“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 10

 

இன்று 10வது நாள். சென்னையில் இருந்து கிளம்பி விஜயவாடாவிற்கு சென்று கொண்டிருக்கிறோம். செல்லும் இடமெல்லாம் மழை எங்களை வரவேற்று, வழியனுப்பியும் வைக்கிறது. திருவனந்தபுரம், திருச்சி, பெங்களூரு, இன்று சென்னையிலும் கூட அதிகாலை மழையிலே பயணித்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நாளை காலை விஜயவாடாவில் பேரணி நிகழவுள்ளது.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

நெல்லூரில் காலை உணவு

ஆந்திர மாநிலத்தின் நெல்லூரிலே காலை உணவிற்கு நின்றோம். எங்களுக்காக தன்னார்வத் தொண்டர்கள் – ஈஷாவிற்கு அறிமுகமானவர்கள், அறிமுகம் ஆகாதவர்கள் என பலரும் ஒன்றுசேர்ந்து உணவு சமைத்திருந்தார்கள். சத்குருவிற்கும், இப்புனிதப் பயணத்தை அவருடன் சேர்ந்து மேற்கொண்டிருக்கும் மக்களுக்கும் உணவு பரிமாற முடிந்தது எங்கள் பாக்கியம் என்கின்றனர் மக்கள். வழியில் ஆங்காங்கே “நதிகளை மீட்போம்” அட்டைகளுடன் நாங்கள் செல்லும் வழியில் மக்கள் நிற்கின்றனர்.

nellore-4

nellore-5

nellore-6

nellore-7

nellore-2

3 ஆண்டுகளாகவே நீரோட்டம் இன்றி வற்றிவிட்ட நெல்லூரின் பென்னா நதி

இவ்விடத்தில் முன்பு ஆறுதான் ஓடியதா? என்று சந்தேகிக்கத் தூண்டுவது போல், பென்னா நதியின் ஆற்றுப்படுக்கை முழுவதும் புதர்கள் நிறைந்திருக்கிறது.

nellore-8

சோர்வுற்ற மனதிற்குள் ஒரு வெளிச்சக் கதிர்!

nellore-9

நம் நாட்டிற்குள் பயணிக்கப் பயணிக்க, நாம் எந்தளவிற்கு இப்பூமியின் வளத்தை சுரண்டி அதை “மொட்டையாக” ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது. பென்னா நதியைப் பார்த்து சோர்வில் ஆழ்ந்த நமக்கு, ஒரு வயலில், சூரியக் கதிர் கொண்டு சக்தி உருவாக்கும் கருவியைப் பார்த்ததும் ஒரு சந்தோஷக் கீற்று தோன்றுகிறது. எனினும் நம் ஆறுகளில் எல்லாம் நீர் ஓடவேண்டும் என்ற உறுதி பன்மடங்காகுகிறது.

பள்ளி மாணவர்கள் பேரணிக்கு ஆதரவு

nellore-10

ஆந்திர மாநிலத்தில் நமக்காக வெயிலில் காத்திருந்து தம் ஆதரவை வெளிப்படுத்தும் மாணவ-மாணவியர். “வெயில் அதிகமாக இருக்கிறதே… இப்படி நிற்பது பரவாயில்லையா?” என்று கேட்டால், “மாபெரும் விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக சிறிது கஷ்டப்படுவது ஒன்றுமே இல்லை” என்று சொல்கிறார் ஒரு மாணவி. நீரின்றி மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இந்தப் பேரணி வெற்றிபெற வேண்டும் என்று அவர்கள் ஒருகுரலாய் சொல்கின்றனர்.

