“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 14

கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி இது 14வது நாள். நேற்று ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி இரவு சோலாப்பூரில் தங்கிவிட்டு, இன்று பூனே நகரம் வழியாக மும்பை செல்ல உள்ளோம். செப் 18 அன்று மும்பையில் பொதுமக்கள் பேரணி நடக்கவுள்ளது. இன்றைய பயணத்தை இங்கே உங்களுக்காக பதிவு செய்கிறோம்.
 

கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி இது 14வது நாள். நேற்று ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி இரவு சோலாப்பூரில் தங்கிவிட்டு, இன்று பூனே நகரம் வழியாக மும்பை செல்ல உள்ளோம். செப் 18 அன்று மும்பையில் பொதுமக்கள் பேரணி நடக்கவுள்ளது. இன்றைய பயணத்தை இங்கே உங்களுக்காக பதிவு செய்கிறோம்.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

சோலாப்பூர் பிரமுகர்கள் சத்குருவை சந்திக்கிறார்கள்

WhatsApp-Image-2017-09-16-at-08.57.11

இன்று காலை சத்குரு கிளம்புவதற்கு முன் அவரைச் சந்தித்து, தங்கள் நன்றியைத் தெரிவித்து இப்பேரணிக்கு ஆதரவு அளித்த சோலாப்பூர் பிரமுகர்கள்:

  • திருமதி.பன்ஷெட்டி, சோலாப்பூர் மாநகராட்சி மேயர்
  • அவினாஷ் தக்னே, மாநகராட்சி மன்ற ஆணையர்
  • டாக்டர்.இரேஷ் சதாஷிவ் சுவாமி, சோலாப்பூர் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர், சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்
  • ரதி இண்டஸ்ட்ரீஸ் ஸ்தாபகர் திரு.பிரஷாந்த் ரதி அவர்கள்
  • பேராசிரியர்.டாக்டர்.பட்குலே, சோலாப்பூர் சங்கமேஷ்வர் கல்லூரி துணை முதல்வர்
  • டாக்டர்.மங்கேஷ் ஷா மற்றும் அவரது மருத்துவக் குழு
  • டாக்டர்.ஸ்வர்ணலதாபிஷிகர், ஞான பிரபோதினி கிராம மேலாண்மை அமைப்பின் அறங்காவலர்

பூனே நோக்கி பயணம் ஆரம்பம்

காலை 8:15 மணிக்குக் கிளம்பி, மீண்டும் நெடுஞ்சாலை 65ஐ அடைந்து பூனே நகரம் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

pune-1

வழியில் பார்த்த காவலர்களும் பேரணிக்கு ஆதரவு

WhatsApp-Image-2017-09-16-at-08.56.44

வழியில் ஓரிடத்தில் நிற்க வேண்டி வர, அங்கே நாங்கள் சந்தித்த போக்குவரத்து காவலர்கள் இப்பேரணி பற்றி விசாரித்து, அங்கேயே அப்போதே 80009 80009 எண்ணிற்கு மிஸ்டு-கால் கொடுத்தனர். தங்கள் அணியில் உள்ள மேலும் 20 நபர்களையும் மிஸ்டு-கால் கொடுக்கச் சொல்கிறோம் என்றும் வாக்களித்தனர்.

நீரோட்டமுள்ள பீமா நதி

pune-4

pune-5

நெடுஞ்சாலை 65ல் பயணிக்கும் போது, இந்த பீமா நதி தென்படுகிறது. இதில் நீரோட்டம் ஓரளவிற்கு நன்றாக இருக்கிறது. இன்னும் சற்று தூரம் சென்றால் இந்நதியின் மீது கட்டப்பட்டுள்ள உஜ்ஜனி அணை தென்படும் என்கிறார்கள். (இப்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நமக்குப் பரிச்சயமான உஜ்ஜைன் நகரம் மத்திய பிரதேசத்தில் உள்ளது)

உஜ்ஜனி அணை

நாங்கள் செல்லும் பாதையில் இருந்து உஜ்ஜனி அணை வெகு தொலைவில் தென்படுகிறது. அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பீமா நதி ஓடுகிறது. இந்த ஆறு பல ஊர்களைத் தொட்டுச் சென்று ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் கலக்கிறது. அணையின் காட்சிகள் சில…

pune-6

pune-7

pune-8

pune-9

pune-111

இந்திரபூர் அருகே பழ மரத்தோட்டம்

pune-12

அரிசி, கோதுமை பயிர் வகைகளை விட, பழ மரங்கள் குறைந்த அளவு நீரை உபயோகம் செய்கிறது. அதோடு மரங்களின் நிழலில் பூமி குளிர்ச்சியாக உள்ளது, மரக்காடுகள் இருப்பதால் மழை வருகிறது என பற்பல பலன்களை முன்னிறுத்தி, மரக்காடுகள் வளர்ப்பது “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையில் முக்கிய இடம் வகிக்கிறது. பூனே செல்லும் வழியில், இந்திரபூர் அருகே அப்படியொரு பழத்தோட்டத்தைப் பார்த்ததும் எங்களுக்கு சந்தோஷம் தாளவில்லை.

