அது 1992ஆம் ஆண்டு. ஆன்மீகத் தலங்களிலும் கோவில் நாள்காட்டிகளிலும் மஹாசிவராத்திரி நாள் மிகவும் முக்கியமாக இருந்தாலும், நான் அதனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இருப்பினும் மஹாசிவராத்திரி என் வாழ்வில் மிகவும் பிரமிக்கத்தக்க விதத்தில் நிகழ்ந்தேறியது.

28 வருடங்களுக்கு முன்…

நான் அப்போது தான் நவம்பர் 1991ல் ஈஷா யோக வகுப்பு முடித்திருந்தேன். சத்குருவை சந்தித்த பிறகு என் வாழ்வில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நாளிலிருந்து தினமும் ஏதோவொன்று புதிது புதிதாக நடக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்த ஒரு பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட பாவ ஸ்பந்தனாவில் நான் பங்கேற்றேன். அப்போது நடந்த பாவ ஸ்பந்தனாக்கள் மிகவும் வித்தியாசமானவை. நாங்கள் முப்பது பேர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றோம். வகுப்பு நடக்க ஒரு சின்ன கூடாரம், திறந்த வெளியில் சமையல், அருகிலிருந்த வாய்க்காலில் குளியல் என்று அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சத்குரு நாள் முழுவதும் எங்களுடன் இருந்தார். இரவுகளில் நாங்கள் நெடுந்தூரம் நடந்து செல்வோம். மிகவும் குறைவாகவே உறங்கினோம்.

நாங்கள் ஈடுபட்ட ஒவ்வொரு செயல்முறையும் மிகவும் தீவிரமாக இருந்தது. மரண தியான (Death meditation) செயல்முறையின் போது இவ்வுலக நிகழ்விலிருந்து நான் நழுவிவிட்டேன். என்னை மீண்டும் இவ்வுலகிற்குள் கொண்டுவர சத்குருவிற்கு சிறிது நேரம் பிடித்தது. அந்த இடைப்பட்ட சிறிது நேரத்தில், நான் எனது உயிரற்ற உடலைப் பார்க்க முடிந்தது. என் முகமெங்கும் ஈக்கள் தொற்றியிருந்தன. அனுபவப் பூர்வமாக பலப்பல அம்சங்கள் நிகழ்ந்தேறின. அவற்றை புரிந்துகொள்ளும் நிலையிலோ அல்லது அவை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தொடர்புபடுத்திப் பார்க்கும் நிலையிலோ நான் அப்போது இல்லை. அந்த விஷயங்களை, எவ்வித அர்த்தமும் கற்பிக்க முயற்சிக்காமல், என்னைக் கடந்து போகவிட்டேன்.

யாரோ எனது தொண்டையை பூட்டிவிட்டது போன்ற ஒரு நிலை…

அதன் பிறகு திடீரென ஒரு நாள் என்னால் ஒரு சிறு துளி நீரைக் கூட விழுங்க முடியாமல் போனது. ஒரு கவளம் உணவைக் கூட என்னால் விழுங்க முடியவில்லை. யாரோ எனது தொண்டையை பூட்டிவிட்டது போன்ற ஒரு நிலை. எதுவும் சாப்பிட முடியாமல் இது போல சில நாட்கள் சென்றது. மிகவும் கவலைப்பட்டேன், பசியினால் அல்ல, அது ஒரு விசித்திரமான உணர்வாகவும் மரத்துப் போனது போன்றதொரு உணர்வைத் தந்ததாலும் மிகவும் கவலைப்பட்டேன்.

சத்குருவின் அசையாத மௌனம் ...

