சென்னையிலுள்ள ஈஷாவின் மஹாமுத்ரா உணவகத்திற்கு கிடைத்துள்ள ஒரு மதிப்புமிக்க விருது பற்றியும், மஹாமுத்ராவின் சிறப்புகள் மற்றும் பதார்த்த வகைகள் பற்றியும் சில வரிகள் இங்கே!

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் Food guide எனும் இதழ், சென்னையிலுள்ள உணவகங்களை மதிப்பீடு செய்து விருது வழங்குகிறது. இதன்மூலம், சென்னையிலுள்ள சிறந்த உணவகங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. இவ்வருடம் சைவ உணவுகளை வழங்குவதில் சிறந்த உணவகம் என்ற விருதினை நமது ஈஷா மஹாமுத்ரா உணவகம் பெற்றுள்ளது.

இந்த உணவகம், நகர மக்கள் இழந்து வரும் உணவுகளான கம்பு, சோளம், ராகி போன்ற சத்துமிக்க உணவுப் பொருட்களில் ஆன பல ரெசிபிகளை வழங்குகிறது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள Isha Lifeல் அமைந்துள்ளது மஹாமுத்ரா உணவகம். சென்னையிலிருக்கும் பல ஆயிரம் உணவகங்களில், ஈஷா மஹாமுத்ரா உணவகம் எப்படி சிறந்தது எனப் பெயர் பெற்றது? மஹாமுத்ரா சென்னையின் மற்ற ரெஸ்டாரண்டுகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது?!

பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்ற உணவுகள் நகர மக்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதித்து வரும் வேளையில், ஈஷா மஹாமுத்ரா பாரம்பரிய உணவு வகைகளை கைதேர்ந்த சமையல் நிபுணர் குழுவினர் மூலம் சுவையாக செய்து, விருந்து படைக்கிறார்கள். உணவு வகைகள் ஆர்கானிக் அதாவது, ரசாயனம் உபயோகிக்காமல், இயற்கை விவசாயத்தின் மூலம் பெறப்பட்ட உணவுப் பொருட்களால் தயாரிக்கப்படுவது இதில் சிறப்பம்சமாகும்.

அரிசி உணவை சாப்பிட்டு, சாப்பிட்டு மாற்று உணவைத் தேடும் நகரவாசிகளுக்கு, பிரத்யேகமாக இங்கு கோதுமை தாளிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக தென்னிந்தியாவின் பாரம்பரிய பதார்த்தங்களான இட்லி, வடை, தோசை, மெதுவடை, ஃபில்ட்டர் காஃபி போன்றவை தரமுடனும் சுவையுடனும் வழங்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தனது சேவையை வழங்கும் மஹாமுத்ரா உணவகம், மஞ்சள் ஒளி விளக்கின் நெஞ்சை அள்ளும் ஒளிவெள்ளத்தில் சுத்தமான பாத்திரங்களும் டேபிள்-மேசைகளும் பார்க்கப் பார்க்க கண்களுக்கு குளுமை சேர்க்கின்றன. அதோடு, சுற்றிலும் இருக்கும் கண்ணாடி சுவர்களுக்குப் பின்புறத்திலிருந்து எட்டிப் பார்க்கும் மூங்கில் மரங்களும் வண்ணமிகு மலர்ச் செடிகளும் அங்கு ரம்யமான சூழலை உருவாக்குகின்றன. வாகனங்கள் நிறுத்துவதற்கென பிரத்யேக இடமும் இங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்களது குடும்ப விழாக்கள் மற்றும் அலுவலகங்களின் சிறப்பு நிகழ்வுகளில் மஹாமுத்ராவின் கேட்டரிங் சேவையையும் பெறமுடியும்.

மாதந்தோறும் பாரம்பரிய உணவுத் திருவிழா!

ஜூன் மாதத்தில் நிகழும் "முக்கனி உணவுத் திருவிழா" மஹாமுத்ரா வாடிக்கையாளர்களிடையே பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

மஹாமுத்ரா உணவகத்தில் ஒவ்வொரு மாதமும், அந்தந்த மாதத்தில் நிகழும் முக்கிய பண்டிகையை முன்னிறுத்தி உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. உதாரணமாக, கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, வெண்ணெய், பால் போன்ற பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களோடு அம்மாத உணவுத் திருவிழா கொண்டாடப்படும். ஓணம் திருவிழாவையொட்டி, கேரளத்தின் பாரம்பரிய உணவுப் பதார்த்தங்களை பிரத்யேகமாக செய்து வழங்குகிறார்கள். இன்றைய காலத்தில் ஒரு சராசரி ரெஸ்டாரென்டிற்கு நாம் செலவு செய்யும் அதே பட்ஜெட்டில் இங்கு இத்தனை வகையான உணவுகள் தரத்தோடும், சுவையோடும், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் வழங்கப்படுவது மஹாமுத்ராவின் தனிச்சிறப்பு.