பூனே புறநகர் பகுதியில் மதிய உணவு

வயிற்றுக்கு மட்டுமல்ல… கண்களுக்கும் விருந்தளிக்க ரங்கோலி கோலமிட்டு பூனே புறநகரில் காத்திருக்கும் நம் ஆதரவாளர்கள்.

pune-13

pune-14

pune-15

பூனே மாநகரில் சத்குருவிற்கு வரவேற்பு

pune-16

pune-17

pune-18

pune-19

pune-21

pune-24

pune-25

pune-27

சத்குருவின் வரவிற்காக பூனேவில் காத்திருக்கும் மக்கள். மேள-தாளத்துடன் மக்களின் சந்தோஷமும் பெருக்கெடுக்க அவ்விடமே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. அமைதியான புகைப்படங்களைவிட இந்த வீடியோக்கள் அங்கிருக்கும் சூழ்நிலையை நன்றாக உணர்த்தும்.

சத்குருவிற்கு ஆரவாரமான வரவேற்பு:

 

 

 

pune-28

பூனே-மும்பை நெடுஞ்சாலை

பூனே-மும்பை நெடுஞ்சாலையில் குகைகள், கண்ணுக்கு இனிமையாய் பசுமையான மலைகள், உடலையும் மனதையும் குளிர்வித்த மழைத்தூறல் என இப்பயணம் குதூகலமாய் அமைகிறது.

pune-22

pune-23

 

pune-31

நவி மும்பை

மும்பை செல்லும் முன், நவி-மும்பையில் ஆதரவாளர்களை சத்குரு சந்திக்கிறார். பூனேவையும் மிஞ்சிய ஆரவார வரவேற்பு சத்குரு அவர்களுக்குக் காத்திருக்கிறது. நவி-மும்பையின் மாநகராட்சி மன்றத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

pune-30

pune-35

நவி மும்பை ஆதரவாளர்கள்

pune-39

ஆதரவாளர்கள் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ:

நம் தேசம் முழுவதிற்கும் நன்மை அளிக்கவிருக்கும் இந்த மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்ததற்கும், நாங்கள் இதில் பங்கெடுக்க எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கும், எங்களை நவி-மும்பையில் சந்திப்பதற்கும் எங்கள் நன்றிகள். இனி நீங்கள் அடிக்கடி நவிமும்பை வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மும்பையில் நடக்கவிருக்கும் பேரணியிலும் நாங்கள் கலந்து கொள்வோம்.

 

pune-33

pune-34

pune-36

pune-38

முன்வரிசையில் நீலநிற டி-ஷர்ட்டில் சத்குரு அமர்ந்திருக்கிறார். கலைநிகழ்ச்சிகள் முடிந்தபின் இப்பேரணி பற்றி சத்குரு மக்களிடம் பேசினார். “இப்போது அதிகளவில் மிஸ்டு-கால் நடப்பதுதான் அவசியம். அதற்காக நீங்கள் முழு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்” என்று மக்களை கேட்டுக் கொண்டார். பின் அங்கு வந்திருந்த மேயர் திரு.சுதாகர் சோனாவானே, துணை மேயர் திரு. அவினாஷ் லாட் மற்றும் பிற மாநகராட்சி நிர்வாகிகள் சிலருடன் பேரணி பற்றி பேசினார். மேலும் ஆந்திரமாநிலத்தில் விவசாயிகளுக்கு துணையாக இருக்கும் விதத்தில் 8 கி.மீ இடைவெளியில் குளிர்-வைப்பறைகள் (cold storage) அமைக்கப் பட்டிருப்பது குறித்தும் விவரித்தார். அதன்பின் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து மும்பைக்கு சத்குரு கிளம்புகிறார்.

