18வது நாள். 8வது மாநிலம் – குஜராத். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா… இப்போது குஜராத். இன்று மாலை சபர்மதி நதிக்கரையில் பொதுமக்கள் பேரணி.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

“நதிகளை மீட்போம்” செயல் வீரர்கள் !!!

30 கோடி மிஸ்டு-கால் வேண்டுமே. இதே முனைப்பில், பூங்காவிற்குச் சென்றாலும், தாகத்திற்கு இளநீர் குடிக்கச் சென்றாலும்… காரியமே கண்ணாக செயல்படும் நம் அஹமதாபாத் ஆதரவாளர்கள்.

இடம்: 520 வருட பழமைவாய்ந்த “அடலஜ் வவ்” படிக்கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா.

ahmedabad-2

ahmedabad-3

சபர்மதி ஆசிரமத்தில் சத்குரு

தேசத் தந்தை மஹாத்மா காந்தியடிகள் கிட்டத்தட்ட 12 வருடங்கள் தன் தொண்டர்களுடன் வாழ்ந்த இடம் சபர்மதி ஆசிரமம். கையால் நூற்ற நூல்-மாலையை அணிவித்து, ஆசிரமவாசிகள் சத்குருவை வரவேற்கின்றனர்.

ahmedabad-11

தினசரி வழிபாட்டில் காந்தியடிகள் பாடிய “வைஷ்ணவ ஜனதோ” குஜராத்தி பாடல் ஒலிக்க சத்குரு ஆசிரமத்தில் நுழைகிறார்.

ahmedabad-14

ahmedabad-15

காந்தியடிகளின் படத்திற்கு நூல்-மாலை அணிவித்து சத்குரு மரியாதை செலுத்துகிறார்.
ahmedabad-16

கைராட்டையில் சத்குரு நூல் நூற்கிறார்:

ஆசிரமத்தைச் சுற்றி பார்வையிடுகிறார்
ahmedabad-17

ஆசிரமப் பதிவேட்டில் சத்குரு எழுதியதாவது:

இந்த எளிமையான இடத்தில்தான் பாரதத்தின் எதிர்காலம் வடிவமைக்கப்பட்டது என்று நினைக்கும்போது, அது மிக ஆழமானதொரு உணர்வை ஏற்படுத்துவதோடு , உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது. இந்த இடம் ஒரு கோவில் – எளிமை, அர்ப்பணிப்பு, உறுதி, எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்வின் சின்னச்சின்ன செயல்களையும்கூட முழுமையான பக்தியோடு அணுகும் தன்மையை பிரதிபலிக்கும் கோவில் இவ்விடம். ஆழமானதொரு உணர்விலும், பணிவிலும் திளைக்கிறேன் - சத்குரு.
ahmedabad-18

ahmedabad-19

ahmedabad-20

சிறிது நேரம் ஆசிரமத்தில் இருந்துவிட்டு, பேரணி நடக்கும் இடத்திற்கு சத்குரு கிளம்புகிறார்
ahmedabad-21

ahmedabad-22

பேரணி நடைபெறும் சபர்மதி நதிக்கரை

ahmedabad-10

ahmedabad-9

ahmedabad-12

ahmedabad-13

சுத்தமான நீரோட்டத்தோடு சபர்மதி “நதி”

நாம் இதுவரை பார்த்ததிலேயே நதியென்று சொல்லும் அளவிற்கு நீரோட்டமுள்ள முதல் நதி இது. மிக சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டுள்ளது!