அதனால் உள்ளூர் ஈஷா ஒருங்கிணைப்பாளரை அழைத்து என்னுடைய நிலையை விவரித்தேன். அதற்கு அவர் சத்குருவை அணுகுமாறு கூறினார். ஆனால் சத்குருவை எங்கு கண்டுபிடிக்க? அந்த நாட்களில் ஆசிரமமும் இல்லை, அலைபேசிகளும் இல்லை. அது மட்டுமில்லாமல் சத்குரு எப்போதும் தொடர்ந்து பயணத்திலேயே இருந்ததால், அவரை தொலைபேசி மூலமும் அணுகமுடியவில்லை. எப்படியோ சத்குரு ஒரு தியான அன்பரின் வீட்டில் தங்கியிருப்பதாக அறிந்து, எனக்காக சத்குருவிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன். அந்த தியான அன்பரோ, சத்குரு மௌனத்தில் இருக்கிறார் என்று மிகவும் சர்வசாதாரணமாக என்னிடம் கூறினார்.

அப்படியென்றால் ஒரு துண்டு சீட்டில் எழுதி சத்குருவிடம் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அதுவும் சாத்தியமில்லை எனவும் அவரே சத்குருவை பார்ப்பதில்லை என்றும் அவ்வப்போது கூடையில் பழங்களை எடுத்துச்சென்று வைத்துவிட்டு வருவதாக மட்டும் கூறினார். அவர் பத்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதாகவும் தன்னை எந்த சூழ்நிலையிலும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் குறிப்பிட்டதாகவும் கூறினார். அவர் சமாதியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்று தொலைபேசியில் முணுமுணுத்தார். இது என்னை ஆறுதல்படுத்தும் என்று எண்ணி அவர் இவ்வாறு கூறினார். எவ்வளவு நாள் இப்படி இருப்பார் என்று நான் கேட்டேன். மஹாசிவராத்திரி வரையில் என்று அவர் கூறினார். இப்படித்தான் மஹாசிவராத்திரி என் வாழ்வில் ஒரு விசித்திரமான வகையில் நுழைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மறக்க முடியாத மஹாசிவராத்திரி..

மஹாசிவராத்திரிக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. எனது நிலையோ உணவும் நீரும் இன்றி அப்படியே தொடர்ந்தது. அதற்குள்ளாகவே, சத்குரு மௌனத்தில் இருப்பதாகவும் மஹாசிவராத்திரி இரவன்று அவர் தனது மௌனத்தை முடிப்பதாகவும் செய்தி பரவியிருந்தது. அந்த நாள் சுமார் ஆயிரம் மக்கள் அந்த திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர். மஹாசிவராத்திரிக்காக வந்திருப்பதை விட சத்குரு அன்று மௌனத்தைக் கலைக்கிறார் என்பதற்காகவே வந்திருந்தனர்.

சத்குருவை அழைப்பதற்காக அந்த தன்னார்வத் தொண்டரின் வீட்டிற்குச் சென்ற விஜியும் மற்ற சில தியான அன்பர்களும் சத்குருவின் நிலையைக் கண்டு திகைத்துப் போயினர். பேசும் நிலையிலோ உடம்பை அசைக்கும் நிலையிலோ சத்குரு இல்லை. பத்மாசனத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்ததால் அவருடைய கால்கள் மரத்துப் போயும் முழங்கால் முட்டி வீங்கியும் இருந்தது. அவரை நகரச் செய்வதற்கே இரண்டு பேர் தங்களின் கைகள் கொண்டு தாங்கிப் பிடிக்க வேண்டியிருந்தது. அவரை இசை, நடனம் என்று ஆரவாரமாக வரவேற்று மேடை மேல் அமரச் செய்தனர். அவ்வளவு உற்சாக சூழ்நிலையிலும் கூட சத்குருவால் பேச முடியவில்லை. தொடர்ந்து மௌனமாக இருந்து கொண்டே எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சத்குருவின் நிலையைக் கண்டு மக்கள் அனைவரும் உணர்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்தனர். ஒரு மூத்த ஆசிரியர் மஹாசிவராத்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்; ஆனால் மக்கள் சத்குருவிற்கு என்ன நடந்தது என்பதில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில்தான் சத்குருவிடம் சில அசைவுகள் தெரிந்தன. அப்போது அவர் எங்களை ஒரு சக்திவாய்ந்த தியானத்திற்கு அறிமுகப்படுத்தினார். அந்த தியானத்திற்குப் பிறகு அவர் புன்னகைத்தார். அவ்வளவுதான், அதன்பின் அந்த சூழ்நிலையே மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் சந்தோஷம், சிரிப்பு, ஆட்டம், பாட்டம் என்றிருந்தது.

