மஹாசிவராத்திரி 2017 - யோகேஷ்வரர் பிரதிஷ்டை!
112 அடி உயரமுள்ள ஆதியோகி திருமுகச் சிலையுடன், யோகேஷ்வர லிங்கத்தையும் சத்குரு அவர்கள் மஹாசிவராத்திரி அன்று பிரதிஷ்டை செய்வார். வாழ்வையே மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம். ஈஷா யோகா வகுப்பு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும்.
 
மஹாசிவராத்திரி 2017 - யோகேஷ்வரர் பிரதிஷ்டை!, Mahashivratri 2017 yogeshwarar prathishtai
 

சத்குரு:

மாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரியைத்தான் மஹாசிவராத்திரி என்கிறோம். விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப் பெரும் உறுதுணையாக இருக்கிறது. மஹாசிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையிலிருக்கிறது. அந்நாளன்று விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம், ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஓரு சூழ்நிலை உருவாகிறது.

இந்த மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தில் நீங்களும் பங்குபெற வேண்டும். இந்த மஹாசிவராத்திரி இரவு, வெறுமனே கண்விழித்ததாக இல்லாமல், உங்கள் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வூட்டக் கூடிய இரவாக அமையட்டும். நாம் சிவன் என்றழைக்கும் அந்த பரந்திருக்கும் வெறுமைத் தன்மையை, அந்த இரவில், குறைந்தது நீங்கள் ஒரு கணமாவது உணர்ந்திட வேண்டும். அதற்கு என்னுடைய அருளும், ஆசியும் எப்போதும் இருக்கும்!

யோகேஷ்வரர் பிரதிஷ்டை!

இதுபோன்ற ஒரு பிரதிஷ்டையில் பங்கு பெறுவது மிகச் சக்தி வாய்ந்தாக இருக்கும். இங்கு வழங்கப்படுவதை, நீங்கள் முயன்று பெறவேண்டுமென்றால், பல பிறவிகளுக்கு அதிதீவிர ஆத்ம சாதனைகள் தேவைப்படும். இங்கோ, அந்தச் சக்தி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் உள்வாங்கிக் கொண்டால், நீங்களும் அதிர்வுகளோடு ஒளிவீசுவீர்கள்.

ஆன்மீக சாத்தியங்களில் திளைத்திருக்க வேண்டிய தருணமிது
கருணையின் வெள்ளத்தில் மூழ்க வேண்டிய இடம் இது
வாருங்கள்! முக்திக்கான கதவுகள் திறக்கப்படுகிறது, பங்கேற்றிடுங்கள்!


குறிப்பு:

112 அடி உயரமுள்ள ஆதியோகி திருமுகச் சிலையுடன், யோகேஷ்வர லிங்கத்தையும் சத்குரு அவர்கள் மஹாசிவராத்திரி அன்று பிரதிஷ்டை செய்வார். வாழ்வையே மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம். ஈஷா யோகா வகுப்பு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும்.

பிப்ரவரி 20 - 23
ஈஷா யோக மையம், கோவை

முன்பதிவு செய்ய:

யோகேஷ்வரர் பிரதிஷ்டைக்கு முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தொலைபேசி: 83000 83111

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1