ஆரவாரத்துடன் வாசல்வரை வந்து சத்குருவை மக்கள் வழியனுப்புகின்றனர்:

 

பூனேவில் இருந்து மும்பை செல்லும் வழியில், நவிமும்பையில் நுழைந்திருக்கிறோம். இதுதான் புது மும்பை. இது முழுவதுமாக வளர்ந்தபின், இதுவே வருங்காலத்தில் மும்பையாக இருக்கும் என்ற திட்டத்தில் இது உருவாக்கப் பட்டிருக்கிறது. ஏனெனில் தற்சமய மும்பை, தீவு போன்ற அமைப்பில் வீற்றிருக்கிறது. இன்று நமக்கு இங்கு மிக மிக ஆரவாரமான வரவேற்பு அளித்தார்கள். நவிமும்பையின் கட்டமைப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. இந்த நகரம் மிக அழகாக இருக்கிறது. மாநகராட்சி நன்றாக செயல்பட்டு வருகிறது. இதற்கும் மேலாக, இன்று “நவிமும்பை பப்ளிக் ஸ்கூல்” பள்ளி மாணவர்களை சந்தித்தேன். அதில் சில மாணவர்கள் அடேயப்பா! அதிலும் ஒரு சிறுமி… மிகச் சுட்டி. சரியான மிளகாய். இவள் போன்ற மிளகாய்கள் வருங்காலத்தில் இருப்பின், நம் நாட்டைப் பற்றிய கவலை நமக்கு வேண்டாம்.

அச்சிறுமி:
pune-44

நதிகளை மீட்க வேண்டும் அவள் பேசிய வீடியோ (மராட்டி மொழியில் பேசுகிறாள்):

 

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ள சத்குருவின் காரசாரமான பதில்

கேள்வி: பல சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், மக்கள் என பலரின் ஆதரவையும் இப்பேரணி பெற்றிருந்தாலும், ஒருசிலர் நீங்கள் உண்மையான பிரச்சினைகளை விட்டுவிட்டு, ஏதோ மேற்போக்கானதொரு தீர்வை வழங்குவதாக சொல்கிறார்களே..?

சத்குரு: உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு என்றால்… அணைகளை உடைத்து, நகரங்களை இடிப்பதா? இது “புரட்சிகள்” பேசி வாழ்க்கை நடத்துபவர்களின் கூற்று. அணைகள் உடைப்பது நடக்கக்கூடிய காரியம் என்று நினைக்கிறீர்களா? அணை என்றால் உடனே சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிறீர்கள். அவற்றால் மக்களுக்கு இதுவரை எவ்வளவு நன்மை நடந்திருக்கிறது என்பதைப் பார்க்க மறுக்கிறீர்கள். சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அணைகள் பெரிய பாதிப்பை உண்டாக்குகின்றன. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்று நீங்கள் கடைபிடிக்கும் உணவுப்பழக்கம் அந்த அணைகள் இல்லாமல் உங்களுக்குக் சாத்தியப் பட்டிருக்குமா? இதுவரை காடுகளில் நடந்துகூட செல்லாதவர்கள், நதிகளை கண்ணால்கூடப் பார்க்காதவர்கள், ஒரு விவசாயி படும் கஷ்டத்தை கண்டறியாதவர்கள், வீட்டில் அமர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நடைமுறையில், நிஜத்தில் எதையாவது உங்களால் செய்யமுடியுமா? உங்கள் புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்வை நடத்தலாம். அதை நான் குறை கூறவில்லை. ஆனால் விவசாயி தன் வாழ்வை நடத்திக் கொள்வது மட்டுமல்ல, நமக்கும் அவன்தான் உணவளிக்கிறான்.

இதுபோல் இகோனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை, நியூஸ்18 டிவி சேனல் என ஊடகங்களிலும் சத்குருவின் பேட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுதவிர்த்து ஜீ(zee) டிவி, நேஷனல் ஜியோக்ராஃபிக் சேனல் ஆகியவை இப்பேரணிக்கு ஆதரவாக அட்வர்டைஸ்மெண்ட் வெளியுட்டுள்ளன. தமிழ்நாட்டில் தந்தி டிவி, புதிய தலைமுறை ஆகிய சேனல்களும் சத்குருவின் நேர்காணலை ஒளிபரப்பியுள்ளன.

நியூஸ்18 ஆங்கில வீடியோ:

 

இவ்வளவு பெரிய மகான்… அவர் இங்கு வந்தது எங்களுக்கு சந்தோஷம், மிகப் பெருமையாகவும் இருக்கிறது. எங்களுக்கு மட்டுமன்றி, நம் முழு தேசத்திற்கும் நதி, நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு அவர் இந்த முயற்சியை எடுத்திருக்கிறார். இது மிகப்பெரிய செயல். அவர் இங்கு வந்தது எங்கள் பாக்கியம் என்றே கருதுகிறோம்.

மும்பை!!!

ஒரு நீண்ட நாள் பயணத்தின் முடிவில், பல்வேறு மக்கள், கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு மாலை 6:30 மணியளவில் மும்பையை அடைந்துவிட்டோம். பெரும் நகரங்களுக்கு அடையாளமான டிராஃபிக் ஜாமில் சிக்கி, மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கிறோம்.

pune-41

pune-43