மாமிசம் சாப்பிடுவது குற்றமா?
அசைவம் தவறா? சைவம் சரியா? இப்படியே ஆளாளுக்கு வாதிட்டு எதைச் சாப்பிடுவது என்று மாறுபட்ட கருத்துக்களோடு இருக்கையில், இதில் சத்குருவின் கருத்தென்ன? வழக்கம் போல் மாறுபட்ட சிந்தனைத் துளிகளை வழங்கியுள்ளார். அறிந்து கொள்ள மேலே படியுங்கள்..
 
மாமிசம் சாப்பிடுவது குற்றமா?, Maamisam sapidivathu kutrama?
 

அசைவம் தவறா? சைவம் சரியா? இப்படியே ஆளாளுக்கு வாதிட்டு எதைச் சாப்பிடுவது என்று மாறுபட்ட கருத்துக்களோடு இருக்கையில், இதில் சத்குருவின் கருத்தென்ன? வழக்கம் போல் மாறுபட்ட சிந்தனைத் துளிகளை வழங்கியுள்ளார். அறிந்து கொள்ள மேலே படியுங்கள்...

சத்குரு:

உணவு மேசையில் அமர்ந்திருக்கிறீர்கள்!

பலவிதமான பதார்த்தங்கள் நிரம்பி இருக்கின்றன. நீங்கள் உணவருந்தத் தயார். இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

ஆனந்தமாக இருந்தால், மனசுக்குள் திரைப்பட பாடலொன்று ஓடும். நட்போ, உறவோ அருகில் இருந்தால், அரட்டைக் கச்சேரி ஆரம்பிக்கும். அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தால் எதிலும் மனசு லயிக்காது. ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ, அப்போது உங்களை எரிச்சலும், கோபமும் எடுத்துச் சுவைத்துக் கொண்டு இருக்கும் சரிதானே!

இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன.

நீங்கள் படிக்கப் போவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதரின் கதை...

மஹாவீரர், ஒரு சத்ரியர். மாமிசம் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சாப்பிடும்போது, ‘இதுவும் உயிர்தானே, நாம் ஏன் இதைக் கொன்று சாப்பிட வேண்டும்? இது சரியல்லவே’ என்று ஒரு திடீர் சிந்தனை. அப்போதிருந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு முழுவதுமாக தாவர உணவுக்கு மாறினார். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இன்னொரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தபோது, அவர் எந்த மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தாரோ, அந்த மரம் அவர் பார்த்த எந்த விலங்கையும்விட, எந்தத் தாவரத்தையும்விட மிகவும் உயிரோட்டமாக இருப்பதை உணர்ந்தார். நான் இன்னும் தவறு செய்கிறேனே. இந்த மரத்திலிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிடுகிறேன். இதைச் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று நினைத்தார். அப்புறமென்ன, காய்கறிகளையும் பழங்களையும் உண்ண மறுத்தார். பழம் தானாகக் கீழே விழும் வரை காத்திருந்து, அதன் பிறகே அந்தப் பழத்தை எடுத்துச் சாப்பிட்டார். பழம் விழவில்லையென்றால் அவர் சாப்பிட மாட்டார். காய்கறிகள் உயிர்ப்போடு இருக்கும்போது அவற்றைச் சாப்பிடமாட்டார். அவை அழுக ஆரம்பித்த பிறகே சாப்பிடுவார்.

இப்படியே சில காலம் கடந்தது. ஒரு நாள் அழுகிய காய் ஒன்றை விழிப்புணர்வுடன் சுவைத்துக் கொண்டு இருந்தார் மகாவீரர். அப்போது அந்த அழுகிய காய்கறி மிகவும் உயிர்ப்புடன் இருப்பதைச் சட்டென உணர்ந்தார். அவ்வளவுதான்... இதுவும் இனி வேண்டாம் என எல்லாம் துறந்து பட்டினியாய் இருக்க ஆரம்பித்தார்.

12 வருடங்களில் 11 வருடங்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தார். அதாவது 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடுவார். மீண்டும் 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே அந்த ஒருவேளை உணவையும் சாப்பிடுவார். இப்படி 12 வருடங்களில் 11 வருட காலம் அவர் சாப்பிடவே இல்லை.

மகாவீரரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பிறகு ஒருநாள், ‘தனக்குள்ளும் உயிர் இருக்கிறதே, மற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த உயிரை மிகவும் துன்பப்படுத்துகிறோமே! என்று உணர்ந்தார். அதன் பிறகே வழக்கம்போல உணவருந்த ஆரம்பித்தார்.

