முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் என்ற கீரையின் பெயரே முடமாக்கிடும் மூட்டு வலியைப் போக்குவதால் வந்ததோ! மருந்தில் கூட ருசியான ரெசிப்பி செய்யமுடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும் இந்த ரெசிப்பிக்கள்... படித்துப் பார்த்து கட்டாயம் செய்து சாப்பிடுங்கள்! முடக்கத்தான் தோசை மற்றும் பிரண்டை சட்னி...
 
முடக்கத்தான் தோசை, Mudakkathan dosai
 

ஈஷா ருசி

முடக்கத்தான் என்ற கீரையின் பெயரே முடமாக்கிடும் மூட்டு வலியைப் போக்குவதால் வந்ததோ! மருந்தில் கூட ருசியான ரெசிப்பி செய்யமுடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும் இந்த ரெசிப்பிக்கள்... படித்துப் பார்த்து கட்டாயம் செய்து சாப்பிடுங்கள்! முடக்கத்தான் தோசை மற்றும் பிரண்டை சட்னி...

முடக்கத்தான் தோசை

தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி
சீரகம் - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
அரிசி மாவு - 1 கப்
தோசை மாவு - தேவையான அளவு

செய்முறை:

முடக்கத்தான் கீரை, சீரகம், வர மிளகாய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன் அரிசி மாவு, தோசை மாவு, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து கரைத்து அரைமணி நேரம் விட்டுவைக்கவும். தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு குறைந்த தீயில் தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தோசையை தக்காளி சட்னியுடன் பரிமாறலாம். இதேபோல் இட்லியும் செய்யலாம்.

குறிப்பு: முடக்கத்தான் மூலிகை வகையைச் சேர்ந்தது. மூட்டு வலி நீக்கவல்லது.

பிரண்டை சட்னி

பிரண்டை சட்னி, Pirandai chutney

தேவையான பொருட்கள்:

பிரண்டை (காம்பு மற்றும் நார் நீக்கியது) - 100 கிராம்
ஆப்பிள் தக்காளி - 1
உளுந்தம் பருப்பு மற்றும் கடலைபருப்பு - 2 ஸ்பூன்
வரமிளகாய் மற்றும் புளி - தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - சிறிதளவு

செய்முறை:

உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இவையிரண்டையும் பொன்னிறமாக வறுத்து, அதனுடன் பிரண்டை மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் வரமிளகாய், உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிதம் செய்து, அரைத்த சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: அஜீரணக் கோளாறுகளை நீக்கவல்ல பிரண்டையும் மூலிகை வகையைச் சேர்ந்தது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1