சிக்கலூரிபேட்டில் பேரணி ஆதரவாளர்களை சந்திக்கும் சத்குரு

nellore-11

nellore-14

nellore-15

nellore-12

nellore-13

சிற்றோடை போலிருக்கும் மகத்தான கிருஷ்ணா நதி

கங்கா, கோதாவரி, பிரம்மபுத்ரா நதிகளுக்குப் பிறகு இந்தியாவின் 4வது பெரிய நதி கிருஷ்ணா நதி. இன்று அந்த மகத்தான நதி சிற்றோடை போல் இருக்கிறது.

nellore-16

nellore-17

nellore-18

விஜயவாடாவில் பேரணி ஆதரவாளர்கள் நமக்கு வரவேற்பு

 

விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் சத்குரு

nellore-19

வீடியோ இணைப்பில் சத்குரு சொல்வதாவது:

நம் நாட்டில் ஓடிக்கொண்டிருந்த மகத்தான நதிகளில் ஒன்றான, 2.5 லட்சம் சதுரடி வடிநிலப் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான கிருஷ்ணா நதிக்கரையிலே நின்று கொண்டிருக்கிறோம். இந்நதியின் கரைகளிலே இருந்த மரங்கள் 97% அகற்றப்பட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்நதி 61% வற்றியிருக்கிறது. 2003-2006 வருடங்களில் இது கடலை சென்றடையவில்லை. இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது, பருவமழைக்குப் பின் இருக்கும் நீரோட்டம். துங்கபத்ரா நதி போன்ற பெரிய கிளைநதிகளைக் கொண்டிருந்தாலும், இன்று இதன் நிலை இதுதான். “நதிகளை மீட்போம்” பேரணி நிச்சயம் வெற்றியடைய வேண்டும். இதை நிகழச் செய்வோம் வாருங்கள்.

 

  • நாட்டின் பாதுகாப்பிற்காக நாங்கள் எல்லையில் நின்றிருக்கிறோம். ஆனால் இன்று நாட்டின் நதிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது
  • நாங்கள் மரமாக இருந்திருந்தால், எங்கள் இறுதி மூச்சுவரை அந்நதிகளின் கரைகளிலே நின்று அவற்றைப் பாதுகாத்திருப்போம்
  • ஆனால் அங்கு நாங்கள் நிற்பதில் பயனில்லை, ஏனெனில் நாங்கள் மரங்கள் இல்லை
  • நாங்கள் எல்லையில் நின்று நாட்டைப் பாதுகாக்கிறோம். நீங்கள் அங்கு நதிகளைக் காத்து, நம் பிள்ளைகளின் வருங்காலத்தை பாதுகாப்பானதாக ஆக்குங்கள்

ஸ்ரீ.கே.கே.ஷர்மா, எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர்:

நாங்கள் இப்பேரணிக்கு முழு ஆதரவு அளித்து இந்நாட்டிற்கான எங்கள் கடமையைச் செய்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும்கூட 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு-கால் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைசிறந்த சுற்றுச்சூழல் வல்லுநர்கள்

nellore-1

  • எட்வார்ட் பெக்லி ஜூனியர் அவர்கள், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்
  • பிட்டு சாஹ்கல் அவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்
  • “இந்தியாவின் தண்ணீர் மனிதன்” என்று போற்றப்படும் ராஜஸ்தானின் டாக்டர். ராஜேந்திர சிங்க் அவர்கள்
  • பேராசிரியர் கே.இராமசாமி அவர்கள், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
  • பேராசிரியர் டாக்டர்.லக்ஷ்மி லிங்கம் அவர்கள், டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம்

விஜயவாடா சென்றவுடனேயே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

nellore-20

nellore-21

சத்குருவின் அயராத உழைப்பும், இப்பேரணிக்கான அர்ப்பணிப்பும் என்னவென்று சொல்வது? கடந்த 10 நாட்களில் 3500 ற்கும் மேற்பட்ட கி.மீ அவரே கார் ஓட்டிப் பயணித்து, ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களையும், நூற்றுக்கணக்கான தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து, இப்பேரணி வெற்றிபெறத் தேவையான எதையும் மீதம் வைக்காமல் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார். விஜயவாடாவில் நாளை காலை பொதுமக்கள் பேரணி. இன்று மதியம் தாண்டி விஜயவாடாவை அடைந்தார். இடையே மூன்று இடத்தில் மக்களைச் சந்தித்தார். மாலையே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. இன்னும் அடுத்த 20 நாட்களும் இதுபோலத்தான். பார்க்கும் நமக்கே களைப்பாக இருக்கிறது. ஆனால் அவர்..?