ஈஷா மஹாசிவராத்திரி

வருடந்தோறும் ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு 112 அடி உயர ஆதியோகி சிலையை பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்து மஹா யோக யக்னாவை ஏற்றிவைத்தார். இதை சுமார் 8 லட்சம் பேர் நேரடியாகவும் லட்சக்கணக்கான மக்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டு ரசித்தனர். 112 அடி உயர ஆதியோகி சிலையருகில் சத்குரு அவர்களால் யோகேஷ்வர லிங்காவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் தரிசித்து செல்கின்றனர். இசை, நாட்டியம், சத்குருவுடன் தியானம் என இரவு முழுவதும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பலதரப்பட்ட மக்கள் வந்து பங்குபெற்று சிவனருள் பெற்று செல்கின்றனர்.

மஹாசிவராத்திரி 2018

இந்த வருடம் பிப்ரவரி 13ம் தேதி மஹாசிவராத்திரி கொண்டாடப்படவுள்ளது.  ஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகள் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலை முன்பு கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதர உள்ளனர். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில் சத்குரு அவர்களின் சத்சங்கம், சக்தி வாய்ந்த தியானம், மகா மந்திர உச்சாடனம், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை  நடைபெறும். இரவு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரபல இசை கலைஞர்கள் திரு. சோனு நிகாம், திரு. டாலேர் மெஹந்தி மற்றும் திரு. சான் ரொல்டான் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

ஈஷாவின் துடிப்புமிக்க தன்னார்வத் தொண்டர்கள்

முழூவீச்சில் நடந்து கொண்டிருக்கும் ஆயத்தபணிகளை தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலிருந்து வந்திருக்கும் தன்னார்வத் தொண்டர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர். நாற்காலிகளை வரிசைபடுத்துவது, கார்பட் விரிப்பது, மேடை அலங்கரிப்பது, ஒலி, ஒளி பணிகள், பங்கேற்பாளர்களை பதிவு செய்தல், தங்குமிடத்தை தயார் செய்தல், மைதானத்தை சுத்தம் செய்தல் என பல முனைகளில் பணி நடந்து வருகிறது. மஹாசிவராத்திரியை ஆவலுடன் எதிர்நோக்கும் அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்கும் பணியில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மகா அன்னதானம்

நமது பாரம்பரியத்தில் எந்தவொரு விழாவானாலும் அதில் அன்னதானம் மிகவும் முக்கியத்துவும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மஹாசிவராத்திரியின் ஒரு பகுதியாக மகா அன்னதானம் நடைபெறும். இதற்கு பலர் தங்களினாலான உதவியை பணமாகவோ, பொருளாகவோ, காய்கறிகளாகவோ அல்லது தானியங்களாகவோ வழங்கலாம்.

நன்கொடை மற்றும் அன்னதானம் குறித்த மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள மின் அஞ்சல் மற்றும் கைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்

annadanam@ishafoundation.org  or call +91 844 844 7707

யக்ஷா

பிப்ரவரி 13ம் தேதி மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் யக்‌ஷா எனப்படும் இன்னிசை மற்றும்  நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். யக்ஷா திருவிழா சத்குரு அவர்களின் முன்னிலையில் நடக்கவுள்ளது. தினமும்  மாலை 6:30 மணி முதல்  8:30 மணி வரை நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். 9ம் வருடமாக தொடர்ந்து நடைபெறும் யக்ஷா விழாவின் முதல் நாளான பிப்ரவரி 10ம் தேதி (சனிக்கிழமை) திரு ராகேஷ் சௌராசியா அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நிகழவுள்ளது. இவர் புகழ்பெற்ற பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியா அவர்களின் சீடர் ஆவார்.

பிப்ரவரி 11ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமதி ஸ்ருதி சடோலிகர் அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், பிப்ரவரி 12ம் தேதி வித்வான் திரு N. ரவிக்கிரன் அவர்களின் சித்ரவீனா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ருத்ராக்ஷப் பிரசாதம்

கடந்த ஆண்டு மஹாசிவராத்திரி அன்று ஆதியோகியின் 112 அடி சிலை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து ஆதியோகி கடந்த ஒரு வருடமாக அணிந்திருந்த ஒரு லட்சத்தி எட்டு ருத்ராக்‌ஷ மணிகளடங்கிய மாலையிலிருந்து  ஒருவருக்கு ஒரு ருத்திராக்ஷ மணி என்று இந்த ஆண்டு மஹாசிவராத்திரி விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை கோவிலுக்கு செல்லும் போதோ அல்லது புனித நாட்களிலோ அணிந்து கொள்ளலாம் மற்ற தினங்களில் பூஜை அறையில் வைக்கலாம். பன்னிரெண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இதை அணிவது மிகுந்த பலனை தரும் என்று சத்குரு தெரிவித்துளார்கள்.

ஆதியோகி பிரதட்சணம் மற்றும் பைரவி மஹா யாத்திரை

இந்த மஹாசிவராத்திரி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆதியோகி பிரதட்சணம் மற்றும் பைரவி மஹா யாத்திரை நடக்கவுள்ளது. ஒரு சக்திவடிவத்தின் அருளை சிறப்பாய் பெற்றுக்கொள்ள அதை பிரதட்சணமாய் வலம் வருவது தொன்றுதொட்டு நிலவிவரும் வழக்கம். ஆதியோகி பிரதட்சணம் தனி மனிதருடைய முக்திக்கான முயற்சியை மேலும் துரிதப்படுத்தும். மஹாசிவராத்திரி அன்று லிங்கபைரவி தேவி உற்சவமூர்த்தி, ஆதியோகியின் உறைவிடத்திற்கு பிரம்மாண்ட ஊர்வலத்தில் பவனி வருவாள். முதன் முதலாய் நிகழும் இந்த உயிரோட்டமான மஹா யாத்திரையில் பங்குபெற வாருங்கள்.

மஹாசிவராத்திரி குறித்து மேலும் விபரங்கள் அறிய +91-8903816461 என்ற எண்னை தொடர்புகொள்ளவும்

முழுவீச்சில் மஹாசிவராத்திரிக்கு தயாராகும் ஈஷா யோக மையம், Muluveechil mahashivarathirikku thaiyaragum ishayoga mayyam