மறக்கமுடியாத மஹாசிவராத்திரியில் நானும் ஒரு அங்கமானேன்!

மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிரமம் வரத்திட்டமிட்டிருந்த சைலேஷ் தம்பதிகள், தங்கள் மண்டல ஒருங்கிணைப்பாளரின் அலைபேசி அழைப்பின்பேரில் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக ஆசிரமத்தில் தங்கி தன்னார்வத் தொண்டுபுரிய பதிவு செய்திருந்தனர். இந்த சிறிய ஒரு உந்துதல் மறுப்பதற்கு இயலாத ஒரு மாபெரும் அற்புதத்தினை நிகழ்த்தியது எப்படி என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!
 

திரு.சைலேஷ் வெங்கடேசன்:
(மேலாண்மை இயக்குநர், மெட் ஜான்சன் கம்பெனி, மும்பை)

“ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி கற்றிருந்த நான் அவ்வப்போது ஈஷா யோக மையம் வந்து சென்றிருந்தாலும், ஏனோ மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொண்டதில்லை! உள்ளூர் மையங்களில் கலந்துகொள்ளும் அனுபவமும் நேரில் வந்து கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் அனுபவமும் ஒன்றாக இருக்காது” என மும்பையில் தன்னார்வத்தொண்டர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். மேலும், இந்த ஆண்டு கூடுதல் சிறப்புமிக்கதொரு நிகழ்வாய் மஹாசிவராத்திரி அமையவிருந்தது! இரவுமுழுக்க அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக எனது ஆர்வம் மிகுந்திருந்தது!

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றதும் சத்குருவின் நோக்கம் நிறைவேற நானும் எனது சிறிய பங்களிப்பை வழங்கியதும் நான் எனக்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.

யோகேஷ்வர லிங்க பிரதிஷ்டை மற்றும் 112 அடி ஆதியோகி திருமுக திறப்பு ஆகிய நிகழ்வுகள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்று சத்குரு அறிவித்ததற்குப் பின்னால் அதனை மறுக்க இயலவில்லை. அதற்குரிய பதிவு துவங்கியதுமே நானும் எனது மனைவியும் பெயரை பதிவுசெய்துவிட்டோம். மேலும், இதற்காக என்னை தயார்படுத்தும் விதமாக நான் 42 நாட்கள் சிவாங்கா சாதனாவை மேற்கொள்ள தீர்மானித்தேன். சாதனாவின் நிறைவாக தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரியின் ஏழாவது மலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பையும் எதிர்நோக்கி இருந்தேன்.

நானும் என் மனைவியும் தனித்துவம் மிக்க நிகழ்வாக அமையவிருந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தை நேரடியாக கண்டுகளிக்க சௌகரியமாக ஒருவார காலம் ஆசிரமத்தில் தங்கியபடி விழாவை எதிர்நோக்கி இருக்க தீர்மானித்திருந்தோம். நாங்கள் புறப்படுவதற்கு 15 நாட்கள் முன்னதாக அலைபேசியில் அழைத்த எங்களது மண்டல ஒருங்கிணைப்பாளர், மஹாசிவராத்திரி ஆயத்த பணிகளுக்கான தன்னார்வத் தொண்டு புரிய ஒருசில நாட்கள் முன்னதாக நாங்கள் புறப்படமுடியுமா என வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக நான் கோவை செல்வதற்கான  பயணச்சீட்டு முன்பதிவினை மாற்றி அமைத்தேன். “மாபெரும் நிகழ்விற்கு தன்னார்வத்தொண்டு புரியும் வாய்ப்பை நாம் ஏன் தவறவிடவேண்டும்!” என என் மனம் சொல்லியது!

ஈஷாவின் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நிகழ்வாக அமையவிருந்த அந்த மாபெரும் நிகழ்விற்கான தன்னார்வத் தொண்டில் நான் ஆசிரமம் வந்த உடனேயே ஈடுபடத் துவங்கிவிட்டேன். ஒவ்வொருநாளும் நான் தூங்கச்செல்லும் நேரம் நள்ளிரவாகவோ அதையும் தாண்டியதாகவோ அமையும். நான் எழுந்திருக்கும் நேரமோ எப்போதும் மாறாது, காலை 4 மணி! குருபூஜை மற்றும் எனது யோகப்பயிற்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு காலை 7:30 மணியளவில் செயல்செய்ய தயாராகிவிடுவேன்.

