முருங்கைக்கீரை & கார்ன் சூப் ரெசிபி!
சத்தும் சுவையும் மிக்க இரண்டு சூப் ரெசிபிகள் இங்கே உங்களுக்காக!
 
முருங்கைக்கீரை சூப், Murungaikeerai soup recipe
 

ஈஷா ருசி

சத்தும் சுவையும் மிக்க இரண்டு சூப் ரெசிபிகள் இங்கே உங்களுக்காக!

முருங்கைக்கீரை சூப்

தேவையான பொருட்கள்:

முருங்கை இலை - 2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

4 பெரிய டம்ளர் அளவு தண்ணீரில் சுத்தம் செய்த 2 கப் முருங்கை இலைகளை சீரகம் சேர்த்து குக்கரில் போட்டு 4 விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு வேகவைத்த தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வேகவைத்த கீரையை சீரகத்துடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து மிளகுத்தூளையும் உப்பையும் சேர்க்கவும். இப்போது சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி.

சத்தான இந்த சூப், குழந்தைகளும் விரும்பிக் குடிக்கும் அளவு ருசியானதும் கூட, இதே விதமாக மிளகுத் தக்காளிக் கீரை, அல்லது அரைக்கீரை வைத்து கூட சூப் செய்யலாம்.

கார்ன் சூப்

கார்ன் சூப், corn soup

தேவையான பொருட்கள்:

சுவீட் கார்ன் (மக்காச்சோளம்) - 1 (வேக வைத்து, உதிரியாக எடுத்தது)
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் (பட்டர்) - 1/4 டீஸ்பூன் (தேவையானால்)
கார்ன் பிளவர் மாவு - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (சிறியது)

செய்முறை:

வேக வைத்த சுவீட் கார்னை வாணலியில் வெண்ணெய் போட்டு, லேசாக வதக்கிய பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீரில் 1 டீஸ்பூன் கான் ப்ளவரை கட்டியில்லாமல் கரைத்து வாணலியில் ஊற்ற வேண்டும் அல்லது சுவீட் கார்னை பாதி அளவு எடுத்து அரைத்து சேர்க்கலாம். தேவையான அளவு தண்ணீர் வாணலியில் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின் மிளகுத்தூள், உப்பு போட்டு பருகலாம். விருப்பப்பட்டால் கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி போட்டால் சுவை கூடும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1