கலை நிகழ்ச்சிகள்

மரங்களை வளர்த்து, நதிகளைக் காத்து வளமாக வாழ்வோம் என்று பொருள்பட, நாட்டிய நாடகம் ஒன்றை பள்ளிமாணவர்கள் வழங்குகிறார்கள்

event-1

event-2

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திரு.பார்த்திவ் கோஹில் மற்றும் நடனக் குழு

பார்த்திவ் கோஹில் அவர்கள் “நதிகளை மீட்போம்” பேரணிக்காக அவரே இசையமைத்து உருவாக்கிய பாடலைப் பாடினார். இதற்கு குஜராத்தி ஸ்டைல் நடனத்தை கலைஞர்கள் வழங்கினார்கள். அடுத்து, “பாரதம் மஹாபாரதம்” என்று ஆரம்பித்து நதி ஸ்துதியில் முடியும், நதிகளை போற்றிப்பாடும் பாடலை அவர் பாடினார். இதற்கு பலவிதமான நடன முறைகளையும் பின்னிப் பிணைந்து, இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமான அழகியதொரு நடனத்தை கலைஞர்கள் வழங்கினார்கள்.

ahmedabad-51

ahmedabad-52

event-4

ahmedabad-53

ahmedabad-55

ahmedabad-54

ahmedabad-56

பேரணி நடக்கும் இடத்தில் சத்குரு

உடன் வருவது திரு.கௌதம்பாய் அதானி, அதானி குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர்.

ahmedabad-50

பெரும் திரள் எனக் கூடியிருக்கும் மக்கள்

crowed

ahmedabad-31

ahmedabad-39

ahmedabad-46

ahmedabad-58

ahmedabad-59

பள்ளி மாணவர்கள், இளைஞர்கள்

ahmedabad-44

ahmedabad-57

ahmedabad-60

சிறப்பு விருந்தினர்கள்

sadh-1

sadh-2

ahmedabad-64

  • குஜராத் முதல்வர் மாண்புமிகு விஜய்பாய் ராம்நிக்லால் ரூபனி அவர்கள்
  • கல்விததுறை அமைச்சர் மாண்புமிகு பூபேந்திரசின்ஹ் மனுபா சூடஸாமா அவர்கள்
  • திரு.மனோஜ் ஜோஷி அவர்கள், நடிகர்
  • பத்மஸ்ரீ ஜீனாபாய் படேல், இயற்கை விவசாயி

கௌதம்பாய் அதானி அவர்கள், மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் விழாவிற்கு வந்திருந்தனர்.

குஜராத்தில் மரம் நட உடன்படிக்கை ஒப்பந்தம்

ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து குஜராத்தில் மரம் நடுவதற்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தை முதல்வர் திரு.விஜய்பாய் ராம்நிக்லால் ரூபனி அவர்களும், சத்குரு அவர்களும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

WhatsApp Image 2017-09-20 at 7.13.05 PM

மிஸ்டு-கால் வீரர்கள்

ahmedabad-68m

ahmedabad-69

பள்ளிகளில் “நதிகளை மீட்போம்” பேரணி பற்றிய வீடியோ மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. நதிகள் வேண்டுமெனில், நீர் பற்றாக்குறை இன்றி வாழவேண்டுமெனில், பலரும் 80009-80009 மிஸ்டு-கால் கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர்களுக்கு விளக்கப்பட்டது. இதன்பிறகு இந்த மிஸ்டு-கால் வீரர்கள், தங்கள் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களை அணுகி மிஸ்டு-கால் திரட்டினர். இதுபோல் மாநிலம் முழுவதிலும் 1 லட்சம் மிஸ்டு-கால் வீரர்கள் செயல்பட்டார்கள். அதில் இருவர் – விஷால் பர்வார் மற்றும் ரேவா ஓஜா மேடையேறி மக்கள் அனைவரையும் மிஸ்டு-கால் கொடுக்க வலியுறுத்துகிறார்கள்.

