நதிகளை மீட்க ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டம்!

"நதிகளை மீட்போம்" இயக்கத்தின் செயல்திட்ட கோட்பாடுகளை விவரிக்கும் Revitalization of Rivers in India புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த பத்திகள் இந்திய நதிகளை மீட்பதற்கான அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்துவதோடு, இதற்காக ஒரு முழுமையான செயல்திட்ட வடிவம் ஏன் அவசியம் என்பதையும் ஆராய்கிறது!
நதிகளை மீட்க ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டம்!, nadhigalai meetka orunginaintha oru seyalthittam
 

“நதிகளை மீட்போம்” பேரணியின் ஒருமாத கால பயணத்திற்கு பிறகு சத்குரு அவர்கள் “நதிகளை மீட்போம்” இயக்கம் பரிந்துரைக்கும் சட்ட வரைவு அறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். இந்த முயற்சியானது இந்திய நதிகளை மீட்பதில் எந்த விதத்தில் செயல்படும் என்பதை அறிந்துகொள்ள விருப்பமா? அந்த அறிக்கையிலுள்ள சில முக்கியமான பகுதிகளை தொகுத்து இங்கே உங்களுக்காக வழங்குகிறோம். பகுதி 2ல் நதிகளை மீட்பதற்கான அவசியமும் அவசரமும் உணர்த்தப்படுவதோடு, இதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதும் புரிகிறது!

உலகின் தொன்மையான நாகரீகங்கள் பல பிறந்து செழித்தது பாரதத்தின் நதிகளின் மடியில்தான்! நதிகள் தங்களுக்கான பாதையை உருவாக்கி, கரடுமுரடான நிலங்களை தனது ஓட்டத்தால் வளம்கொழிக்கும் சமவெளிகளாக மாற்றின. தேசத்தின் உயிர்நாடியாக விளங்கும் நதிகள்தான் நாம் உண்ணும் உணவு, உடை மற்றும் நாம் அனுபவிக்கும் வாழ்க்கை கூறுகள் அனைத்திற்கும் மூலமாகும். பல்வகை உயிரினங்களின் வாழ்விடமாக விளங்கும் ஆறுகள் உலகம் முழுக்க ‘உயிர் வழங்கி’ எனும் தனித்த அடையாளத்தை பெற்றுள்ளது. இதற்கெல்லாம் மேலாக, ஆறுகள் இந்தியாவில் பொருளாதார நலன்களை வழங்குவது மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியங்களோடு ஆழமாகப் பிணைந்துள்ளன.

கோதாவரி நதி, தன் இயல்பான வெள்ளோட்டத்திலிருந்து 20% வற்றிவிட்டது. கிருஷ்ணா, நர்மதா போன்ற பிற மகாநதிகள் 60% வற்றிவிட்டன. காவிரி ஆறு 40% வற்றிவிட்டது.

கடந்த சில பத்து வருடங்களில் நமது நதிகள் வெள்ளப்பெருக்கு, காடுகள் அழிப்பு, மண்ணரிப்பு, நீர் மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றங்கள் (மாறும் வெப்பநிலை அளவுகளால் தாறுமாறான மழைப்பொழிவு அளவுகள்) போன்ற பல்வேறு காரணிகளால் படிப்படியாக வற்றி வந்துள்ளன. வற்றாத ஜீவநதிகள் பல இன்று குறிப்பிட்ட காலத்தில் மட்டும் ஓடும் நதிகளாகிக் கொண்டிருக்கின்றன. ஆண்டின் பல மாதங்களில் இவை கடலை கூட சென்று அடைவதில்லை! இந்தியாவின் பல சிறுநதிகள் இருந்த இடம்தெரியாமல் காணாமல் போய்விட்டன. கோதாவரி நதி, தன் இயல்பான வெள்ளோட்டத்திலிருந்து 20% வற்றிவிட்டது. கிருஷ்ணா, நர்மதா போன்ற பிற மகாநதிகள் 60% வற்றிவிட்டன. காவிரி ஆறு 40% வற்றிவிட்டது. ஒரு கணக்கீட்டின் படி 2030ல் நாம் உயிர்வாழ்வதற்கு தேவையான தண்ணீரில் 50% மட்டுமே நம்மிடம் இருக்கும். மேலும் இந்தியாவின் 25% நிலங்கள் பாலைவனமாக மாறிவருகிறது. சுதந்திரம் வாங்கிய 1947ஐ ஒப்பிட்டு பார்க்கையில் அன்றிருந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த நீரில் 25% மட்டுமே தற்போது இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த நீர்ப்பாசனத்தில் மூன்றில் ஒரு பங்கை நதிகள் வழங்குவதோடு, நாட்டின் குடிநீர் தேவையில் 20%ஐ பூர்த்தி செய்கிறது. நிலத்தடி நீர்மட்டம் மற்றும் மற்ற நீர்நிலைகளின் நீர் வளம் வெகுவாக குறைந்து தற்போது அபாய சூழலை எட்டியுள்ளது. WWF நிறுவனத்தின் அறிக்கைப்படி உலகில் அழிந்துவரும் 10 நதிகளில் ஒன்றாக கங்கை நதி உள்ளது. இந்தியாவின் 32 முக்கிய நகரங்களில் 22 நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதியுறுகின்றன. சர்வதேச அளவில், இந்தியா தண்ணீர் பற்றாக்குறை உள்ள ஒரு தேசமாக கருதப்படுகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் 20 ஆண்டுகளில், நம் தேசத்தின் நீர்நிலைகளால் நமது மக்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த பிரச்சனைகளுக்காக, அரசாங்கம் ‘நமாமி கங்கா’ மற்றும் ‘நமாமி தேவி நர்மதா’ ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எனினும் உடனடியாக, நமது ஆறுகளின் உயிரியல் மண்டலத்தை பாதுகாத்து மீட்பதற்கு பெரிய அளவிலான முன்னெடுப்புகள் அவசியமாகின்றன. இதற்கு ஒரு முழுமையான செயல்திட்டவடிவம் தேவையாகும். அது ஆறுகளைக் காப்பது குறித்தும் நீர்வளத்தை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்துகிறது. இதனை மத்திய மற்றும் மாநில அரசாங்க அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோன்று ஆறுகளை மீட்கும் மாபெரும் முன்னெடுப்போடு சேர்த்து நதிக்கரையோர மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் முயற்சிகள் தேவையாகின்றன. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படுவதோடு பொருளாதார பலன்களும் கிடைக்கப்பெறுவர் என்பதால், நதிகளின் பாதுகாப்பும் மேம்பாடும் சிறப்பான முறையில் நீண்ட காலத்திற்கு நிலைக்கும்.

