“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 12

ஹைதராபாத். இன்று மாலை 6 மணிக்கு பொதுமக்கள் பேரணி. பேரணி இன்றோடு தென்னிந்தியா தாண்டி வட இந்தியா நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் இப்பேரணிக்கு ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.
 

ஹைதராபாத். இன்று மாலை 6 மணிக்கு பொதுமக்கள் பேரணி. பேரணி இன்றோடு தென்னிந்தியா தாண்டி வட இந்தியா நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் இப்பேரணிக்கு ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது. என்றாலும் இன்னும் பல கோடி மக்கள் தங்கள் ஆதரவை 80009 80009 என்ற எண்ணில் மிஸ்டு கால் மூலம் பதிவுசெய்ய வேண்டும். உங்கள் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் மிஸ்டு-கால் கொடுத்துவிட்டார்களா என்று பாருங்கள். இல்லையெனில் மேலும் ஆதரவு திரட்டுங்கள். இன்னும் 19 நாட்களே உள்ளன.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

பேரணிக்கு பல இடங்களில் இருந்தும் ஆதரவு

இப்பேரணி 16 மாநிலங்களின் வழியாக மட்டுமே பயணிக்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களிலும் கூட இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. சட்டிஸ்கர் மாநில முதல்வர் டாக்டர்.இராமன் சிங்க் அவர்கள், ஹிமாச்சல பிரதேசத்தின் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பௌத்த மடாலயம் “கீ மோனாஸ்ட்ரீ”, நமது எல்லைப் பாதுகப்புப் படை என நீள்கிறது இப்பட்டியல். நீங்கள் எந்தக் கலாச்சாரமோ, மதமோ, தொழிலதிபரோ, துறவியோ யாராக வேண்டுமானாலும் இருங்கள்… தண்ணீர் குடிப்பவர்கள் எல்லோருமே இதில் பங்கேற்க வேண்டும் என்பது நடந்து வருகிறது!

gen_sept13_-Key-monastery-monks-support-Rally-for-rivers-in-spiti-valley-Himachal-3

gen_sept13_-Key-monastery-monks-support-Rally-for-rivers-in-spiti-valley-Himachal-1

hyderabad-7

hyderabad-6

சத்குருவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் மக்கள்

கேரளா பிளாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி, ஷெரடன் ஹோட்டல் நிர்வாகம்.

hyderabad-3

hyderabad-2

தெலுங்கானா அரசுத்துறையின் வெளிப்படையான ஆதரவு

vijaywada-2

தெலுங்கானாவின் நிதித்துறை அலுவலகத்திற்கு வரும் அனைவரும் மிஸ்டு-கால் கொடுக்க அந்த அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு. நுழைவாயிலில் எல்லோரும் பார்க்கும் இடத்தில் “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டையை வைத்திருகிறார்கள்.

ஹைதராபாத்

ஹதராபாத் தெலுங்கானாவில் உள்ளது என்றாலும், சுதந்திரத்திற்கு முன்பு 150 ஆண்டுகள் இது “ஹைதராபாத் நிஜாம்”களின் ஆதிக்கத்தில் இருந்ததால், இந்த ஊர் மட்டும் முற்றிலும் வேறு கலாச்சாரத்தில் திளைத்திருக்கும். இங்கு பலருக்கும் இந்தி மொழிதான் தெரியும். மற்ற பெரும் நகரங்கள் போல், இதுவும் பழமையும் புதுமையும் கலந்ததொரு கலவை. இவ்வூரின் காட்சிகள் சில…

hyderabad-8

hyderabad-9

hyderabad-10

பேரணி நடக்கும் கச்சிபௌலி ஸ்டேடியம்

HyderabadAtVenue

hyd-drum

hyderabad-78

hyderabad-79

hyderabad-80

விழாக்கோலம் பூண்டிருக்கும் உள்ளரங்கம்

hyderabad-44

hyderabad-75

hyderabad-50

stadium-2

hyderabad-28

hyderabad-31

hyderabad-35

hyderabad-45

hyderabad-49

அரங்கத்தில் சத்குரு

பலத்த ஆரவாரத்தோடு சத்குருவை மக்கள் வரவேற்கின்றனர்…

hyderabad-18

hyderabad-81

hyderabad-76

கலை நிகழ்ச்சிகள்

hyderabad-26

hyderabad-27

hyderabad-23

hyderabad-20

 • பல விருதுகள் பெற்ற மணல் ஓவியர் திரு.வேணுகோபால் அவர்கள், தற்சமய வறட்சி மற்றும் “நதிகளை மீட்போம்” பேரணி செயல்படுத்தவிருக்கும் மாற்றத்தை விளக்கும் மணல் ஓவியத்தை அங்கேயே நேரடியாக செய்து காண்பித்தார்.
 • புகழ்பெற்ற பாப் பாடகி ஸ்மிதா அவர்கள் “நதி நதி நதி” என்று இப்பேரணிக்காக பிரத்யேகமாக இசையமைத்துப் படமாக்கிய பாடலை நமக்காகப் பாடினார்.
 • த்ரியோரி ராக்-ஃப்யூஷன் பாண்ட்-ன் இசை நிகழ்ச்சி
 • சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை நிகழ்ச்சி

