகளின் நிலை இதுதான்.
  • சத்குரு முன்மொழிந்திருக்கும் இத்திட்டங்களை நம் மாநிலத்தில் ஏற்கெனவே செயல்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்பதைச் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
  • கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதைத் தடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளைக் கொண்டு வந்துள்ளோம்.
  • அடுத்த கும்பமேளா நடப்பதற்குள் ஆற்றில் கழிவுகள் கலப்பதை முற்றிலுமாக தடுக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.
  • "நமாமி கங்கா" திட்டத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்.
  • "நதிகளை மீட்போம்" பேரணியை எங்கள் அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது. நம் நதிகளைக் காப்பதற்கு இது ஒரு அற்புதமான முயற்சி. இதை மேற்கொண்டதற்கு சத்குரு அவர்களுக்கு என் ஆழ்மனதில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைச் செயல்படுத்தினால், நம் நதிகள் மீண்டும் முன்போல் குன்றாத புகழுடன், பொலிவுடன் நிச்சயம் ஓடும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை

சத்குரு அவர்கள்:

  • நம் ஊரில் காவி உடை அணிந்த ஒருவரும் ஆட்சியில் இருக்கமுடியும் என்பது பெரிய விஷயம். ஒரு யோகி, ஒரு சந்நியாசி என்றால் அனைவரையும் தன்னுள் ஒன்றென பாவிக்கும் மனநிலையில் இருப்பவர் என்று பொருள். இதுபோன்ற மனநிலை இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பது மக்களுக்கு நல்லது
  • சுதந்திர இந்தியாவில், 50 ஆண்டுகள் பிழைப்பை நிலைநாட்ட, 20 வருடங்கள் வளர்ச்சி காண என்று ஓடிவிட்டது. அதை குறைகூற வேண்டாம். ஆனால் இப்போது நம் வளங்களை முறையாகக் கையாளவில்லை என்றால் பிழைப்பு, வளர்ச்சி எதற்கும் வழியிருக்காது
  • அடுத்த சில வருடங்களுக்கு மட்டுமல்ல, அடுத்த 200-500 ஆண்டுகளுக்கு நம் இயற்கை வளத்தை பாதுகாத்து, அதிகரிக்கும் விதமான தேசிய கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்குத்தான் இந்த பேரணி
  • முதல்முதலாக அனைத்துக் கட்சிகளும் இதற்காக ஒன்றிணைந்து ஒரே குரலில் இதற்கு ஆதரவும், முழு ஒத்துழைப்பும் தர முன்வந்திருக்கிறார்கள். இது பெரிய விஷயம். நதிகளை தேசிய பொக்கிஷமாக பாவித்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவற்றை மீட்கும் பணியில் வழிமாறாமல் இருக்கவேண்டும்.
  • இக்காலத்தில் 4-5 அரசாங்கங்கள் மாறலாம், ஆனால் இத்திசை மாறக்கூடாது. அதற்கு 40% மக்கள் அல்ல, 60-70% மக்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். என்ன மாணவர்களே, இதை செய்துவிடுவீர்களா?
  • 1943 வங்காள பஞ்சத்தில் 35 லட்சம் மக்கள் இறந்தனர், வெறும் 2.5 மாதத்தில். அணுகுண்டால் அல்ல. உண்ண உணவின்றி, நகரத் தெம்பின்றி, சப்தமில்லாமல் இருந்த இடத்திலேயே. இப்போது அத்திசையில் மீண்டும் பயணிக்கிறோம். இது மற்றுமொரு முறை நமக்கு நடக்கக்கூடாது.
  • நம் பூமி நமக்கு எப்படிக் கிடைத்ததோ அவ்வாறே அடுத்த தலைமுறையின் கையில் நாம் கொடுக்க வேண்டும். வளமின்றி, அழிவை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் அல்ல
  • கங்கை நதியில் நீரோட்டம் 44% குறைந்துள்ளது. இப்பகுதியில் 79% பசுமைப்பரப்பு குறைந்துள்ளது.