பள்ளிகளுக்கு விருது

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு முழு வீச்சில் ஆதரவு திரட்டிய 4 பள்ளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ahmedabad-70

ahmedabad-71

ahmedabad-72

ahmedabad-73

“நதிகளை மீட்போம்” போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்குப் பரிசு

“நதிகளை மீட்போம்” எனும் தலைப்பில் கேம்லின் நிறுவனமும் ஈஷாவும் கைகோர்த்து நிகழ்த்திய கட்டுரைப் போட்டியில், மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. பரிசு வழங்குவது, திரு.மனோஜ் ஜோஷி அவர்கள் மற்றும் காம்லின் நிறுவனத்தின் மண்டல தலைவர் திரு.பாலே ராவ் அவர்கள்.

ahmedabad-75

ahmedabad-76

ahmedabad-74

நடிகர் திரு.மனோஜ் ஜோஷி அவர்கள் பேச்சு

ahmedabad-65

ahmedabad-66

ahmedabad-77

  • தேவ கடன், பித்ரு கடன், ரிஷி கடன் என்பார்கள். இந்தக் கலியுகத்தில் நமக்கு ஈடுசெய்ய வேண்டிய மற்றுமொரு கடன் உள்ளது. அதுதான் நதி கடன்.
    கோடி கோடியாக பணம் இருந்தாலும் தாகத்திற்கு 1 கிளாஸ் தண்ணீர் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது.
  • அதனால் இந்த பூமி, நம் தாய்நாடு, இங்கு வாழும் உயிர்கள், நாமும் கூட நலமாக வாழவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், கையை மேலே தூக்கி, என்னுடன் இந்த உறுதிமொழி எடுங்கள் – நதிகளைக் காக்க.
  • “நம் இந்திய நதிகளை பாதுகாக்கவும், அவை புத்துயிர் பெற்று நீரோட்டம் நிறைந்து கம்பீரமாக ஓடவும் என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று பொருள்படும் உறுதிமொழியை, முதல்வர், சிறப்பு விருந்தினர்கள், மக்கள் என ஒன்றாக அனைவரும் ஏற்றனர்.
  • சத்குருவின் இந்த “நதிகளை மீட்கும்” முயற்சிக்கு என்னால் முடிந்த எல்லாவற்றையும் முழு மனதோடு, ஈடுபாட்டோடு நான் நிச்சயம் செய்வேன்

இயற்கை விவசாயி பத்மஸ்ரீ ஜீனா படேல் அவர்கள் பேச்சு

பத்மஸ்ரீ ஜீனாபாய் படேல், 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு மாற்றுத்திறனாளி. இவரது தந்தை ஒரு விவசாயி. ஜீனாபாய் அவர்களால் விவசாயம் செய்யமுடியாது என்றெண்ணி, அவரை மட்டும் பள்ளிக்கூடம் அனுப்பினார். பள்ளி முடித்தபின் என்ன செய்வது என்று தெரியாமல் தந்தையுடனும், சகோதரர்களுடனும் வயலுக்குச் செல்வார். எப்படியாவது உபயோகமாய் இருக்கவேண்டும் என்றேண்ணி, டிராக்டர் ஓட்டப் பயின்றார். பின்னர் விவசாயத்தில் வருமானம் சிரமமாக ஆக, பக்கத்து மாநிலங்களுக்குப் பயணித்து, பலருடன் பேசி மாதுளைத்தோட்டம் உருவாக்க முடிவு செய்தார். அது வளரும் நேரத்தில் நீர் பற்றாக்குறை. இதற்காக சொட்டு பாசன முறைக்கு மாறினார். பின் பழங்களை விற்பதற்கு போராட்டம். இப்படி பல இன்னல்களைத் தாண்டி, இன்று 4 கோடி மாதுழை மரங்கள் அவர் வழியில் உருவாகியுள்ளன. வருமானமும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அப்பகுதியில் இவர் ஒரு வழிகாட்டி, நம்பிக்கை நட்சத்திரம். இவரது உழைப்பிற்கு “பத்மஸ்ரீ”யும் பல மாநில விருதுகளும் இவரைத் தேடி வந்திருக்கிறது.

ahmedabad-78

இவர் கூறியதாவது, “அன்று ஒரு பாகிரத் இமயத்தில் இருந்து கங்கையை நம் நிலங்களுக்கு அனுப்பினார். இன்று சத்குரு “பாகிரத்”, கோவையிலிருந்து இமயம் வரை பயணித்து நம் நிலங்களில் மீண்டும் நதி வர முயற்சி எடுத்துள்ளார். அவருக்கு நாம் கடமைப் பட்டிருப்பது மட்டுமல்ல, அவருடன் நாம் சேர்ந்து நின்று இதைச் செயல்படுத்த வேண்டும்”

கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சின்ஹ் சூடஸாமா அவர்கள் பேச்சு

ahmedabad-79

இது மாபெரும் பணி. கடுமையான உழைப்பு தேவை. அதையெல்லாம் மீறி சத்குரு இதில் ஈடுபட்டுள்ளார் – அவருக்காக அல்ல. நமக்கும் நம் வருங்காலத் தலைமுறைகளுக்கும். அவரின் இந்த முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன். நாம் எல்லோரும் அவருடன் நின்று இதைச் செயல்படுத்த வேண்டும்.

முதல்வர் திரு. விஜய்பாய் ராம்நிக்லால் ரூபனி அவர்கள் பேச்சு

ahmedabad-42

நம் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் இருக்கும் மாநிலம். இந்த நேரத்தில் நம் நதிகளைக் காக்க சத்குரு இந்த மாபெரும் வேள்வியை ஆரம்பித்து இருப்பது நமது பாக்கியம். இத்திட்டப் பரிந்துரையில் வகுக்கப் பட்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் எங்கள் அரசாங்கம் மேற்கொள்ளும். இம்முயற்சியில் நாங்கள் முழுமனதோடு உங்களுடன் நிற்போம் சத்குரு!

சத்குரு அவர்கள் பேச்சு

ahmedabad-43-1

ahmedabad-45-1

  • முன்னொரு காலத்தில் சுவாமி விவேகானந்தர் கூறினார், “உண்மையிலேயே உறுதியான, உத்வேகம் நிறைந்த 100 இளைஞர்களைத் தாருங்கள். நம் தேசத்தையே மாற்றியமைக்கிறேன்” என்று. இப்போது நான் கேட்கிறேன். ஒரு கஷ்யப மகாமுனி, ஒரு மகாத்மா, ஒரு சர்தார் வல்லபாய் படேல், இரு பிரதம மந்திரிகளைத் தந்த இந்த மண்ணில் இருந்து எனக்கு 100 இளைஞர்கள் தேவை. 3 ஆண்டுகளுக்கு. அவர்களிடம் நான் எதிர்பார்ப்பது ஒரேவொரு தகுதிதான்: அடுத்த 3 வருடத்திற்கு “அப்போ நான்? எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். அவ்வளவுதான். அடுத்தகட்ட பணிக்கு இளைஞர்களின் வேகம் தேவை. முதியவர்களின் விவேகம் உதவாது.
  • நதிகள் பிரம்மாண்டமான உயிர் சக்தி. நாமெல்லாம் வந்து மறைவோம். நதிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இங்கு நிலைத்து இருப்பவை. அப்படிப்பட்ட பிரம்மாண்டமான சக்தி இன்று நம்மால் அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது
  • நர்மதா நதியின் 101 கிளைநதிகளில் 80 பருவகால நதிகளாய் மாறியுள்ளது. அதனால் நர்மதா நதியே பருவகால நதியாகிவிட்டது. கிருஷ்ணா நதி கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. காவிரி நதியோ 3.5 மாதங்களுக்கு ஓடுவதில்லை
  • காவிரி நதியைப் பொறுத்தவரை நான் எந்த மாநிலத்தின் பக்கம் என்று சர்ச்சை எழுகிறது. நான் காவிரியின் பக்கம் காவிரியின் பிள்ளைகள் மொழி பேதங்கள் தாண்டி காவிரியின் பிள்ளைகளாக செயல்படவேண்டும்
  • நம் நதிகளை பெரிய அளவிற்கு பாதித்துவிட்டோம். இருந்தாலும் அடுத்த 15 வருடங்கள் உறுதியாய் உழைத்தால், 25 வருடங்களில் நம் ஆறுகள் ஓடுவதை நம் பிள்ளைகள் பார்க்க முடியும்.