இப்போது கேள்வி வருகிறது... எதை நாம் உண்ணலாம். எதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் உயிர் வாழ, எதையாவது கொன்றுதான் சாப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையின் தன்மை அப்படித்தான் இருக்கிறது.

தாவரங்களின் தன்மையைவிட விலங்கின் தன்மை மனிதனுக்கு நெருக்கமாய் இருப்பதால்தான், விலங்குகளைத் துன்புறுத்துவதை ‘அஹிம்சை’ என்றும் கருதுகிறோம். ஏனெனில் விலங்குகள் நம்மைப் போல் வாழ்கின்றன. நீங்கள் என் கையை அறுத்தால் ரத்தம் வருகிறது. ஒரு கோழிக்குஞ்சை அறுத்தாலும் ரத்தம் வருகிறது. அதனால்தான் நாம் விலங்கின் தன்மைக்கு நெருக்கமாய் இருப்பதாகக் கருதிக்கொள்கிறோம். உணர்ச்சியின் அடிப்படையில் நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் விலங்கு, தாவரம் இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நீங்கள் ஒரு விலங்கைத் துன்புறுத்தினாலும் தாவரத்தைத் துன்புறுத்தினாலும் அந்த இரண்டு உயிர்களுக்கும் வலியும் பாதிப்பும் ஒரே விதமாகத்தான் இருக்கும்.

இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன.

இப்போது செய்ய முடிவது ஒன்றுதான். சாப்பிடுவதையாவது நன்றியுணர்வுடன் சாப்பிடலாம்.

உணவின் ஒவ்வொரு கவளத்தையும் நன்றியுணர்வுடன் சாப்பிட வேண்டும். ஆம், நன்றியுணர்வுடன் சாப்பிட்டு பாருங்கள். என்ன சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆனந்தமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். சிறப்பான உடல் நலத்துடன் இருப்பீர்கள். இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும். பல உயிர்கள் நமக்காக இறக்கின்றன. சிறிதாவது நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டாமா? நமக்காக உயிர்விடும் உயிரினங்களுக்காக சிறிதாவது உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்தானே, நன்றியுணர்வுடன் சாப்பிடுங்கள், நம்மால் செய்ய முடிந்தது அதுதான்-நன்றி

 

mamisam-next-post

 
 
 
 
  20 Comments
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

Exactly...

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

best answer by guruji.........................

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

Namaskaram, you have the great sense of understanding in depth, great to have you here madan.

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

best answer. but it is difference between plant & animal. animal having 5th sense, but plant having only 1st sense. if we cut the plant, its the pain going to earth, so that only, it has growing again. but if we cut the animal, it has not growing again. please sorry to me if having any saying mistake. Vazhga Valamudan.

5 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

ஆகா மகாவீரருகே இந்த நிலைமையா?? ரொம்ப யோசிக்காதீங்க அப்பு !!! eat healthy and live healthy...

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

not wholesome answer, eat or not eat meat? yes or no?

4 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

no, it is his thought, Normaily the human is having UYIR. but if you cut hair or nail you will not get pain. like that, though the plants and trees are having UYIR. It will not get hurt when you pluck the fruits or vegetables.
How you are taking milk. IF you didn't take out the milk the cow will die.
all should avoid nonveg

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

Obviously what Sadhguru has given is lot more than an answer. To eat or not to eat meat is your choice. He has nothing to say about your choice. It is not about right or wrong and what you eat or not eat. The essence of the above answer is how you eat. Whether your whole being is overflowing with gratitude or it is just to fulfill your craving and taste buds while eating your food which is either a vegetable or an animal.

3 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

S wright Premnath babu, whether its your thought or from any other books? god has create fruits and vegetables for all living beings in the earth.

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

This is already clarified in the answer that we are relating ourselves more to animals than plants because of some kind of similarities. Even if we assume that we give the pain only to the earth (and not the plant itself) while eating vegetables, does it mean that it is ok give pain to earth and not to the animals which also came from mother earth? My understanding is that eating an animal with wholesome gratitude is more sensible than eating pure vegetarian food without any kind of thankfulness. However it is understood by our culture and told by Sadhguru and Isha's yoga programs that human body is more comfortable with vegetarian food.