மஹாசிவராத்திரி நெருங்கும் வேளையில், தன்னார்வத்தொண்டை நிறுத்திவிட்டு வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையேறுவதற்காக செல்வதற்கு எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. “அது ஒரு கடினமான மலையேற்றம், நீங்கள் திரும்பி வரும்போது ஒருவேளை செயல்செய்ய முடியாதபடி மிகவும் சோர்வடைந்திருக்கலாம்” என்று சில தன்னார்வத்தொண்டர்கள் கூறினார்கள். “நீங்கள் மலையேறுவதை கைவிடுவது சிறந்தது, இங்கே செய்வதற்கு நிறைய தேவையிருக்கிறது” என அவர்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். அதே வேளையில், நான் சிவாங்கா சாதனாவின் அனுபவத்தால் ஆழமாக தொடப்பட்டிருந்ததால், அதனை சக்திவாய்ந்த செயல்முறையுடன் நிறைவுசெய்யவும் விரும்பினேன். 

வெறும் கால்களுடன் சிறிய டார்ச் விளக்கின் வெளிச்சத்துடன் பிப்ரவரி 22 புதன்கிழமையன்று இரவு 1:30 மணிவாக்கில் எங்கள் யாத்திரையைத் துவங்கினோம். ஆஉம் நமஷிவாய மந்திரத்தை சத்குரு சொல்லச்சொல்லி அறிவுறுத்தியிருந்தபோதும், மூச்சு விடுவது சிரமமாக இருக்குமென்பதால் நான் உச்சாடனை செய்யவில்லை. ஆனால், விரைவில் அந்த ஏழு மலைகளின் முடிவிலா படிக்கட்டுகள் எனக்கு மிகவும் சிரமமாகத் தோன்றின. சுற்றுமுற்றும் பார்த்தபோது என்னுடன் வந்த சிவாங்கா சாதகர்கள் தங்கள் நுரையீரல் பீறிட சத்தமாக உச்சாடனை செய்துகொண்டு வருவதைப் பார்த்தேன். அவர்கள் சிரமமின்றி மலையேறுவதை கவனித்தேன். நானும் அரைமனதுடன் உச்சாடனையில் இணைந்துகொண்டேன்.

அதன்பிறகு சிறிதுநேரத்தில், அந்த மந்திரம் எங்களின் ஒவ்வொரு படியிலும் சக்தியை வழங்குகிறது என்பதையும், அடுத்த படியை பார்க்க இயலாத அந்த இருளிலும் எங்களுக்கு தைரியத்தை தந்து முன்னேறச் செய்கிறது என்பதையும் புரிந்துகொண்டேன். நான் இன்னும் கூடுதல் தீவிரத்துடன் உச்சாடனையை தொடர்ந்தேன். தொடர்ந்து அந்த மந்திர உச்சாடனையின் சக்தி அதிர்வுகள் என்னை முழுவதும் ஆட்கொண்டது. அதோடு ஒருவித விவரிக்க இயலாத கதகதப்பான தன்மையை என்னிடம் உணரமுடிந்தது. அது நான் அணிந்திருந்த மெல்லிய மேலாடையை ஊடுருவிய சில்லென்ற காற்றை எதிர்த்து நிற்பதை உணரமுடிந்தது!

4000 அடி உயரத்திலுள்ள ஏழாவது மலையின் உச்சியை நாங்கள் காலை 5:45மணிக்கு அடைந்தோம். “42 நாட்கள் விரதமிருந்து இரவுமுழுக்க மலையேறி என் விரதத்தை முடித்து விட்டேன்” என்ற பேருவகையில் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர்  பெருகி என் கன்னங்களில் வழிந்தோடியது.

வெள்ளியங்கிரி மலை உச்சியிலுள்ள பழம்பெரும் வெள்ளியங்கிரி ஆண்டவரின்  கோயிலை தரிசித்த பிறகு, சத்குரு ஸ்ரீபிரம்மா ஸ்பாட் என அழைக்கப்படும் புனிதம் மிக்க இடத்திற்குச் சென்றோம். மலை உச்சியில் இருந்தபடி சூரியோதயத்தை பார்ப்பதற்கு ஈடான அற்புதம் வேறெதுவும் இருக்கமுடியாது. அந்தக் காலை நேரத்தில் முதல் சூரியகதிரால் உண்டான உடல் வெப்பத்தை மறக்க முடியாது!

