நாட்டிய நாடகத்துடன் களைகட்டிய ஒன்பதாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்!

ஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஒன்பதாம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்... உங்கள் பார்வைக்கு!
day9-navarathri2018-ishayogacenter-tamilblog-featureimg
 

ஈஷாவில் 9ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்...

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18 வரை) விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன.9 நாட்கள் திருவிழாவில்,நேற்றைய ஒன்பதாம் நாள் கொண்டாட்டத்தில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய நாட்டிய நாடகம் நடைபெற்றது.

மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

நாட்டிய நாடகத்தில் தெய்வீக மணம் பரப்பிய ஈஷா சம்ஸ்கிருதி!

day9-navarathri2018-iyc-tamilblog-subcollage1

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஒன்பதாம் நாள் நவராத்திரி கொண்டாட்டமான நேற்று, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ‘குமார சம்பவம்’ என அறியப்படும் சிவன்-பார்வவதி திருமண நிகழ்வின் பின்னணியில் அமைந்த புராண நிகழ்வை நாட்டிய நாடகத்தின்மூலம் வெளிப்படுத்தினர். இமயத்தின் அரசனான இமவானின் மகள் பார்வதி சிவனை மணமுடித்த தெய்வீக வரலாற்றை தங்கள் நாடகத்தில் நவரசங்களையும் வெளிப்படுத்தி நம் கண்முன்னே நிறுத்தினர்.

day9-navarathri2018-iyc-tamilblog-subcollage2

சதியின் இழப்பு சிவனை வெகுவாய் பாதிக்க, சிவன் இமாலய பர்வததில் ஆழ்ந்த தியானதில் ஆழ்கிறார். தொல்லை தரும் தாரகாசுரனை அழிக்க சிவ பார்வதி திருமணம் நிகழ்ந்தாக வேண்டியது அவசியமாகிறது. சிவனின் தியானத்தை கலைக்க காமனின் உதவியை இந்திரன் நாடுகிறான். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த நாடகம் அமைந்தது.

day9-navarathri2018-iyc-tamilblog-subcollage3

பல்வேறு முகபாவங்களோடு நாட்டியத்தில் நுட்பமான அபிநயங்களை வழங்கிய ஈஷா சம்ஸ்கிருதி மாணவ மாணவிகள் பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றனர்.

தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்பு

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது

மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1