கற்பனை செய்து பாருங்கள்! லட்சக்கணக்கான மக்கள் மௌனமாக சம்மணமிட்டு, அசைவற்ற தியான நிலையில், ஒளி குறைந்த அந்த மகாசிவராத்திரி மைதானத்தில், அந்த இரவு முழுவதும், சத்குருவுடன் அமர்ந்திருப்பதை!

அதன்பின், உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் சத்குருவை மெதுவாக அணுகி, என் நிலையைப் பற்றி விளக்கினார். அவர் என்னைப் பார்த்து விட்டு, எனக்கு சிறிது எலுமிச்சை சாறை தயார் செய்து வழங்கும்படி அவரிடம் கூறினார். அவர் எனக்கும் சத்குருவிற்கும் சேர்த்து எலுமிச்சை சாறு தயார் செய்து வழங்கினார். நான் சாறை அருந்திய போது அது என் தொண்டைக்குழிக்குள் எளிதாக சென்றது. இப்படித்தான் மஹாசிவராத்திரி என் வாழ்வில் ஒரு விசித்திரமான விதத்தில் நுழைந்தது.

ஈஷா யோக மையம் உருவானது…

இது எதேர்ச்சையாக இருக்கலாம் அல்லது மக்களின் மிகையான கற்பனையாக இருக்கலாம்., இந்த மஹாசிவராத்திரி இரவிற்குப் பிறகு தான், ஈஷா யோக மையம் அமைப்பதற்கான பணி மிகவும் துரிதமாக நடந்தது என்று எங்களில் பலர் நம்பினோம். உதாரணத்திற்கு, ஒரு வருடமாக, யோக மையம் அமைப்பதற்கான இடங்களை நாங்கள் தேடினோம். ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்த எந்த ஒரு இடத்திற்கும் அவர் ஒப்புதல் அளிக்காமலேயே இருந்தார். ஆனால் அந்த இரவிற்குப் பிறகு, தற்போது ஈஷா யோக மையம் அமைந்திருக்கும் இடத்திற்கு, ஒப்புதல் வழங்கினார். இந்த நிலம் எங்கள் கைகளுக்கு கிடைத்த விதமும் மிகவும் விசித்திரமானது. அது மிக குறுகிய காலத்திலேயே எங்கள் கைகளுக்குக் கிடைத்தது. அந்த நிலம் விற்பனைக்காக இருக்கவும் இல்லை; அந்த நிலத்தின் சொந்தக்காரர் அதனை விற்கும் முடிவிலும் இல்லை. எங்களிடம் அதை வாங்குவதற்குத் தேவையான பணமும் இருந்திருக்கவில்லை.

சமீபத்தில் சத்குருவிடம் இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தேன். சத்குரு அந்த நாளை நினைத்து சிரித்தார். அதன் பிறகு, அவர், “இத்தனை விதமான சர்க்கஸ் செய்வதை விட ஒரு மஹாசிவராத்திரியில் நான் மேடையில் வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும், முழு இரவும்“என்று கூறி மேலும் சிரித்தார். கற்பனை செய்து பாருங்கள்! லட்சக்கணக்கான மக்கள் மௌனமாக சம்மணமிட்டு, அசைவற்ற தியான நிலையில், ஒளி குறைந்த அந்த மகாசிவராத்திரி மைதானத்தில், அந்த இரவு முழுவதும், சத்குருவுடன் அமர்ந்திருப்பதை!

அது ஒரு விசேஷமான விசித்திரமான மஹாசிவராத்திரியாக இருக்கும் தானே!

இந்த மஹாசிவராத்திரியும் மிகவும் விசேஷமான மஹாசிவராத்திரியாக உங்களுக்கு அமைய, வருகை தாருங்கள், மார்ச் 4 அன்று, ஈஷா யோக மையத்திற்கு ! ! !

msr-nl-banner