சர்வதேச அளவில், ஐநாவின் தொலைநோக்கு குறிக்கோள்களுக்கான திட்டமான Sustainable Development Goals (SDG) 2030 உடன் இணைந்து இந்தியா செயலாற்றுகிறது. ஒரு ஒருங்கிணைந்த செயல்திட்ட வடிவமானது நமது நதிகளை மீட்டு, நதிக்கரையோர சமூகத்தினரின் வாழ்வை மேம்பாடடையச் செய்வதற்கு உதவியாய் இருக்கும் என்பதோடு, SDG 6 சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் (Clean Water and Sanitation), Goal 15 நிலத்தில் வாழும் உயிர்கள் (Life on Land) and Goal 13 சீதோஷன செயல்பாடு (Climate Action) ஆகிய குறிக்கோள்களை இந்தியா சாதித்திட வழிவகுக்கும். மற்ற குறிகோள்களான Goal 1 வறுமை(Poverty), Goal 2 மக்கள் பசியின்றி இருப்பது (Zero Hunger), Goal 3 நல்வாழ்வு (Good Health and Wellbeing), Goal 8 நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (Decent Work and Economic Growth), Goal 9 (தொழில், தொழிற்நுட்பம்), Goal 10 இன வேறுபாடு குறைதல் (Reduce Inequality), Goal 11 (நிலையான நகர்புறமும், சமூகமும்) (Sustainable Cities and Communities) Goal 12 நிலையான உற்பத்தியும் பயன்பாடும் (Sustainable Production and Consumption) ஆகியவற்றிலும் இந்த செயல்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

நதிகள் தேசிய வளங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். நதிகளின் பாதுகாப்பின் மூலம் பின்வரும் நன்மைகளும் சாத்தியம்:

  • இயற்கை/சுற்றுச்சூழல் வளம் உறுதிசெய்யப்படும்
  • மரபியல் கூறுகளை பாதுகாக்கும் வகையில் நீரிலுள்ள உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் பாதுகாக்கப்படும்.

நதிகள் பெருவாரியான இந்திய மக்கட்தொகையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பை வழங்குவதால் இந்தியாவின் வளர்ச்சித் திட்டத்தில் நதிகள் கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஆதலால் நமது நதிகளின் பாதுகாப்பும் புத்துயிராக்கமும் முதன்மையாக கருதப்படும்.

ஆசிரியர் குறிப்பு: மேலுள்ள பகுதிகள் “நதிகளை மீட்போம்” சட்ட வரைவு அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது. நீங்களும் இந்தியாவின் நதிகளை மீட்கும் இந்த முயற்சியில் பங்குபெற விரும்பினால் அதற்கான எளிய வழி, 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பது! நதிகளை மீட்பதில், மிஸ்டு கால் கொடுப்பதால் என்ன நிகழும் என்பதை அறிய க்ளிக் செய்யுங்கள்!