ஜூன் மாதத்தில் நிகழும் "முக்கனி உணவுத் திருவிழா" மஹாமுத்ரா வாடிக்கையாளர்களிடையே பிரசித்தி பெற்ற ஒன்றாகும். முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றின் சீசனாக இருக்கும் ஜீன் மாதத்தில், அவற்றைக் கொண்டு மாங்காய் சாதம், கிச்சடி, பலாப்பழ பாயசம், பலாக்காய் பிரியாணி, வாழைத் தண்டு ஜூஸ், பொறியல், வாழைக்காய் கூட்டு போன்ற பலவகைப் பதார்த்தங்களை மக்களுக்கு வழங்கி சுவை நரம்புகளுக்கு விருந்தாக்குகிறார்கள்.

விருது தந்தது ஏன், எப்படி...?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சிறந்த சைவ உணவகத்திற்கான விருது (Best Pure Vegetarian, Casual Dining) கிடைத்திருப்பது, ஈஷா மஹாமுத்ராவின் தரத்தையும் சுவையையும் பறைசாற்றுகிறது.

உணவு தொழிற்துறையினர் மத்தியில் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் இந்த விருது மஹாமுத்ராவிற்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்படத்தக்க ஒன்றாகும். Food guide இதழின் உணவு விமர்சகர்கள் சென்னையிலுள்ள உணவகங்களுக்கு வருகைதரும் முகம்தெரியாத நபர்களிடம் முதலில் கருத்துக் கேட்கிறார்கள். பின்பு தாங்களே வந்து உணவகத்தில் சாப்பிட்டுப் பார்த்து தங்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பின் அவர்கள் தரும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் உணவகங்களிடையே இணையதளத்தில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்படியாக அதிக புள்ளிகள் பெரும் உணவகம்தான் சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மஹாமுத்ரா உணவகத்தின் R&D தலைவர் திருமதி. மீனா தேனப்பன் இதுபற்றி கூறுகையில்...

"சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் 2010ல் உருவாக்கப்பட்ட இந்த உணவகம், நகர மக்கள் இழந்து வரும் உணவுகளான கம்பு, சோளம், ராகி போன்ற சத்துமிக்க உணவுப் பொருட்களில் ஆன பல ரெசிபிகளை வழங்குகிறது. அதிகப்படியான எண்ணெய் சேர்க்காமல் வீட்டு சமையலைப் போன்ற தரத்துடனும் சுவையுடனும், பாரம்பரிய கார-சார அரிசி சாப்பாட்டுடன் மினி இட்லி, மசாலா தோசை, அக்கி ரொட்டி, மொரு மொருப்பான ஸ்பிரிங் ரோல், ச்சீஸ் வெஜிடபிள்ஸ், ச்சீஸ் சான்ட்விச் போன்றவையும் இங்கே ருசிக்கலாம்!" என்கிறார்.

ஈஷா லைஃபின் மேல்தளத்தில் சத்குரு சந்நிதி இருப்பதால் அங்கு தியானம் செய்ய உகந்த சூழல் நிலவுகிறது. கீழ்த்தளத்தில் அமைந்துள்ள ஈஷா ஷாப்பியில் ஈஷா தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. ஈஷாவின் உடற்பயிற்சி மையமும் அங்கு இயங்கி வருகிறது.

சென்னையின் பரபரப்பான மயிலாப்பூர் பகுதியில் இப்பபடியொரு இடமா என்ற எண்ணம் அந்த இடத்தைப் பார்த்ததும் தோன்றுவதில் ஆச்சரியம் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சென்னையின் இரைச்சலிலிருந்து விலகி, அமைதியும் அழகும் நிறைந்த ஒரு இடமாக ஈஷா லைஃப் அமைந்துள்ளது.

மஹாமுத்ரா உணவகம் மூலம் கிடைக்கும் லாபம் ஈஷாவின் சமூக நலத்திட்டங்களுக்குப் போய்ச் சேருகிறது.

மயிலாப்பூரில் நாகேஷ்வர் ராவ் பார்க்கிற்கு அருகாமையில் ஈஷா லைஃப் அமைந்துள்ளது.

முகவரி:
ப.எண்: 50, புது எண்:117, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை.
தொலைபேசி: 9840459955