“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 13

ஹைதராபாத்தில் இரண்டாம் நாளான இன்று, பைக்-ராலி, சியாசட் மற்றும் கோவா (Siasat - ஹைதராபாத்தில் வெளிவரும் உருது நாளிதழ், COVA - தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சங்கம்) ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் சத்குரு. மதியத்திற்கு மேலாக மும்பை நோக்கிப் பயணம் ஆரம்பம்.
 

ஹைதராபாத்தில் இரண்டாம் நாளான இன்று, பைக்-ராலி, சியாசட் மற்றும் கோவா (Siasat - ஹைதராபாத்தில் வெளிவரும் உருது நாளிதழ், COVA - தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சங்கம்) ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் சத்குரு. மதியத்திற்கு மேலாக மும்பை நோக்கிப் பயணம் ஆரம்பம்.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

“நதிகளை மீட்போம்” பைக்-ராலி

“33, 34 வருடங்கள் கழித்து இப்போதுதான் ஹைதராபாத்தில் மீண்டும் பைக் ஓட்டப்போகிறேன். மிகச் சிறிய, அழகான மைசூர் நகரில் இருந்து பயணித்ததாலோ என்னவோ, முன்பெல்லாம் ஹைதராபாத் மிக அசுத்தமாக இருக்கிறது என்று தோன்றும். ஆனால் இப்போது ஹைதராபாத்தின் பெரும்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு நன்றாக பராமரிக்கப் பட்டுள்ளது” என்று சத்குரு சொல்கிறார். ஹைதராபாத்தில் மழை தூறிக் கொண்டிருக்கிறது. அது நம்மை தடுத்துவிடுமா என்ன? உடற்பகுதி மட்டும் நனையாமல் இருக்க கோட் அணிந்துகொண்டு “பைக்-ராலியில்” பேரணிக்கு ஆதரவு திரட்ட கிளம்பிவிட்டார் சத்குரு.

bike-2

hyd-2-30

hyd-2-19

hyd-2-21

hyd-2-22

hyd-2-23

hyd-2-26

hyd-2-31

hyd-2-32

hyd-2-24

hyd-2-27

சியாசட் உருது நாளிதழ் மற்றும் கோவா சங்க கூட்டத்தில் சத்குரு

hyd-2-11

hyd-2-10

hyd-2-33

hyd-2-13

hyd-2-35

சியாசட் (Siasat – ஹைதராபாத்தில் வெளிவரும் உருது நாளிதழ்) மற்றும் கோவா (COVA – தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சங்கம்) இரண்டும் இணைந்து “நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவாக ஏற்பாடு செய்த கூட்டத்தில் சத்குரு அவர்களும் கலந்துகொள்கிறார். இக்கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்றுப் பேசிய கோவா சங்கத்தின் இயக்குநர் திரு.மழர் ஹுசைன் அவர்கள், சத்குருவை “சத்குருஜி மஹாராஜ்” என்று மரியாதையோடு வணங்கி, “உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்தோம். இப்போது இது மாபெரும் திட்டப்பணியாக ஆகிவிட்டது” என்றார்.

இதில் கலந்துகொண்டவர்கள்,

 • ஹைதரபாத்தின் துணை முதல்வர் (நிதித்துறை, மறுவாழ்வு, பேரிடர் மேலாண்மை, நில அளவை பதிவேடுகள்) மாண்புமிகு முகமது அலி அவர்கள்
 • சியாசட் நாளிதழின் தலைமை பதிப்பாசிரியர் திரு.ஜாஹீத் அலி கான் அவர்கள்
 • மௌலானா மஃப்டி சாதிக் முஹைதீன் அவர்கள்
 • கோவா சங்கத்தின் இயக்குநர் டாக்டர்.மழல் ஹுசைன் அவர்கள்

தெலுங்கானாவின் துணை முதல்வர் முகமது அலி அவர்கள் பேச்சு

hyd-2-34

காக்கட்டியா திட்டப்பணி போன்று நீர்நிலைகளை மீட்க தெலுங்கானா அரசாங்கம் மேற்கொண்டுள்ள பணிகளை விவரித்துவிட்டு, “‘நதிகளை மீட்போம்’ பரிந்துரைகளை செயல்படுத்தும் நேரம் வரும்போது, அத்திட்டத்தை செயல்படுத்தத் தேவையான அனைத்தையும் எங்கள் அரசாங்கம் உங்களோடு தோளோடு தோள் நின்று செயல்படுத்தும் என்று வாக்களிக்கிறேன்” என்றார்.

