நான் கொசு
இன்றைய தேதியில் தமிழகத்து மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் இரண்டு விஷயங்களில், முதலாவது பவர் கட்! இரண்டாவது, ஒரு பெண்!! அவள் பெயர் ஈடிஸ் ஈஜிப்தி!!! விளைவு டெங்கு!! இதோ இந்நோயை கையாள ஈஷா ஆரோக்யா வழங்கும் சில குறிப்புக்கள்
 
 

டாக்டர். சாட்சி சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

இன்றைய தேதியில் தமிழகத்து மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் இரண்டு விஷயங்களில், முதலாவது பவர் கட்! இரண்டாவது, ஒரு பெண்!! அவள் பெயர் ஈடிஸ் ஈஜிப்தி!!!

யார் இவள்? பெயர் மத்திய கிழக்கு நாட்டு பெண்மணி போல் இருக்கிறதே!! நடிகையோ?? இவளுக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்???

சற்று பொறுங்கள்... இவள்தான் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலை பரப்பி வரும் பெண் கொசு... ஈடிஸ் ஈஜிப்தி!

"வரும் முன் காப்பதே நலம்" என்பது டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவத்துக்கும் பொருந்தும்.

ஆங்கில மருத்துவத்தில், டெங்கு வைரசுக்கு எதிரான தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நமது பொறுப்பான சில செயல்களால், ஈடிஸ் கொசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

எப்படி கொசு வளர்வதை தடுப்பது?

* குப்பைகளை மூடிய தொட்டியில் கொட்டுதல், சுற்றுப்புறம் பாதுகாத்தல்
* வீட்டில் எங்குமே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல்.
* தண்ணீர் தொட்டிகளை மூடி வைத்தல்

டெங்குவிற்கு ஆங்கில - சித்தா கூட்டு மருத்துவம்

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்த தற்கால சூழ்நிலையில் ஏதேனும் ஒரு மருத்துவ முறையை மட்டுமே சார்ந்திருப்பது போதுமானதாக இருக்காது.

நவீன விஞ்ஞானத்தின் குழந்தையான ஆங்கில மருத்துவம், நம் சித்தர்கள், ஞானிகளின் மெய்ஞானக் குழந்தையான சித்த மருத்துவம் - இவை இரண்டும் சரியான விகிதத்தில் ஒன்றாய்ப் பொருந்தி வரும்போது டெங்குவிற்கு முழுமையான தீர்வு கிடைக்கும். இதுவே ஈஷா ஆரோக்யாவில் நடைமுறையிலும் உள்ளது.

டெங்கு நோய் தடுப்பிற்கு சித்த மருந்துகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, டெங்கு வராமல் தடுக்கவும், வந்தாலும் அதன் தீவிரத்தை குறைக்கவும், சித்தர்கள் அருளிய வகையில் இரண்டு அற்புத மூலிகை மருந்துகள் ஈஷா ஆரோக்யாவில் மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.

நிலவேம்பு தூள் மற்றும் ஆடாதொடைத் தூள்

சில ஆண்டுகளுக்கு முன்னர், மக்களை முடக்கி போட்ட சிக்குன்குன்யா காய்ச்சல் தாக்கியபோது, இவ்விரு மூலிகை மருந்துகளின் அற்புதத்தை அரசே உணர்ந்து, அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இவை கிடைக்க ஆவண செய்தது. தற்போது, இவை ஈஷா ஆரோக்யா மையங்களிலும் பிற சித்த மருந்தகங்களிலும் கிடைக்கின்றன. இவற்றை டெங்கு வராமல் தடுக்க, அனைத்து வயதினரும் 7 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.

மருந்து செய்முறை

200 மிலி தண்ணீரில், 2 ஸ்பூன் மூலிகைத் தூள் விட்டு, 50 மிலியாய் காய்ச்சி வடிகட்டி காலை நிலவேம்பும், மாலை ஆடாதொடையும் குடித்து வருதல் நலம் பயக்கும். குழந்தைகளுக்கு 10 மிலி வரை கொடுக்கலாம். கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானது.

ஆங்கில மருத்துவத்தில், டெங்குவின் தீவிரத்திற்கேற்ப, வலி நிவாரணிகள் மூலம் காய்ச்சல்/ வலியை தற்காலிகமாக குறைக்க முடியும். கஷாயங்களுடன், தேவையெனில் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அவசியமானதுதான்.

ஈஷா ஆரோக்யா மையங்கள் தற்போது சேலம், கரூர் மற்றும் சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற நம் நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளுடன் நவீன கால ஆங்கில மருத்துவ முறையையும் சரிவிகிதத்தில் கலந்து இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் மேலும் பல நகரங்களில் ஈஷா ஆரோக்யா மையங்கள் செயல்படவுள்ளன.

ஈஷா ஆரோக்யா மையம்

ishaarogya.org

சென்னை: 94425 90099, 044 42128847
கரூர்: 94425 90098
சேலம்: 0427 2333232, 94425 48852

நன்றி: டாக்டர். திரு. சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1