சத்குரு: கங்கை நதி 5 மாநிலங்கள் வழியே ஓடுகிறது. இதில் உத்திரகாண்ட் மாநிலமும், உத்திரபிரதேசமும்தான் பிரதானம். கங்கையின் பிரச்சினையை சரிசெய்ய, நீங்கள் இருவரும் கைகோர்த்து ஒரு மாநிலமாக செயல்படுவீர்களா? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முதல்வர்: “நமாமி கங்கை” திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மத்திய அரசு இம்முயற்சியை எடுத்துள்ளது. சட்டதிட்டங்களும், கோட்பாடுக்ளும் பலரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் வேலை செய்யாது. இப்போது உங்கள் அறக்கட்டளை போன்று உள்ளவர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று இதை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். இனி இது செயல்படுத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது எல்லோருக்கும் பொதுவான அக்கறை என்பதால், நாங்கள் அனைவரும் இதில் ஒன்றாக செயல்படுவோம். கங்கை நதி வெறும் நதி அல்ல. நம் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.

சத்குரு: சுந்தர்லால் பஹுகுணா போல், வனங்களையும், இயற்கையையும் பாதுகாக்க முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் பலர் இறந்து விட்டனர். அவர்களால் இத்திசையில் முழு தேசத்தையும் செலுத்த முடியவில்லை. ஆனால் இப்போது அது நடக்கமுடியும். இதுபோல் உறுதி கொண்ட பிரதமரும், முதல்வரும் இருக்கும்போது இது நிச்சயம் நடக்கும்.

செல்ஃபி: நீங்கள் எல்லோரும் நதிகளுடன் செல்ஃபி எடுத்து அதைப் பதிவு செய்யவேண்டும். அதன் பெயர், அதன் நிலவரத்தையும் சேர்த்து பதிவு செய்யுங்கள். இதன்மூலம் நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நதியையும் நாம் அடையாளம் காணலாம். பின்னாளில் பல ஆய்வுகளுக்கு இது அடிப்படையாக அமையும். அந்நதிகள் புத்துயிர் பெற்று மீண்டும் ஓட வழிவகுக்கும். அதனால் செல்ஃபி எடுங்கள் நதிகளுடன் – அதில் விழுந்துவிடாமல்!

lucknow-37

lucknow-18

WhatsApp-Image-2017-09-26-at-14.21.33

WhatsApp-Image-2017-09-26-at-14.21.04

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு

WhatsApp-Image-2017-09-26-at-14.05.57

சத்குருவுடன் மாணவர்கள் – கேள்வி-பதில்

WhatsApp-Image-2017-09-26-at-14.21.24
கேள்வி: எங்களுக்கு ஏதோவொன்று செய்யவேண்டும் என்றிருக்கிறது. நாங்கள் மரம் நடக் கூடாதா? ஏன் வெறும் மிஸ்டு-கால்?

சத்குரு: ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுவதால் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. உணர்ச்சியின் அடிப்படையில் செயல்படுவது நீண்ட காலம் நிலைக்காது. இதற்கு தேசிய அளவில் கோட்பாடுகள் வகுக்கப்பட்டு, அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். இப்பிரச்சினையை நான் முதலில் பார்த்தபோது, இதற்கு தீர்வு என பசுமைக்கரங்கள் திட்டத்தை ஆரம்பித்தேன். அதன்மூலம் 3.2 கோடி மரம் நட்டிருக்கிறோம். என்றாலும் அது ஒரு தீர்வல்ல. நாம் 32 கோடி நட்டாலும்கூட அது தீர்வாகாது என்பதைப் புரிந்தபோதுதான் இதை ஆரம்பித்தோம். ஒரு நாடாக நாம் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும். இல்லையெனில் இது நடக்காது. இன்று செய்யவேண்டியதைச் சரியாக செய்யாமல், நாளை தவறு நடக்கக்கூடாது என்று ஜோசியம் பார்ப்பதில் பலனில்லை. நாளை என்பது இன்றைய நாளின் அடுத்த படி. இன்று நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மிஸ்டு-கால், மிஸ்டு-கால், மிஸ்டு-கால். குழந்தைகளாக இதைச் செய்வது உங்களுக்கு இன்னும் சுலபம். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரையும் எப்படியாவது மிஸ்டு-கால் கொடுக்கச் செய்யுங்கள்.

