ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல, மிதிவண்டி முதல் மெட்ரோ இரயில் வரை வந்துவிட்ட இக்காலத்தில், மேகாலயாவின் மக்கள் மேற்கொண்டுள்ள வழிமுறை கொஞ்சம் ஆச்சரியம்தான். அதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கை

படைத்தவனின் அன்பு பச்சை நிறமாய் பரவியிருக்கும் இந்த பூமியில் குளிர்வானம் பனியை பொழிந்திட இளங்காலை கதிரவனின் மிதமான சூட்டில் கண்விழிக்கும் உயிர்களெல்லாம் அமைதியாக வாழ்வது போல் இயற்கையும் அமைதியாகவே இருக்கிறது.

இந்த பாலம் உயிருள்ள பாலம் என்பதால் அவை மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதால் அவை நாளாக நாளாக அதன் பலம் அதிகரித்துக் கொண்டே வரும்.

சில நேரங்களில் இயற்கை பல பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தினாலும் அது உயிரினங்களின் நன்மைக்காகவே இருக்கும். அது போன்ற சமயங்களிலும் இயற்கையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யம் இருந்தால் நன்மை நமக்கு தான்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திட்ட நாட்களில் மனித வாழ்க்கை சிக்கல்கள் இல்லாமலே இருந்தது.

வேகமாய் ஓட நினைத்த மனிதன் இயந்திரத்தை படைத்து பின்னர் தன் வாழ்நாளையும் அந்த இயந்திரத்திடமே கொடுத்து விட்டான். இயற்கை இயல்பானது, மனதிற்கு இதமானது, என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இயற்கை பலமானது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதோ இந்த குட்டிச் செய்தி!

மேகாலயாவின் பாலங்கள்

மேகாலயாவில் உள்ள காஷி எனப்படும் மலைவாழ் இனத்தினர் பாலம் கட்டும் விதம் மிகவும் சுவாரசியமாக இருப்பதால் பலரின் கவனத்தையும் அது ஈர்த்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் இங்கே வெள்ளம் ஏற்பட்டதால் அந்த இடத்தை தாண்ட ஏதாவது ஒரு பாலம் கட்ட வேண்டியது இருந்தது.

இங்கே பாலங்கள் கட்டப் படுவதில்லை! வளர்கின்றன! இந்த மரத்தின் விழுதுகள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதை கவனித்த இந்த மலைவாழ் இன மக்கள் இதனை பாலம் ஏற்படுத்தப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சில பாலங்கள் நூறு அடிக்கும் மேல் நீளமானது. இவை முழுமையாக பயன்படுத்தும் நிலைக்கு தயாராவதற்கு பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன. இதன் விழுதுகள் முதலில் நீளமாக வளர்ந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சக்தி வாய்ந்ததாக ஆகும். சில பாலங்கள் 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்களையும் தாங்கும் திறன் வாய்ந்தது. இந்த பாலம் உயிருள்ள பாலம் என்பதால் அவை மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதால் அவை நாளாக நாளாக அதன் பலம் அதிகரித்துக் கொண்டே வரும்.

பல ஆயிரம் கணிப்பொறிகளை இணைத்தாலும் அது நம் மனித மூளைக்கு ஈடாகாது. பல வண்ண சாயங்களை பூசி தயாரித்தாலும் ஒரு மலரைக் கூட நாம் உருவாக்கிட முடியாது. இந்நிலையில் இயற்கையின் தனித்தன்மையையும் அதன் பிரம்மாண்டத்தையும் உணர்ந்து அதனை வணங்குவதே சிறந்தது.

ஒரு உயிர் தன்னை இந்த பூமியில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக எவ்வளவு ஆழமாக பலமாக போராடுகிறது என்பதை அந்த உயிருக்கு பாதிப்பு இல்லாமல் நமக்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்திக் கொண்ட இந்த மக்களிடமிருந்து நவீன உலகில் வாழும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.