சிறப்பு விருந்தினர்கள் வருகை

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் அவர்கள், பாசனம், வர்த்தகம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் மாண்புமிகு ஹரிஷ் ராவ் அவர்கள், மிகப் பிரபலமான இசை அமைப்பாளர் பாகுபலி புகழ் எம்.எம்.கீரவாணி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவ ராவ் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கொண்டா விஷ்வேஷ்வர ரெட்டி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மல்லா ரெட்டி அவர்கள், இயற்கை விவசாயி நாகரத்னம் நாயுடு அவர்கள்

hyderabad-24

hyderabad-25

hyderabad-59

hyderabad-62

குழந்தைகள், இளைஞர்கள், மக்கள் ஆதரவு

hyderabad-57

hyderabad-65

hyderabad-71

hyderabad-74

hyderabad-51

hyderabad-29

hyderabad-30

hyderabad-77

hyderabad-58

இன்று பேரணிக்கு பல இளைஞர்களும் குழந்தைகளும் வந்திருந்தனர். அனைவரும் இப்பேரணிக்கு முழு உத்வேகத்துடன் ஆதரவு அளித்தமையால் அவ்விடமே கொண்டாட்டமாக இருந்தது. இதில் கலந்துகொண்ட சுஷ்மா என்பவர், “எனக்கு 4 வயது குழந்தை இருக்கிறது. என் குழந்தை வளரும்போது இங்கு ஒன்றுமே மீதம் இருக்காதோ என்ற பயம் என்னை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இப்பேரணி வெற்றிபெற்று, தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நீர்வளம் நிறைந்த பசுமையான நாட்டை நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டும். இப்பேரணிக்கு என் முழு ஆதரவு உண்டு” என்று கண்கலங்குகிறார்.

இயற்கை விவசாயி நாகரத்னம் நாயுடு அவர்கள் பேச்சு

hyderabad-61

 • இந்த நதிகளை மீட்போம் பேரணிக்கு வாக்களித்தவர்கள் அனைவரையும் நான் தலை வணங்குகிறேன்.
 • மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் நம் நீர்நிலைகளைக் காப்பதற்கு வழிகாட்டும் சத்குருவிற்கு நம் முழு ஆதரவை நாம் கொடுக்க வேண்டும்.
 • இந்த “நதிகளை மீட்போம்” என்பது ஒரேஒருவரின் பொறுப்பல்ல, நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.
 • நம் நாட்டில் மக்களுக்கு “உணவுப் பாதுகாப்பு” (Food Security) இருக்கவேண்டுமெனில், அதற்கு நீர் ஆதாரங்களில், நதிகளில் நீர் இருப்பது மிக அவசியம். நதிகள் இன்றி நாம் இல்லை. இதை உணர்ந்து எல்லோரும் செயல்படுங்கள். மிஸ்டு-கால் கொடுங்கள். மற்றவர்களையும் கொடுக்கச் சொல்லுங்கள்.

இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி அவர்கள் பேச்சு

hyderabad-43

hyderabad-63

 • “சத்குரு பாடிய ‘நதி ஸ்துதி’யை நான் இசையாக உணரவில்லை… அவருக்குள் இருக்கும் ஆழமான அக்கறை அவர் மனதில் இருந்து பெருகி வருவதாகவே உணர்கிறேன்.”
 • “என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவருடன் சேர்ந்து இப்பாதையில் நடப்பதுதான். நீங்களும் இப்பாதையில் அவருடன் சேர்ந்து நடக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”
 • “இந்த நதி ஸ்துதியை ஒருமுறை என்னுடன் சேர்ந்து பாடுங்கள்” என்று சொல்லி, நதி ஸ்துதியை இரண்டாம் முறை முடிக்கும்போது, “பாரதம் மஹாபாரதம்… சத்குரு சேஸே ஜல யாகம்” என்று பாடினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு

டாக்டர். கேசவ ராவ் அவர்கள்:
hyderabad-64

இது ஒரு மாபெரும் இயக்கம். மாபெரும் பேரணி. நம் நதிகளை நாம் வணங்குகிறோம், ஆனால் அதன் மீது நமக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அது வறண்டு காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையை நாம் மாற்றியே ஆகவேண்டும். இப்பேரணிக்கு என் வாக்கை நான் பதிவு செய்துவிட்டேன். நீங்களும் செய்யுங்கள்.

