முடக்கற்றான் கீரை + மாங்காய் வற்றல் குழம்பு
மதிய உணவு என்றால், அதற்கு வற்றல்குழம்பு கூட இருப்பதே தனி ருசிதான். அப்படிப்பட்ட காரப் பிரியர்களுக்கு கத்திரிக்காய், பூண்டு வைத்து செய்யும் வற்றல் குழம்பிற்கு போட்டியாக, அதைவிட உடலிற்கு நல்லது பயக்கும் கீரை மற்றும் மாங்காய் சேர்த்து செய்யும் வற்றல் குழம்பு, இதோ..!
 
ஈஷா ருசி

தேவையான பொருட்கள்:

முடக்கற்றான் இலை - 200 கிராம்
மாங்காய் வற்றல் - 5 துண்டுகள்
புளி - தேவையான அளவு
தக்காளி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 கரண்டி
கடலை எண்ணெய் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 50 கிராம்

வறுத்தெடுக்க:

சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கருப்பு உளுந்தம்பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 200 கிராம்

செய்முறை:

  • முடக்கற்றானை கழுவி சுத்தம் செய்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் கடலை எண்ணெயை ஊற்றி சிறிது வெந்தயம், சீரகம் தாளித்து தக்காளியைப பொடியாக நறுக்கி நன்றாக வதக்க வேண்டும்.
  • பின் நைசாக அரைத்த முடக்கற்றான் விழுதை தாளித்த கலவையில் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
  • பின் மிளகாய் தூளை சேர்த்து கிளரவேண்டும்.
  • பின் புளிக்கரைசல், உப்பு சேர்த்து வேகவைத்து, மாங்காய் வற்றலையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
  • இறக்குவதற்கு 10 நிமிடம் முன்பு வறுத்து அரைத்த பொடி 2 ஸ்பூன், நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். (வறுத்து அரைத்த மீதமுள்ள பொடியை பிறகு வற்றல் குழம்பு வைக்கும்போது பயன்படுத்தலாம்)
 
  0 Comments
 
Login / to join the conversation1