லிங்கபைரவி - ஜோதிடம் மருத்துவம் கடந்த மகத்துவம்!

பல வருடங்களாக குழந்தையின்றி இருந்து, மருத்துவரால் கைவிடப்பட்டு, ஜோதிடத்தை பொய்யாக்கி, லிங்கபைரவியின் அருளால் தனக்கு குழந்தை பாக்கியம் கிட்டியதை இங்கே பகிர்ந்துகொள்கிறார் திரு. மாணிக்கம்...
 

பல வருடங்களாக குழந்தையின்றி இருந்து, மருத்துவரால் கைவிடப்பட்டு, ஜோதிடத்தை பொய்யாக்கி, லிங்கபைரவியின் அருளால் தனக்கு குழந்தை பாக்கியம் கிட்டியதை இங்கே பகிர்ந்துகொள்கிறார் திரு.மாணிக்கம்...

திரு.மாணிக்கம்:

என் பேர் மாணிக்கம், எனக்கு 35 வயசாச்சு! என் வைஃப் பேரு சாந்தி, அவங்களுக்கு 28 வயசு! நான் போன 9 வருஷமா ஈஷாவோட தொடர்புல இருக்குறேன். எங்களுக்கு 2008ல கல்யாணம் நடந்துச்சு. ஆனா குழந்தை பாக்கியம் அமையவே இல்லை. நிறைய கோவிலுக்குப் போயிட்டு வந்தோம் ஒண்ணும் நடக்கல. மருத்துவமும் எங்கள கை விட்டுடுச்சு. நாங்க கன்சல்ட் பண்ண அந்த பிரபல டாக்டர் எங்களுக்கு குழந்தை பிறக்காதுன்னும், ஒரு குழந்தைய தத்தெடுக்க உதவுவதாவும் சொன்னாரு.

டாக்டர்கள் சொன்னதையும் மீறி, ஜோதிடர் சொன்னதையும் பொய்யாக்கி சுகப்பிரவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

என் மனைவி இத கேட்டு சுக்குநூறா உடைஞ்சு போயிட்டாங்க. நான் என்னோட மனசுல லிங்கபைரவிய நினைச்சுட்டு அந்த இடத்த விட்டு வெளியேறிட்டேன். அந்த டாக்டர் எங்களுக்கு மருந்து கொடுத்து 15 நாள் கழிச்சு வர சொன்னாரு. நான் அதையும் தவிர்த்துட்டேன்.

இது நடந்து கொஞ்ச நாள் கழிச்சு நான் ஆசிரமம் போனப்போ தற்செயலா சத்குரு லிங்கபைரவி பத்தி பேசினத கேட்கிற வாய்ப்பு கிடைச்சுது. உள்ளுக்குள்ள ஏதோ ஒரு உந்துதல் தெரிஞ்சதால தேவிக்கு 21 நெய் தீபம் மட்டும் வாங்கி ஏத்தி வச்சு, வேண்டிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

ஒரு மாசம் கழிச்சு, வழக்கமான ஒரு நாள், நான் வேலையில இருந்தப்போ, மதியம் 2 மணி போல என் மனைவிகிட்ட இருந்து போன் வந்துச்சு. தன்னோட பிரண்டோட ஹாஸ்பிடலுக்கு வந்திருப்பதா சொன்னாங்க. டாக்டர் அவங்க மாசமா இருக்கிறத கன்ஃபார்ம் பண்ணதா சொன்னாங்க. அந்த ஒரு விநாடி நான் மனப்பூர்வமா லிங்கபைரவிக்கும் சத்குருவுக்கும் நன்றி சொன்னேன்.

மூணாவது மாசம்னு நினைக்கிறேன் நைட் 12 மணி இருக்கும், நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன். என்னை எழுப்புன என் மனைவி, வயிறு வலிப்பதாவும், ரொம்ப பயமா இருப்பதாவும் சொன்னாங்க. லிங்கபைரவி குங்கும அபிஷேக போட்டோ பக்கத்தில இருப்பத காட்டி, கொஞ்சம் குங்குமத்தை நெற்றியிலும் வயித்துலேயும் பூசிட்டு படுத்துக்கோன்னு சொல்லிட்டு நானும் தூங்கிட்டேன்.

காலையில எழுந்தப்போ வயித்துவலி சுத்தமா இல்லன்னும், நான் சொன்ன மாதிரியே குங்குமம் தடவினதாவும் சொன்னாங்க.

என் மனைவி ஒல்லியாதான் இருப்பாங்க. பார்க்கிறவங்கல்லாம் ஆப்ரேஷன் செய்ய வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. நாங்க பார்த்த பிரபலான ஜோதிடர் ஒருவரும் மருத்துவச் செலவு செஞ்சாதான் குழந்தை பிறக்கும்னும், அதுவும் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறக்கும்னும் சொன்னாரு.

குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடையாதுன்னு டாக்டர்கள் சொன்னதையும் மீறி, ஜோதிடர் சொன்னதையும் பொய்யாக்கி 2012, செப்டம்பர் மாசம் 28ம் தேதி சுகப்பிரவத்தில ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சத்குருகிட்ட தான் பேர் வாங்கி வைக்கணும்னு ஆசிரமத்தில பேருக்கு பதிவு செஞ்சு காத்திருந்ததுல, அந்த பாக்கியமும் எங்க குழந்தைக்கு கிடச்சுது. லிங்கபைரவிக்கும் சத்குருவுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1