  • விவசாயிகள் நம் நாட்டின் “ஹீரோக்கள்”. தேவையான கட்டுமான வசதிகள் இன்றி, எவ்வித விஞ்ஞான, தொழில்நுட்ப உதவியுமின்றி, 113 கோடி நபர்களுக்கு அவர்கள் உணவளித்திருக்கிறார்கள்
  • அந்த இனத்தில் இன்று 3.5 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணம் இங்கு மண் வளமிழந்து, தண்ணீர் இல்லாத நிலை இருப்பதால்தான். இப்போதே தீவிரமான சீர்செய்யும் பணிகளில் ஈடுபடாவிட்டால், 20 ஆண்டுகளில் மிகமிக மோசமான நிலைக்குச் சென்றுவிடுவோம்
  • குஜராத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஒரு நாளிற்கு 2 மணிநேரம்தான் தண்ணீர் கிடைக்கிறது. இன்னும் நாட்டின் சில பகுதிகளில் 2 குடம் தண்ணீருக்காக நாளெல்லாம் குடும்பத்தில் ஒருவர் வரிசையில் நிற்கிறார்கள். இதுதானா வளர்ச்சி?
  • கடந்த 50 ஆண்டுகளில் நர்மதா வடிநிலத்தில் 94% பசுமைப்பரப்பு அகற்றப் பட்டிருக்கிறது. அதன் நீரோட்டம் 60% குறைந்துவிட்டது? நம்மை நாமே அழித்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறோமா என்ன?
  • வளர்ச்சி வேண்டுமென்றால், சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உள்ளாகத்தான் வேண்டும் என்ற முட்டாள்த்தனமான எண்ணம் மாறவேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழியிலேயே வளர்ச்சியும் அடையமுடியும்.
  • 65% மக்கள் விவசாயத்தை நம்பி இருக்க, தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது பொருளாதார ரீதியாக எப்படி வேலை செய்யும்? இதையெப்படி வளர்ச்சி என்று சொல்லமுடியும்?
  • இப்போது சரியான படிகளை உறுதியுடன் எடுத்தால், அழகான, வளமானதொரு எதிர்காலத்தை நாம் நிச்சயம் உருவாக்கமுடியும்.
  • இளைஞர்கள் நீங்களே தனிப்பட்ட முறையில் நதிகளுக்காக பேரணி செய்யுங்கள். தண்ணீர் குடிப்பவர்கள் ஒவ்வொருவரும் இப்பேரணியில் பங்கெடுக்க வேண்டும். இப்போதைய தேவை மிஸ்டு கால். குஜராத்தில் அனைவரும் மிஸ்டு-கால் கொடுக்க வழிசெய்யுங்கள்

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு

ahmedabad-63

சத்குரு விடைபெற்றுக் கிளம்புகிறார்

ahmedabad-47

ahmedabad-48

நாளை காலை இந்தூர் நோக்கிப் பயணம் ஆரம்பம்.

நாங்கள் வருகிறோம் சத்குரு!

ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் 100 இளைஞர்கள் வேண்டும் என்ற சத்குருவின் கோரிக்கைக்கு இணங்கி, நிகழ்ச்சி முடிந்தவுடனேயே நாங்கள் வருகிறோம் என்று எழுந்து நிற்கும் குஜராத் இளைஞர்கள்…

வீடியோவில் இவர் கூறுவதாவது:

குஜராத்தில் இருந்து 100 பேர் வேண்டும் என்று சத்குரு கேட்டார். குஜராத்தில் இருந்து நிச்சயம் 100 பேர் வருவோம். எங்கள் ஊரான பரோடாவில் (வதோதரா) இருந்து நாங்கள் 25 பேர் இப்போதே தயாராக இருக்கிறோம். எதையும் எதிர்பார்க்காமல் அடுத்த 3 வருடம் இதில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அஹமதாபாத் பேரணி - தொகுப்பு

அஹமதாபாத் பேரணி - முழு வீடியோ