மாயமாகிப்போன வாழ்க்கையின் காயங்கள்!

 

தீப்புண் காயங்களால் அடுத்தடுத்து பல சோதனைகளை சந்தித்தாலும் குருவின் அருளும் கருணையும் தன்னை எப்படி காப்பாற்றியது என்பதை அனுபவப் பகிர்வாக நம்மிடம் கூறுகிறார் திருமதி.மணிமொழி!

என் பெயர் மணிமொழி. நான் நெய்வேலி நகரத்தில் வசித்து வருகிறேன். 1994-95 ஆம் ஆண்டில் ஒரு பஸ் விபத்தில் எனக்கு தீக்காயம் ஏற்பட்டது. அதற்காக சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். தீவிர சிகிச்சைக்குப் பின் (ஸ்கின் கிராப்ட் செய்து) சுமார் ஒரு வருடம் மருத்துவமனையில் இருந்து பல சிகிச்சைகள் பெற்றேன். பின் வீட்டிற்கு வந்து 2 வருடங்கள் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தேன். பின் ஈஷா வகுப்பு முதன்முதலில் நெய்வேலி டவுன்ஷிப்பில் 1999 அக்டோபர் மாதம் நடந்தது. இந்த வகுப்பிற்கு என்னை திரு.சுந்தர்ராஜன் அண்ணன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார். நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். பின்பு அடுத்த மாதம் சத்குரு நடத்திய BSP வகுப்பில் கலந்து கொண்டேன். அப்போது, சத்குரு அவர்கள், “கவலைப்படாதே, இனி நடப்பதை பார்க்கலாம். நடந்து முடிந்ததைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று என்னைத் தெளிவுபடுத்தினார். பின் பல ஊர்களிலும், நெய்வேலியிலும் ஈஷா வகுப்புகளில் தன்னார்வத் தொண்டு செய்து வந்தேன்.

முதல் வாரத்தில் சற்று வலி குறைந்து நடந்தேன். இரண்டாவது வாரம் வாக்கிங் சென்று வந்தேன். மூன்றாவது வாரம் 5 முதல் 6 கிலோ மீட்டர் வாக்கிங் போனேன்.

2002ல் ஒரு முறை திடீரென்று எனக்கு கை, கால்கள் வீங்கின. உடனே நெய்வேலியில் ஒரு மருத்துவமனையில் 20 நாட்கள் இருந்து என்னவென்று கண்டு பிடிக்க முடியாமல், சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு கிட்னியில் பில்டரில் துவாரம் விழுந்து விட்டது என்றும், தீ விபத்து ஏற்பட்டபோது எனக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை, நான் எடுத்துக் கொண்ட மருந்துகள் கிட்னியை பாதித்து விட்டது என்றும் கூறினார்கள். இதற்கு நெப்ரோடிக் சிண்ட்ரோம் என்று கூறினார்கள். கிட்னியை சரி செய்ய ஸ்டீராய்டு தர வேண்டும். ஆனால் பக்க விளைவுகள் வரும் என்று சொல்லி என் கணவரிடம் கையெழுத்து வாங்கி ஸ்டீராய்டு கொடுத்தார்கள். இதனால் 65 கிலோ உள்ள என் உடம்பு 110 கிலோ எடை ஆகி உடம்பு மிகவும் ஊதி, முகம் வீங்கி வெடித்து போய் விடுவேன் போல் இருந்தேன்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பல லட்சங்கள் செலவாகியும் உடல்நிலை சரியில்லாது போய்விட்டதே என்று வேதனைப்பட்டு அழுது கொண்டு இருந்தேன். அப்போது சுந்தர்ராஜன் அண்ணன் அவர்கள் சத்குருவிற்கு கடிதம் எழுதச் சொன்னார்கள். நான் சத்குருவிற்கு கடிதம் எழுதினேன். சத்குரு உடனே என்னை ஈஷா யோக மையத்திற்கு வரச்சொல்லி என் உடல்நிலைக்கு பிரம்மச்சாரிணி அவர்கள் மூலம் சிகிச்சை அளித்தார்கள். என்னுடைய சாப்பாடு, பயிற்சி, மருந்து இவற்றின் மூலம் எனக்கு 45 நாட்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு என் எடையும் குறைந்து 85 கிலோவிற்கு வந்து என் கிட்னி பிரச்சினை சரியானது. முக்கியமாக ஸ்டீராய்டை படிப்படியாக குறைத்து நிறுத்திவிட்டார்கள்.

2003ல் அந்த சிகிச்சை பெற்றதற்கு பின் நான் கிட்னி பிரச்சினையில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுள்ளேன். என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி. நான் கிட்னி பிரச்சினையில் இருந்து முழுமையாக வெளிவந்த போதிலும் 2009ல் திடீரென்று என் கால்கள் அசைக்க முடியவில்லை. முதலில் வலது காலும், பின் இடது காலும் வலி என்றால் தாங்கமுடியாத வலி. வேதனையோடு என்னை நெய்வேலியில் இருந்து சென்னையில் உள்ள அதே பிரபல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அங்கு விஸிமி ஸ்கேன் அனைத்தும் பார்த்துவிட்டு கிட்னிக்கு கொடுத்த ஸ்டீராய்டு முட்டியை பாதித்துவிட்டது. இரண்டு முட்டியும் தேய்ந்து விட்டது. செயற்கை முட்டி சர்ஜரி உடனே செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நான் வீட்டிற்கு சென்று பின்னர் வருவதாக கூறிவிட்டு வந்துவிட்டேன்.

பின்னர் ஈஷா புத்துணர்வு மையத்திற்கு போன் செய்தேன். அவர்கள் புத்துணர்வு மையம் சார்பாக அப்போது நடக்கவிருந்த யோக மார்க்கா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். நான் ஈஷா மையத்திற்கு வரும்போது என்னால் நடக்க முடியவில்லை, கீழே அமர முடியவில்லை. அங்கே என்னை பல சிகிச்சைகளுக்கு தயார்ப்படுத்தினார்கள். முதல் வாரத்தில் சற்று வலி குறைந்து நடந்தேன். இரண்டாவது வாரம் வாக்கிங் சென்று வந்தேன். மூன்றாவது வாரம் 5 முதல் 6 கிலோ மீட்டர் வாக்கிங் போனேன். தற்போது இந்த இரண்டு ஆண்டுகளாக மருந்துகள் மூலமே என் முட்டி, கால் வலி குறைந்துள்ளது. செயற்கை முட்டி ஆபரேஷன் செய்யாமலேயே முட்டி சரியாகிவிட்டது. நான் இப்போது நலமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.

சத்குருவின் அருள் எனக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

ஈஷா புத்துணர்வு மையத்தில் உள்ள பிரம்மச்சாரிகளுக்கும், அங்குள்ள அலுவலர்களுக்கும் பயிற்சி கொடுத்தவர்களுக்கும் தெரபி கொடுத்த பெண்களுக்கும் என் அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1