நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.

இன்று "நதிகளை மீட்போம்" பேரணி வைகை ஆற்றின் மடியில் வளர்ந்த மதுரையில் நடைபெறுகிறது. தம் வாழ்வோடு இரண்டறக் கலந்த வைகை நதி புத்துயிர் பெறாதா என ஏங்கி நிற்கும் பல்லாயிரம் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாய் இந்நிகழ்வு இருக்கிறது. இதன் பதிவுகள் கீழே...

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

சத்குருவின் வரவிற்காக தயாராகி நிற்கும் மதுரை

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் காத்து நிற்க
மல்லிகைப்பூ பூத்திருக்க
வைகையோ காய்ந்திருக்க
இதற்குத் தீர்வில்லையோ…
என்று மக்கள் ஏங்கி நிற்க

விடிவெள்ளியாய்
நம்பிக்கை ஒளியாய்
மிளிர்கிறது “நதிகளை மீட்போம் பேரணி”
இங்கு இன்று வருகிறார் சத்குரு
இனியும் காத்திராமல்…
அவருடன் சேர்ந்து நின்றிடு

மதுரையில் சத்குருவின் வரவிற்காக காத்திருக்கும் மக்கள்

madurai-1

madurai-2

madurai-3

madurai-4

madurai-5

மதுரை காந்தி மியூசியத்தில் சத்குரு

விழா நடைபெறும் காந்தி மியூசியத்தில் சத்குரு. நுழைவாயிலில் இருக்கும் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு உள்ளே வருகிறார்.

madurai-11

madurai-6

madurai-7

madurai-8

madurai-10

madurai-12

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவிற்கு வரவேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் சத்குருவை வரவேற்கிறார்கள்.

madurai-13

madurai-14

சிறப்பு விருந்தினர்கள்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு. ரத்தினவேலு அவர்கள், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், Passport அதிகாரி மணீஸ்வர் ராஜா IFS அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் IAS அவர்கள் மற்றும் முனைவர் திரு. ஞானசம்பந்தன் அவர்கள் ஆகியவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

madurai-9-1

madurai-15

madurai-16

madurai-17

madurai-18

மதுரை மக்களின் ஆரவாரம்

madurai-19

madurai-24

madurai-23

madurai-22

madurai-21

madurai-20

  • மேடையில் பேசிய 8 வயது சிறுமி, சித்திரைத் திருவிழாவின் முடிவில் அழகர் ஆற்றில் இறங்குவதை தான் இதுவரை பார்த்ததில்லை, ஏனெனில் வைகை ஆற்றில் அந்தளவிற்கு தண்ணீர் இருந்ததில்லை என்று தம் வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும் கரைபுரண்டு ஓடும் ஆறுகளை தான் வீடியோவில் மட்டுமே பார்த்திருப்பதாகவும் சொல்கிறார்.
  • முதியவர், இளையவர் என்ற வித்தியாசமின்றி பெரும் திரளாகக் குவிந்து இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை முழு மனதோடு, மிகத் தீவிரமாக வெளிப்படுத்தும் மதுரை மக்கள்.

சிறப்பு விருந்தினர்களின் பேச்சு

madurai-25

madurai-26

madurai-27

madurai-28

madurai-29

நதிகளை மீட்போம் பேரணிக்கு ஒன்றுபட்ட மதுரையின் குரல்!

madurai-30

madurai-31

madurai-32

madurai-33

madurai-34

சிறப்பு விருந்தினர்கள், பொது மக்கள், அரிமா சங்க உறுப்பினர்கள் என அனைவரும் “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டைகளை தூக்கிப் பிடித்து, இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை ஆரவாரத்தோடு, மிகச் சப்தமாக வெளிப்படுத்துகின்றனர்.

இப்பேரணிக்கு தங்கள் ஆழமான ஈடுபாட்டை வெளிப்படுத்தி, இப்பயணத்தில் சத்குருவுடன் சேர்ந்து பயணிக்கும் மக்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.

இன்று மாலை கன்னியாகுமரியில் அடுத்த நிகழ்ச்சி. அங்கிருந்து உங்களை சந்திக்கிறோம்!

கன்னியாகுமரி செல்லும் வழியில் மக்கள் திரள்

கன்னியாகுமரி செல்லும் வழியில் சத்குருவை சந்தித்து இப்பேரணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மக்கள் திரண்டிருந்த காட்சிகள்.

on-the-way-1

on-the-way-2

on-the-way-3

on-the-way-4

on-the-way-5

on-the-way-6

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பேச்சுத் தொகுப்பு

மதுரை பேரணி - தொகுப்பு

மதுரை பேரணி - முழு வீடியோ