செல்ஃபி: நீங்கள் எல்லோரும் நதிகளுடன் செல்ஃபி எடுத்து அதைப் பதிவு செய்யவேண்டும். என் வாழ்வில் இதுவரை நான் செல்ஃபி எடுத்ததில்லை. கடந்த 3 நாட்களில் 4 எடுத்துள்ளேன் - எல்லாம் நதிகளுடன். வரும் ஞாயிறு நீங்கள், உங்கள் குடும்பத்துடன் ஒரு நதியருகே சென்று அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அதன் பெயர், அதன் நிலவரத்தைப் பதிவு செய்யுங்கள். இதன்மூலம் நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நதியையும் நாம் அடையாளம் கண்டு பதிவு செய்தால், பின்னாளில் இதுவே பல ஆய்வுகளுக்கு அடிப்படையாகும். அந்நதிகள் புத்துயிர் பெற்று மீண்டும் ஓட வழிவகுக்கும். அதனால் நதிகளுடன் செல்ஃபி எடுங்கள் - ஜாக்கிரதையாக அதில் விழுந்துவிடாமல்!

கேள்வி: இப்பேரணியை நாம் கிராமங்களில் நடத்தவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்வதால், இதற்கு அவர்கள் பெருமளவில் ஆதரவு அளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சத்குரு: அவர்கள் தலையில் பாடப் புத்தகங்கள் இல்லை என்பதால் அவர்கள் சிறிது அறிவோடு நடந்து கொள்கிறார்கள். "படித்தவர்கள்"தான் பூமியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவில்லாதவர்கள் இயற்கையோடு ஒன்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் வாழ்கிறார்கள். இது ஏனெனில், நம் கல்விமுறை அவ்வாறு உள்ளது. நாம் உள்வாங்கும் விஷயங்கள் நம் நல்வாழ்விற்கு பதிலாக, நம் அழிவிற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. கல்வியும், கற்றறிந்த அறிவும் இவ்வாறு பயன்படுத்தப்படுவது நல்லதல்ல.

WhatsApp-Image-2017-09-26-at-14.21.16

கேள்வி: இப்பேரணியை ஆரம்பிக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது? (அதைத்தானே இவ்வளவு நேரம் பேசினேன். என்ன கேட்கிறாய் என்று புரியவில்லை) நீங்கள் எங்களைப் போல் இருக்கும்போது இதை யோசித்தீர்களா?

சத்குரு: நான் உன்னளவிற்கு நல்ல பிள்ளையில்லை... எப்போதாவது தேவை என்றால் மட்டுமே நான் பள்ளிக்கூடம் செல்வேன். பல நேரங்களில் காட்டிலே இருப்பேன். காட்டிலே ஒவ்வொரு விலங்கும் எப்படி வாழ்கிறது என்று பார்த்து அறிந்தேன். ஒரு காடு, அதன் சுற்றுச்சூழல் எப்படி செயல்படுகிறது என்பதை கவனித்து உணர்ந்திருக்கிறேன். நான் விஞ்ஞானி அல்ல. சுற்றுச்சூழல் ஆர்வலரும் அல்ல. ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பேன். நிலை மிக மோசமாக இருக்கிறது என்பது அப்படித்தான் எனக்குத் தெரியும். தெரிந்தபின், அதை சரிசெய்ய முயற்சி எடுக்கவேண்டும் இல்லையா? நான் செய்தது தவறில்லையே..?

WhatsApp-Image-2017-09-26-at-14.20.25

கேள்வி: நம் பூமியில் 3% தான் நல்ல தண்ணீர். மீதம் 97% கடலில் உப்புத்தண்ணீராக உள்ளது. கடல் தண்ணீரில் டிசலைனேஷன் மூலம் உப்பை அகற்றி, அந்த நீரை பயன்படுத்தலாமே. எதற்கு இவ்வளவு கடினமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?

