நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.

கோவையிலிருந்து மதுரை வழியாக பல்வேறு ஊர்களில் தன்னார்வத் தொண்டர்களின் வரவேற்பை பெற்றபடி, பாரதத்தின் தென்கோடியான குமரிமுனையில் சத்குரு "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" பேரணியை துவக்குகிறார்! அதன் பதிவுகள் கீழே. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.



இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில், விவேகானந்தா நினைவிடத்தில் சத்குரு. ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் அவர் வருவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

kanyakumari-1

kanyakumari-2

kanyakumari-3

kanyakumari-8

kanyakumari-10

சத்குருவை வரவேற்க கன்னியாகுமரியில் ஏற்பாடுகள்

kanyakumari-9

kanyakumari-24

kanyakumari-25

சிறப்பு விருந்தினர்கள் மேடையில்

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக விவேகானந்தா கேந்திராவின் பானுதாஸ் அவர்களும், திருமதி.சுஹாசினி மணிரத்னம் அவர்களும் பங்கேற்கிறார்கள்.

kanyakumari-12

kanyakumari-13

kanyakumari-23

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திரண்டிருக்கும் மக்கள்

kanyakumari-17

kanyakumari-18

kanyakumari-19

k

சிறப்பு விருந்தினர்களின் பேச்சு

kanyakumari-14

முதலாவதாக பேசிய விவேகானந்தா கேந்திராவின் பொதுச் செயலாளர் திரு.பானுதாஸ் அவர்கள் இப்பேரணிக்கு தம் ஆதரவைத் தெரிவித்து, தற்சமயத்தில் நம் நதிகளை மீட்பது எவ்வளவு முக்கியம் என்று பேசினார்.

kanyakumari-15

kanyakumari-16

அடுத்ததாக பேசிய திருமதி.சுஹாசினி மணிரதனம் அவர்கள்,

  • ராமகிருஷ்ணா மிஷனில் தான் 3 வருடங்கள் படித்ததாகவும், அங்குதான் வாழ்க்கை பற்றி கற்றுக் கொண்டதாகவும் கூறி, ராமகிருஷ்ணா மிஷனிற்கு தம் நன்றியை வெளிப்படுத்தினார்.
  • “செந்தமிழ் நாடெனும் போதினிலே
    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”
    என்ற பாரதியாரின் பாடலைப் பாடி, தமிழ்நாட்டில் ஓடிய அத்தனை நதிகளில் இன்று பலவும் வறண்டு இருப்பதைப் பார்ப்பதற்கே மனம் வலிப்பதாகவும் கூறினார்.
  • பின், நதிகளை மீட்போம் பேரணிக்கு தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்து கொண்டிருப்பதாகவும், இனியும் செய்யப் போவதாகவும் உறுதியளித்தார். நம் வருங்காலத் தலைமுறையினருக்காக இந்த முயற்சியை நாம் கட்டாயம் எடுத்தே ஆகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சத்குரு பேசியதாவது…

kanyakumari-22

kanyakumari-21

kanyakumari-20

  • “இந்தத் தலைமுறையில் பலருக்கு விவேகானந்தர் பெரும் உத்வேகமாக இருக்கிறார். அவருக்கு மிகவும் முக்கியமாக அமைந்த இந்த இடத்தில் இருந்து, இமயம் வரை இப்பேரணிக்காக நாங்கள் மேற்கொள்ளும் இப்பயணம் எங்களில் பலருக்கு ஒரு யாத்திரை போன்றது” என்றார்.
  • மேலும், “நாம் கண்களை மூடிக் கொண்டுவிட்டால், பிரச்சினை போய்விடாது. நம் உயிர் வேண்டுமானால் போகலாம், ஆனால் பிரச்சினை அவ்வாறே இருக்கும். அதை அடுத்த தலைமுறையினரின் தலையில் நாம் இறக்கிவிடுவோம். இது மிகவும் பொறுப்பற்ற செயல். பாகிஸ்தானுடன் போர் நடந்தபோதுகூட இத்தனை பேர் இறந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 3,00,000 விவசாயிகள் – நாம் உண்ண நமக்கு உணவளித்த விவசாயிகள் – தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் உண்ண உணவின்றி, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நமக்கு பெரிய தலைக்குனிவு”
  • இலையும், ஆடு/மாடு சாணமும்தான் மக்கி மண்ணாகிறது. என்றோ மரமில்லாமல் செய்துவிட்டோம். இப்போது விலங்கினங்களையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். காடில்லாமல் மழையில்லை. மழையில்லாமல் தண்ணி இல்லை. இப்படி மண்ணையும் தண்ணியையும் தொலைத்துவிட்டு குழந்தைகளுக்கு எதை விட்டுச் செல்வது? இன்றே இதற்கான செயலில் இறங்கினால்தான் 15-20 வருடத்தில் பலன் கிடைக்கும்” என்றார்.

நதிகளை மீட்போம் பேரணிக்கு ஆதரவு

kanyakumari-27

kanyakumari-28

கன்னியாகுமரி பகுதியில் பள்ளிகளில் நடந்த எழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர். பின், நதிகளை மீட்போம் விளம்பர அட்டைகளை தூக்கிப் பிடித்து, இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். நதி ஸ்துதி ஒலிக்க, அடுத்த 28 நாட்களுக்கு ஓயாமல் இப்பேரணிக்கு அனைவரும் ஆதரவு திரட்ட வேண்டும். 80009 80009 என்ற எண்ணிற்கு 30 கோடி மிஸ்டு கால் வரவேண்டும் என்று சத்குரு கேட்டுக் கொண்டார்.

திருவனந்தபுரத்திற்குக் கிளம்புகிறார் சத்குரு

வந்திருந்தவர்களுக்கு தம் நன்றியை வெளிப்படுத்திவிட்டு, அவர்களிடம் விடைபெற்று திருவனந்தபுரத்திற்கு கிளம்புகிறார் சத்குரு. நாளை காலை 10:20 மணிக்கு அங்கு அடுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

நாளை காலை திருவனந்தபுரத்தில் இருந்து!

kanyakumari-29

kanyakumari-30

kanyakumari-33

kanyakumari-34

kanyakumari-35

kanyakumari-31

விவேகானந்தர் பாறையில் சத்குரு

kanyakumari-41

kanyakumari-51

kanyakumari-48

kanyakumari-49

kanyakumari-50

திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்களின் பேச்சுத் தொகுப்பு

நதிகளை மீட்போம் முழு மூச்சாக… சத்குரு!

kanyakumari-42

கன்னியாகுமரி பேரணி - தொகுப்பு

கன்னியாகுமரி பேரணி - முழு வீடியோ