3 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

So, In that way, are you saying we can eat egg? Because it is not hurting right...
We can keep arguing for all with some reasons... we can find reasons for all
It is all our own Perception... What Sadguru says is correct... If you like or don't like Non-veg doesn't matter - be thankful for whatever you are eating... Good Article!!!

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

I ever wish to be a vegitarian .but... while I cross the 'thalappaakattu shop' I leave this thought. its all fate..... shambo!

3 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

மாமிசம் சாப்பிடுவதும் சரி என்கிறீர்களா??

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

rAja kAnnan : pranams ! : சகோதரரே பரவாஇல்லை, நீங்கள் அந்த நேரத்தில் அதை செய்ய வேண்டும் என்று எதை நினைக்கிறீர்களோ அதை சரியாக செய்யுங்கள், அதை விட்டுவிட்டு அதை பற்றி சதா சர்வகாலமும் நினைத்து கொண்டு இருந்தால் அந்த எண்ணமே உங்களை கொன்றுவிடும்...

3 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

ஐயா ,வணக்கம் தங்களின் இந்த சிறந்த விளக்கத்தை என் நண்பரிடம் விவாதிக்கும் போது" மாமிசம் சாப்பிடுவது பாவம் " என்று "பகவத் கீதை " கூறப்பட்டுள்ளதே அதன் விளக்கம் என்ன என்று கேட்கிறார் .தங்களிம் இதன் விளக்கம் அறிய விரும்புகிறேன்

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

Surender Amarnath : Pranams ! : சகோதரரே மாமிசம் சாப்பிடுவதும் சாப்பிடாததும் உங்களது உரிமை அதை எவராலும் தடுக்கஇயலாது, நீங்கள் ஒரு உயிரை கொன்று சாப்பிடுவேயானில் அந்த உயிரை விட ஒரு சிறந்த இடத்தில உங்களால் இருக்க முடியும் அல்லது இருப்பீரானால் அதை செய்துதானே ஆவீர். அந்த சிறந்தது என்னவென்று அறிந்து விட்டால் ஒரு உயிரை கொள்ள மனம் ஒரு போதும் எண்ணாது, அந்த சிறந்தது எது என்று தேடுங்கள் அதை உங்களுக்குள் தேடுங்கள், அத்தேடல் உங்களுக்கு வரவில்லை என்ற நீங்கள் செல்லும் பாதை சரியானதாக இருப்பதில்லை, அத்தேடல் தொடங்கி விட்டால் இந்த மாயைக்கு விடை கிடைத்து விடும்
நன்றி ! ! !

2 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Just imagine yourself in the place of the animal you kill and eat.
Nature has provided food to be taken according to ones evolutionary state. If you are still in the animal nature ,then you have no other choice other than kill and eat.
When you are evolvet havd to higher state of thinking , you will feel for the victim and respond!
So it is totallay upto you according to your placing ...

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

நமஸ்காரம் அண்ணா, என்னோடு சேர்த்து இன்னொருவருக்கும் நீங்கள் ரிப்லை கமென்ட் செய்துள்ளீர்கள். உங்கள் எழுத்துகளில் அறிவுரைகள் அதிகமாக உள்ளது. ஆம் என்றால் அதைக் குறைத்துக் கொள்ளவும்.என்னுடைய இந்த அறிவுரக்கு மன்னிக்கவும்.

1 வருடம் 9 மாதங்கள் க்கு முன்னர்

*மாமிசம் மனித உணவா?*

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்.

*1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு* .

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

*2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.*

சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

*3. கால் விரல்கள்:-*

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

*4. குடல் அமைப்பு:*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.
காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

*5. சமநிலையான உடல் உஷ்ணம்:-*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

*6. மலத்தின் தன்மை*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.

இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

இனி மனநிலையில் ஆராயலாம்.

*1. வாழும் முறை :*

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

*2. இயல்பு :*

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

*3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :*

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

*மன இறுக்கம்:-*

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.

இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.

ஆனால்,
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )
உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்

மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.

இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.

எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
கோபம் இல்லாமலும்,
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது சாலச் சிறந்தது.

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

உண்மையைத்தான் எனக்கு எடுத்துரைத்து உள்ளீர்கள். இதுவரை எனக்கு தெரியாத ஒன்றை எனக்கு எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி. இனிமேல் குறைத்து கொள்கிறேன் நீங்கள் குறிப்பிட்டதை :)

நன்றி, வாழ்க வளமுடன் ! ! !

ரகுமூர்த்தி.