சத்குரு:

  • கடல் நீரில் உப்பை அகற்றி அதைப் பயன்படுத்த முடியும்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நமது எண்ணம் என்ன? பூமியை அழித்துவிட்டு செவ்வாயில் போல் வாழலாம் என்பதா? இதை அழித்துவிட்டு, வேறொன்றைக் கண்டுபிடித்து அதையும் அழிப்பது நம் நோக்கமா அல்லது நாம் வாழும் இவ்விடத்தை வளமாக, நன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதா?
  • நாம் வாழும் இவ்விடத்தை செழிப்பாக வைத்திருப்பது நம் வேலை. அதை அவ்வாறு எப்படி வைத்துக் கொள்வது என்பதற்கு எளிமையான கோட்பாடுகள் உள்ளது. அதைப் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளோம்.
  • (எடுகாம்ப்) சாந்தனு அவர்கள் வழியாக பரிந்துரையின் சுருக்கத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வளர்ந்த பின்னும், அந்நிலையை நாங்கள் எட்டவில்லை எனில், அதை நிறைவேறச் செய்வது உங்கள் பொறுப்பு. ஏனெனில் நம் பூமி அவ்வாறு இருப்பது மிகமிக அவசியம்.
  • நம் வளிமண்டலத்தில் இருக்கும் நீர் எங்கும் சென்றுவிடவில்லை. அது இங்குதான் உள்ளது... ஆனால் நமக்குக் கிடைக்கவில்லை.
  • அப்படியென்றால், ஏதோவொன்றை நாம் தவறாக செய்து கொண்டிருக்கிறோம்.
  • இதை சரிசெய்வது நல்லதா? அல்லது கடல் நீரையெல்லாம் உறிஞ்சி மீன்களுக்கு நீரில்லாமல் செய்யவேண்டுமா?
  • ஏதோ நெருக்கடி என்றால் உப்பை அகற்றி, அதிலிருந்து குடிதண்ணீர் பெறலாம். ஆனால் அதையே விவசாயத்திற்கு பயன்படுத்தினால் பொருள் விரயம் அதிகமாகும்
  • பொருள் விரயம் ஒருபுறம் இருக்கட்டும்... ஆனால் நம் கண்ணோட்டம் ஏன் ஒன்றை அழித்துவிட்டு இன்னொன்றைப் பயன்படுத்தலாம் என்றிருக்கிறது? நம் நதிகளை நாம் மீட்க வேண்டும். நம் நதிகளில் நீரோட வேண்டும்

WhatsApp-Image-2017-09-26-at-11.40.03

கேள்வி: நம் நாடு மீண்டும் பழைய பொலிவோடு அழகானதொரு நாடாய் ஆவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சத்குரு:

  • இயற்கையை புதுப்பிப்பது எளிதில் நடந்துவிடாது. உதாரணத்திற்கு, நதிப்படுகைகளை சரிசெய்ய, 1000 ஆண்டுகள் ஆகலாம். 1000 என்றால்... நம் வாழ்நாளைவிட அதிக நேரம் தேவைப்படும் என்பதை அப்படி சொல்கிறேன்.இதனால்தான் நீர்படுக்கைகளுக்கு சேதம் உண்டாக்கக்கூடாது.
  • ஒரு காட்டில் இருக்கும் உயிர்சூழலை 25 ஆண்டுகளில் உருவாக்கிவிட முடியாது. நாளாவட்டத்தில் அது உருவாகத் தேவையான "சூழலை" வேண்டுமானால் 25 ஆண்டுகளில் உருவாக்கமுடியும்.
  • என் சிறு வயதில் நாகர்ஹோல் காடுகளில் அவ்வப்போது சில நாட்கள் வாழ்ந்திருக்கிறேன். அக்காடுகள் புலி, யானைகளுக்கு பெயர்போனது. அங்கிருக்கும்போது புலிகளையும் யானைகளையும் மிக அருகிலிருந்துகூட பார்த்திருக்கிறேன். ஆனால் காட்டிலிருந்து வெளிவரும்போது பூச்சிகள்தான் உங்கள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
  • அங்கிருக்கும் பூச்சியினங்கள் வகை, அளவு அப்படிப்பட்டது. இவை செய்யும் வேலை (வேறெதையும்விட) இயற்கைக்கு மிக அவசியமானது.
  • உயிர்கள் என்று சொன்னால், அது நாம் மட்டுமல்ல. காட்டிலே உயிர்வளம் பெருக, சில காலம் எடுக்கும். ஆனால் நம் தலைமுறையில், நாம் தொடர்ந்து அதுக்காக செயல்பட வேண்டிய திசையை சரியாக வகுக்கலாம்.
  • அதற்குத்தான் தேசிய அளவிலான கோட்பாடுகள் வரையறுக்கப்பட வேண்டும். இந்த நோக்கில்தான் இப்பேரணியைத் துவக்கியுள்ளோம்.

WhatsApp-Image-2017-09-26-at-11.53.47

நேரம் நழுவிக் கொண்டே இருக்கிறது…

உடனடியாக நிலையைத் திருப்பாவிட்டால், முழு இந்தியாவும் அழிவிற்குள் அமிழ்ந்துவிடும். நிலையைத் திருப்பும் சக்திக்கு சத்குரு அவர்கள் ஆதாரமாக இருக்க, நாம் அனைவரும் அவருடன் சேர்ந்து மாபெரும் சக்தியாக உருவாகி, இந்நிலையை மாற்றவேண்டும். இதை வரைந்தவர் ரூபக் என்பவர்.

lucknow-4

காடுகள் குறைவாக உள்ள மாநிலங்களில் வெள்ளம் அதிகரிக்கிறது.

lucknow-24

ஐ.ஐ.டி கரக்பூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மாநிலங்களில் காடுகள் குறையக் குறைய, அங்கு வெள்ள அபாயம் அதிகரிக்கிறது என்பதை நிரூபனம் செய்துள்ளது. 1998-2011 வரையில் வெள்ளம் ஏற்பட்ட மாநிலங்கள், அங்கு காடுகளுக்கு படிப்படியாக நிகழ்ந்துள்ள அழிவு ஆகியவற்றை புள்ளி விவரத்தோடு பட்டியலிட்டுக் காண்பித்திருக்கிறது. இந்த ஆய்வறிக்கை ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் வெளிவந்துள்ளது. மேலும் <a
target="_blank" href="http://www.hindustantimes.com/environment/iit-study-finds-states-with-less-forest-cover-reported-most-damage-by-floods/story-7Yth1Rabj4blN47ldXQoaO.html">படிக்க

எல்லைப் பாதுகாப்புப் படையினரை சத்குரு சந்திக்கிறார்.

WhatsApp-Image-2017-09-26-at-14.18.36

எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஏற்கெனவே தமது ஆதரவை மிக ஆணித்தரமாக ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டார்கள். அதுமட்டுமல்ல, “நாங்கள் எல்லையில் நின்று நாட்டைக் காக்கிறோம். நீங்கள் நதிகளைக் காத்து நம் சந்ததியினரின் நல்வாழ்வுக்கு வழிசெய்யுங்கள்” என்று நேரடியாக மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்தனர். இன்று லக்னோவில் சத்குருவை சந்தித்து நேரடியாக தம் ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.

சத்குரு விடைபெற்றுக் கிளம்புகிறார்

WhatsApp-Image-2017-09-26-at-14.18.54

எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு சத்குரு கிளம்புகிறார். இதன்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடக்கவுள்ளது. அடுத்த பேரணி, செப் 28 அன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூரில் நடைபெறவுள்ளது.

லக்னோ பேரணி - தொகுப்பு

லக்னோ பேரணி - முழு வீடியோ