“42 நாட்கள் விரதமிருந்து இரவுமுழுக்க மலையேறி என் விரதத்தை முடித்து விட்டேன்” என்ற பேருவகையில் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் பெருகி என் கன்னங்களில் வழிந்தோடியது.

காலை 7:45 மணிவாக்கில் நாங்கள் மலையிலிருந்து கீழிறங்க ஆரம்பித்தோம். மேலே ஏறுவதைக் காட்டிலும் கீழிறங்குவது இன்னும் சற்று கடினமாகத்தான் இருக்குமென தேர்ந்த சிவாங்கா சாதகர்கள் என்னிடம் சொல்லியிருந்தது என் மனதில் இருந்தது. ஆனால், என்னுடைய காரண அறிவு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. நான் நினைத்தது எவ்வளவு தவறானது என்பதை நான் உணரும் வகையில் அந்த அனுபவம் இருந்தது. ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதும் பெரிய பிரயத்தனமாக இருந்தது. எனது பாதங்கள் வலியில் கடுகடுத்தன. ஒவ்வொரு சிறிய கல்லும் எனக்கு வலியை வழங்குவதற்காக பிரத்யேகமாக எனக்காகவே அங்கு இருப்பதாக நான் நினைத்தேன். அதோடு வெயில் ஏற ஏற தரையும் சூடாகியதால் அந்தப் பயணம் மிகவும் கொடுமையாகவே இருந்தது. இந்நிலையில் மந்திர உச்சாடனையை ஒரு உறுதுணையாக தொடர்ந்து மேற்கொண்டு, மதியம் 12:30 மணிக்கு கீழிங்கினேன். ஏறுவதற்கு எடுத்துக்கொண்ட நேரத்தைக்காட்டிலும் 1 மணிநேரம் அதிகம்!

அதன்பிறகு விரைவாக ஒரு குளியல் மற்றும் மதிய உணவு எடுத்துக்கொண்டு, தியானலிங்கம் தரிசித்த பிறகு உடனடியாக புத்துணர்ச்சி கொண்டேன். புத்துணர்ச்சியாக உணர்ந்த நான் உடனடியாக மஹாசிவராத்திரி நிகழ்வு நடைபெறவிருக்கும் மைதானத்திற்கு மாலை 3 மணிக்கு தன்னார்வத்தொண்டில் ஈடுபடத் துவங்கினேன். அதன்பின் இரவு தாமதமாகத்தான் தூங்கச் சென்றேன். அடுத்தநாள் அந்த மாபெரும் நிகழ்வு எதிர்நோக்கி இருக்க, சிலமணிநேரங்கள் மட்டுமே தூங்கிவிட்டு காலையில் மீண்டும் நிகழ்விடத்திற்கு வந்துவிட்டேன். அந்த தகிக்கும் வெயிலில் பங்கேற்பாளர்களுக்கான இருக்கைகளை எடுத்துச்சென்று ஆங்காங்கே சரியான இடத்தில் வைக்கும் பணியில் மைதானத்தில் அங்குமிங்கும் வலம் வந்தேன். மலையேற்றம் மற்றும் தூக்கமின்மை காரணமாக எந்த ஒரு சிறு அயர்வைக்கூட நான் உணரவில்லை!

நான் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் இரவுமுழுக்க விழித்திருந்தேன். மேலும் பெரும்பாலான நேரங்கள் நான் நின்றுகொண்டுதான் இருந்தேன். ஆதியோகியின் திருமுகம் முன்பு கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்கள் வெள்ளம் நிறைந்திருக்க பிரதமரின் உரையை கேட்டதுமட்டுமல்லாமல், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றதும் சத்குருவின் நோக்கம் நிறைவேற நானும் எனது சிறிய பங்களிப்பை வழங்கியதும் நான் எனக்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.

கடந்த 76 மணிநேரத்தில் நான் 4 மணி நேரங்கள் மட்டுமே தூங்கியிருந்தேன். ஆனாலும் நான் சோர்வில்லாமல் சக்தி நிரம்பியபடி இருந்தேன். அனைத்து காரணங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ இயலாது, ஆனால் அதனை அனுபவத்தால் உணரலாம்! - அதுதான் அருள்!

குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது. 

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018 நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1