திரு. கொண்டா விஷ்வேஷ்வர ரெட்டி அவர்கள்:
hyderabad-66

ஹைதராபாத் ஏரிகளின் நகரம். இங்கு ஏரிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏரிக்கும் பாதுகாப்பு சங்கத்தை உருவாக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையில் கூறியிருப்பதுபோல் இன்னும் மற்ற படிகளையும் மேற்கொள்வோம்.

பாசனம், வர்த்தகம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் அவர்கள் பேச்சு

hyderabad-67

 • நம் நதிகளை மீட்கவும், அவற்றிற்கு புத்துயிர் ஊட்டவும் சத்குரு ஆரம்பித்துள்ள இந்த வேள்வியில், எல்லா அரசியல் கட்சிகள், அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், மக்கள் என எல்லாரையும் ஒன்றிணைத்துவிட்டார்.
 • இந்த நாட்டின் பிரஜையாக அவரைத் தலை வணங்குகிறேன்.
 • தெலுங்கானாவின் நில அமைவிற்கு பழங்கால வழிமுறைபோல் ஏரிகளைப் பாதுகாத்து, பராமரிப்பதுதான் மாநில அளவில் வறட்சியற்ற சூழ்நிலையை உருவாக்க வழிசெய்யும். இதற்காக மிஷன் காக்கட்டியா என்பதை செயல்படுத்தி வருகிறோம்.
 • மேலும் தெலுங்கானாவில் 33% பசுமைப் போர்வை உருவாக்க, 230 கோடி மரங்களை நடும் திட்டம் – ஹரிதா ஹாரம் – செயல்படுத்தி வருகிறோம்.
 • பைப்டு இரிகேஷன் எனப்படும் “பைப்-வழி” நீர்ப்பாசனம் கடைபிடிக்க உள்ளோம்.
 • இது தவிர்த்து, “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரையில் சொல்லப் பட்டிருப்பதை பின்பற்றி நம் ஆறுகளைக் காக்க வேண்டியதை எல்லாம் செய்வோம் என்று தெலுங்கானா மாநிலத்தின் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்.

சத்குரு அவர்கள் பேச்சு

hyderabad-68

hyderabad-69

 • ஹைதராபாத் இளைஞர்கள் முழு உத்வேகத்துடன் இருப்பதைக் காண சந்தோஷமாக உள்ளது. இதேபோல் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் அனைத்து வகையான மக்களும் இதற்காக எழுந்து நிற்பது அற்புதமாக உள்ளது. இதுதான் நம் பாரதம். மிகமிக முக்கியமான விஷயங்களுக்கு நம் வித்தியாசங்களை மறந்து நாம் எழுந்து நிற்கும் இக்குணம் இருக்கும்வரை நம் பாரதம் நிமிர்ந்து நிற்கும்.
 • “நதிகளை மீட்போம்” திட்டப்பரிந்துரையில் இருக்கும் 70% விஷயங்களை ஏற்கெனவே தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் செய்து வருவது மிக அற்புதமான விஷயம்.
 • மத்திய அரசாங்கம் சட்டம் இயற்றும் வரை காத்திருக்க வேண்டும் என்றில்லை, நாங்கள் இப்போதே தேவையானதைச் செய்கிறோம். என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் என்று மாநிலங்கள் கேட்பது அருமை.
 • வெப்பமான இடங்களான ஆந்திரம், தெலுங்கானாவில் அணை கட்டுவது குற்றம். 80% நீராவியாகிவிடும். அதேபோல் திறந்த-வழி பாசனமும் சரியல்ல. “பைப்டு இரிகேஷன்” என்று கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது.
 • எல்லாம் திருடப்பட்டு, சுரண்டப்பட்டு 1947ல் இந்தியாவை 3 பாகங்களாக மிக குழப்பத்தில் விட்டுச் சென்றார்கள். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில், 50 ஆண்டுகள் பிழைப்பை நிலைநாட்டவே சரியாக இருந்தது. அதை குறைகூறுவது வேண்டாம். கடந்த 20 ஆண்டுகளாக மேம்பாடு, முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினோம். ஆனால் 2017ல் “நிலைக்கக்கூடிய செயல்முறைகளை” பின்பற்றும் நேரம் வந்துவிட்டது.
 • எதை செய்யலாம், எதையெல்லாம் செய்வது பாதிப்புகளை உண்டாக்கும் என்று விழிப்புணர்வோடு செயல்படும் நேரம் இது. நம் நதிகளும், மண்ணும் இப்போது மிக மோசமான நிலையில் உள்ளன. இதை உடனே சரிசெய்ய வேண்டும்.
 • உணர்ச்சிப்பெருக்கில் செயல்படுவது வேலை செய்யாது. 1 வருடத்தில் காணாமற் போய்விடும். முறையாகத் திட்டமிட்டு, சட்டம் இயற்றி அடுத்த 10-15 வருடங்கள் நாம் செயல்பட்டால்தான், அதன்பின் 5-10 வருடத்தில் பலன் கிடைக்கும்
 • இப்பயணம் விஞ்ஞானம் – அரசியல் இரண்டும் கைகோர்த்து செயல்படுவதற்கு. அரசியல் – சமுதாய முன்னேற்றம் நோக்கி செல்கிறது, சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றி எண்ணாமல். விஞ்ஞானிகள் தவறான நகரம், அணை எல்லாவற்றையும் இடித்து எல்லாவற்றையும் முறையாகச் செய்வது பற்றி சொல்கிறார்கள். இருவருக்கும் இடையே பாலம் அமைத்து இருக்கும் சூழ்நிலையை நாம் சீர்செய்ய வேண்டும்.
 • நதிகளை நாம் காக்கவேண்டும் என்றில்லை. நாம் இழைத்த தீங்குகளை மாற்றியமைத்தாலே போதும். 25 ஆண்டுகள் நாம் தூங்கினால் எல்லாம் தானாய் சரியாகும். அது நம்மால் முடியாது. அதனால் மிஸ்டு-கால்.
 • இது வெறும் 30 நாளில் முடியும் விஷயமல்ல. ஆனால் குறைந்தது அக்டோபர் 2 வரையிலாவது நீங்கள் அனைவரும் இதே டி-ஷர்ட்டில், இந்த விளம்பர அட்டையுடன் இருக்கவேண்டும். தெலுங்கானாவில் எல்லோரும் மிஸ்டு-கால் கொடுத்திருக்க வேண்டும்.செய்வீர்களா?