சத்குரு அவர்கள் பேச்சு

hyd-2-36

hyd-2-37

hyd-2-38

  “நதிகளை மீட்போம்” திட்டப்பணியை விளக்கிய சத்குரு,
 • “நீங்கள் நமஸ் செய்பவராக இருந்தாலும், பஜனைகள் பாடுபவராக இருந்தாலும், தியானம் செய்பவராக இருந்தாலும்… தண்ணீர் குடித்தால் இப்பேரணியில் கலந்து கொள்ளவேண்டும்” என்றார்.
 • தெலுங்கானாவின் மற்ற நீர்பாதுகாப்பு செயல்பாடுகளை மெச்சியதுடன், வெப்பமான தெலுங்கானாவில் அணைகள் கட்டுவது சரிவராது. அதில் 80% நீராவியாகி வீணாகும் என்று விளக்கினார்.
 • “அக்டோபர் 2 அன்று ‘நதிகளை மீட்போம்’ திட்டப் பரிந்துரை வெளியிடப் படும்போது, அதில் ஏதேனும் விட்டுப்போய் இருந்தால் உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
 • பல அரசியல் கட்சிகளும் இதை செயல்படுத்த ஒன்றாக நிற்பது பெரிய விஷயம் என்றும் கூறினார்.

மௌலானா மஃப்டி சாதிக் முஹைதீன் அவர்கள் பேச்சு

hyd-2-15

குர்ரானில் இருந்து சில வரிகளை அடிகோடிட்டு இவர் பேசியதாவது:

 • தண்ணீர் என்பது எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கொடுத்த வரம். அனைவரின் உயிரும் அதைச் சார்ந்தே இருக்கிறது. அதை நாம் மதித்துப் போற்ற வேண்டும்.
 • தண்ணீரை நாம் பாதுகாக்க வேண்டுமே அன்றி, அதை அசுத்தம் செய்வதோ, கெடுப்பதோ கூடாது.
 • இந்நாட்டின் பிரஜைகளாக நம் நதிகளைக் காப்பது நம் கடமை.
 • என் இளவயதில், ஹைதராபாத்திற்கு மிக நெருக்கமான மூசி நதி அவ்வளவு அழகாக, ஆனந்தமாக குதித்து ஓடியது. ஆனால் இன்று அது வற்றிவிட்டது.
 • நதிகளை மீட்கும் இந்தப் பெரிய பொறுப்பை மேற்கொண்டதற்கு சத்குரு அவர்களுக்கு நன்றி. இதில் நாம் அனைவரும் பங்கெடுத்து, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும். நம் வருங்காலத் தலைமுறைக்காக இதை நாம் செய்தே ஆகவேண்டும்.

“நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு

இந்த சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கொண்டா விஷ்வேஷ்வர ரெட்டி அவர்களும் பங்கேற்றார்.

hyd-2-16

ஹைதராபாத் ஆதரவாளர்களிடம் இருந்து விடைபெறுகிறார் சத்குரு

hyd-2-39

hyd-2-40

ஹைதராபாத், தெலுங்கானாவில் “நதிகளை மீட்போம்” பேரணி அக்டோபர்-2 வரை தொடர்ந்து நிகழவேண்டும். இங்கு அனைவருமே மிஸ்டு-கால் கொடுத்திருக்க வேண்டும் என்று ஹைதராபாத் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டு இங்கிருந்து கிளம்புகிறார் சத்குரு.

சாஸ்தாபூர், கர்நாடகாவில் சிறு இடைவேளை

சோலாப்பூர் வழியாக மும்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மஹாராஷ்டிராவிற்குள் நுழைவதற்கு கர்நாகாவில் சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. கர்நாடகாவின் சாஸ்தாபூரில் “பஞ்சாபி தாமி” ஹோட்டலில் ஒரு சிறு இடைவேளை.

 

hyd-2-28

hyd-2-29

 

தெலுங்கானாவைத் தாண்டிவிட்டோம். மீட்டர் 4200 கி.மீ காட்டுகிறது. மஹாராஷ்டிராவிற்குள் செல்வதற்கு கர்நாடகாவில் சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இப்போது பசவகல்யாணா எனும் இடத்திற்கு 30 கி.மீ தொலைவில் இருக்கிறோம். இது புகழ்பெற்ற சிவபக்தர், புலவர் “பசவண்ணா” அவர்கள் பிறந்து வளர்ந்த இடம். சிவனை “கூடல் சங்கம தேவா” என்று பாடினார். அதாவது சங்கமிக்கும் நதிகளின் தெய்வமே என்று பொருள். இவர் ஆன்மீக வழிகாட்டி மட்டுமல்ல, இப்பகுதியில் குறுநில அரசரும் கூட. அவர் வாழ்ந்த இடத்திற்குப் போவது சந்தோஷமாக உள்ளது.

சோலாப்பூரில் வரவேற்பு

இரவு சோலாப்பூரில் தங்கிவிட்டு, நாளை காலை பூனே வழியாக மும்பைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். சோலாப்பூரில் மக்கள் சத்குருவை வரவேற்கும் வீடியோ.

 
?rel=0" frameborder="0" allowfullscreen="">