ஈஷா யோக மையத்தில் முதல்முறையாக இந்தியில் நிகழ்ந்த ஈஷா இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே!

ஈஷா யோக மையத்தில் 4 நாட்கள் தங்கிப் பயிலும் இன்னர் இன்ஜினியரிங் வகுப்புகள் (ஈஷா யோகா வகுப்புகள்) ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வகுப்பு இந்தியிலும் துவங்கப்பட்டுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இதற்காக 3 அமைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் யோக வகுப்புகளை மத்தியப் பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரைகளில் ஒன்றுதான் ஈஷாவின் இன்னர் இன்ஜினியரிங் இந்தி வகுப்பு.

நவம்பர் 16 அன்று துவங்கிய இந்த வகுப்பில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 116 பேர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய நிகழ்வு என்னவென்றால் அதில் 68 பேர் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்து கலந்து கொண்டதுதான். அவர்களின் பயிற்சிக் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவை மத்திய பிரதேச மாநில அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சிக்காக ஒரு அரசுத்துறை!

மத்திய பிரதேச மாநில அரசில் மகிழ்ச்சிக்காக (Ministry of Happiness) என்றே ஒரு துறை இருக்கிறது. அந்தத் துறையின் நிர்வாகத்தில் உள்ள ஒரு அமைப்பு ‘ஆனந்த் சன்ஸ்தான்’. அந்த அமைப்பு தங்கள் மாநிலத்தில் உள்ள உயர்நிலை அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர் வரை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுய முன்னேற்றத்தை விரும்பும் யார் வேண்டுமானாலும் யோகா வகுப்பில் பங்கு பெறலாம். இதற்காக 3 அமைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் யோக வகுப்புகளை அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரைகளில் ஒன்றுதான் ஈஷாவின் இன்னர் இன்ஜினியரிங் இந்தி வகுப்பு.

அந்தச் சுற்றறிக்கையின் படி அந்த மாநிலத்தில் உள்ள 7 இலட்சம் அரசு ஊழியர்களும் பயிற்சிக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் பெற்று யோகா பயில முடியும்.

இது ம.பி.அரசின் ஒரு உன்னத முயற்சியாக அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இங்கு தங்கிப்பயிலும் வகுப்புகளில் பங்கேற்க வருவோர் ஓரிரு நாட்களுக்கு முன்பே ஆசிரமத்திற்கு வந்து ஆசிரம சூழ்நிலையில் இருப்பதால் அவர்கள் வகுப்பில் வெளிப்படுத்தும் ஈடுபாடு எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதுபோல இந்த வகுப்பு பங்கேற்பாளர்களும் - முழு பண உதவி பெற்று இதில் வந்து கலந்திருந்தாலும் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தி பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

ஓரிருவர் தங்கள் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

“நான் இதற்கு முன் ஈஷாவையோ, சத்குருவையோ அறிந்ததில்லை. ஆனால் 2 நாட்கள் முன்பே வந்து ஆசிரம சூழ்நிலையில் இருந்தது மட்டுமே கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.”

“என் ட்ரெயின் டிக்கட் வெயிட்டிங் லிஸ்ட்டிலேயே இருந்தது. டிக்கெட் உறுதியாகும் நிலையே தெரியவில்லை. நான் இந்த வகுப்பை தவற விடுவேன் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என் நண்பர் திடீரென என்னிடம் வந்து, இந்த வகுப்பை நீ தவறவிடக் கூடாது, நான் உனக்கு விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து தருகிறேன் என்று கூறி என்னை இங்கு அனுப்பி வைத்தார்.”