ஆந்திரா-தெலுங்கானா ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் அவர்கள் பேச்சு

hyderabad-70

 • எல்லோரும் மிஸ்டு-கால் கொடுங்கள், ஆனால் சத்குருவின் கால்லை (அழைப்பை) மிஸ் செய்து விடாதீர்கள்.
 • கடந்த 39 மாதங்களாக இந்த இரு மாநிலமும் – மிஷன் பாகிரதா, நீரு சேட்டு, மிஷன் காக்கட்டியா, ஹரிதா ஹாரம், வயல் குளம் போன்ற நீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகிறேன்.
 • கைதட்டி, ஆரவாரம் செய்தால் போதாது நாம் பொறுப்பேற்க வேண்டும்.
 • CSR (நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு) என்று சொல்லி மரம் நடுகிறேன் என்று வருடாவருடம் 100 மரங்களை அதே இடத்தில் நடுவதால் என்ன பயன்? அது வளர வழிசெய்யவேண்டும்.
 • அதற்கு பதிலாக குளங்கள், பொதுமக்கள் பார்க் ஆகியவற்றை CSRன் கீழ் உங்கள் பொறுப்பில் எடுத்து பராமரியுங்கள்.
 • சத்குரு முன்மொழியும் இப்பரிந்துரைகளை முதல் ஆளாக நின்று எவ்வித சமரசமும் இன்றி இந்த இரு மாநிலங்களிலும் செயல்படுத்துவோம் என்று உறுதி கூறுகிறோம்.

பேரணிக்கு ஆதரவு

hyderabad-39

hyderabad-40

இன் கான்வர்சேஷன் வித் தி மிஸ்டிக்

பிரபலமானவர் ஒருவர் சத்குருவிடம் கேள்விகள் கேட்கும் “இன் கான்வர்சேஷன் வித் தி மிஸ்டிக்” நிகழ்ச்சியில் இம்முறை பாகுபலி புகழ் இசையமைப்பாளர் திரு.எம்.எம்.கீரவாணி அவர்கள் சத்குருவிடம் கேள்வி கேட்கிறார். நதிகளை மீட்போம் பேரணிக்குப் பின், அதே அரங்கத்தில் இது நடந்தது. பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர். இதில் ஜோசியம், உணவு, பெண்கள் சம-உரிமை, இன்று அதிகளவில் வெளிப்படும் “நான்” எனும் மனப்பித்து போன்ற பல விஷயங்கள் பேசப்பட்டன.

hyderabad-54-1

hyderabad-55

hyderabad-72

hyderabad-56

ஹைதராபாத் பேரணி - தொகுப்பு

 

ஹைதராபாத் பேரணி - முழு வீடியோ