லிங்கபைரவி தேவி... அவளைப் பற்றினால் அல்லல்கள் தீரும்!
 
லிங்கபைரவி தேவி... அவளைப் பற்றினால் அல்லல்கள் தீரும்!, Lingabhairavi devi avalai patrinal allalgal theerum
 

திருமதி. செல்லக்குமாரி:

நமஸ்காரம், ஈஷா குடும்பத்தினருடன் நவராத்திரி கொண்டாட்டம் நிறைவுற்றதில் மிக்க மகிழ்ச்சி! இந்த ஆண்டு லிங்கபைரவி எங்கள் வீட்டிற்குள் ‘குடி’ வடிவில் குடிபுகுந்திருக்கிறாள். அவள் திடீரென்று எங்கள் வீட்டிற்கு வந்தது எப்படி... அந்த அற்புத நிகழ்வை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

chellakkumari-akka

3 வருடங்களுக்கு முன்பு நான் ஈஷாவிற்கு என் குடும்பத்துடன் சென்றேன். அப்போது பேருந்து பயணத்தின்போது, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் எங்களுக்கு அறிமுகமாயினர். பின்னர் இரண்டாம் முறை அந்த குடும்பத்தினர் நன்மை உருவம் பெறுவதற்காக வந்தபோதும் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்த நேரத்தில் அவர்கள் தங்களது துயரம் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்ததுடன், ஏதேனும் பணி வாய்ப்போ அல்லது தொழில் வாய்ப்போ இருந்தால் சொல்லும்படி கேட்டனர்.

அதன்பிறகு ஒருநாள், அந்த அண்ணா அலைபேசியில் அழைத்து தங்கள் குடும்பம் பற்றியும் யோகப் பயிற்சிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி என பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களது ஒரு குழந்தைக்கு சத்குரு நாமகரணம் சூட்டியுள்ளார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் தனது மனைவியின் தாலியை அடமானம் வைத்துக்கூட கடன் வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். நான் அதுகுறித்து மிகவும் வருந்தினேன். பின்பு திண்டுக்கல்லில் உள்ள எனது நண்பர் ஒருவரை வேலை வாய்ப்பு குறித்து சந்திக்குமாறு கேட்டுக்கொண்டேன். சில மாதங்களுக்குப் பின்னர், அவரால் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த இயலாத அளவிற்கு அவர்கள் மேலும் பல துயரங்களைச் சந்தித்திருந்தனர். அவர்கள் வீட்டிலுள்ள தீய சக்தியால் பீடிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன்; தங்கள் மொத்த சொத்துக்களையும் மற்றும் சொந்தபந்தங்களின் ஆதரவையும் இழந்திருந்தனர். உடனே அந்த வீட்டை காலிசெய்து வேறு வீட்டிற்கு மாறும்படி நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.

ஆச்சரியம் என்னவென்றால் அவர் எனது அழைப்பிற்காக காத்திருந்துள்ளார். அவர் இப்படிச் சொன்னார், “நான் தேவியிடம் நேற்றே சொல்லிட்டேன் அக்கா! குமாரி அக்கா தானாகவே என்னிடம் பேசணும், நானாக அவரிடம் பேசமாட்டேன். நான் கொஞ்ச பணமாவது திருப்பித் தரணும்.”

அவர்களிடம் வேறு வீடு மாறுவதற்கு தேவையான பணம் இல்லை என்பதை அறிந்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. நான் என்னுடைய கணவரிடம் அவர்களின் நிலைகுறித்து விளக்கினேன். எந்தவித தயக்கமும் இன்றி அவர்களுக்கு கடனுதவி செய்வதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அடுத்தநாளே அவர்கள் வீட்டை மாற்றினர். அந்த உதவிக்காக அவர்கள் தங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். நாங்கள் அவர்களிடம் அந்த தொகையைத் திரும்ப கேட்கக் கூடாது என தீர்மானித்தோம். ஒருநாள் காலையில் அந்த அண்ணா எனக்கு அழைத்து, முதலாவது உலக யோகா தினத்தையொட்டி சத்குருவை பார்ப்பதற்கு தான் வருவதாகவும், அப்போது அந்த பணத்தை திரும்பத் தருவதாகவும் கூறினார். ஆனால், அவரால் சொன்னபடி திருப்பித் தர இயலவில்லை! அவர் அதனை இனி திருப்பித் தர வாய்ப்பில்லை என்றே நினைத்தேன்.

அதன்பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை! எனக்கு அவரிடம் கேட்பதற்கும் விருப்பமில்லை! அதன்பிறகு அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் நான் அறியவில்லை! சில நாட்களில் எனது அலைபேசி எண்ணையும் மாற்றியிருந்தேன். அவரது தொடர்பு எண் என்னிடம் உள்ளது என்பதுகூட என் நினைவில் இல்லை. எனக்கு அவரது பெயர் கூட தெரியாது! ஒருநாள் திடீரென்று அவரைப் பற்றி நினைத்தேன். அவருக்கு அழைக்க வேண்டுமென விரும்பினேன். அதில் ஒரு சிக்கல் என்னவென்றால், நான் அவரது நம்பரை எந்த பெயரில் பதிவுசெய்து வைத்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் எனது தொடர்புகளில் தேடியபோது எப்படியோ அவரது நம்பரை கண்டறிந்துவிட்டேன். நான் அவரது பெயரை 'Dindigul isha anna' என்று பதிவு செய்திருந்தேன். உடனே அவருக்கு அழைத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் அவர் எனது அழைப்பிற்காக காத்திருந்துள்ளார். அவர் இப்படிச் சொன்னார், “நான் தேவியிடம் நேற்றே சொல்லிட்டேன் அக்கா! குமாரி அக்கா தானாகவே என்னிடம் பேசணும், நானாக அவரிடம் பேசமாட்டேன். நான் கொஞ்ச பணமாவது திருப்பித் தரணும்.”

அந்த நேரத்தில் அவர் வங்கியில் காத்திருந்தார். என்னுடைய வங்கி கணக்கு எண்ணை கேட்டுவிட்டு உடனடியாக ரூ.10,000த்தை செலுத்திவிட்டார். அவரால் கடனைத் திரும்ப செலுத்த முடிந்ததைக் கண்டு, நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். அந்த 2 வருடத்தில் அவரது வாழ்க்கை நம்பமுடியாத அளவில் மாறியிருந்தது. 2 மாதங்களுக்கு முன்பு அவர்கள் சத்குருவிடமிருந்து அவிக்னா யந்திரத்தைப் பெற்றிருந்தனர். அவர்கள் எனக்காக ஒரு தேவி குடி வாங்கி பரிசளிப்பதாக தெரிவித்தனர். தங்களது வாழ்க்கை எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக, கடந்த வாரம் அவர்கள் என்னை திண்டுக்கல்லிற்கு வரச்சொல்லி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டனர். அடுத்த சனிக்கிழமை நாங்கள் திடீரென திண்டுக்கல் சென்றோம். அங்கிருந்து அவர்களது சொந்த காரிலேயே கோவைக்கு பயணமானோம். அவர்கள் வாங்கிய அந்த காரில் எங்களை அழைத்து செல்ல வேண்டுமென்பது அவர்களின் பெரிய விருப்பம்!

அவர்கள் எங்களுக்காக லிங்கபைரவி குடியை வழங்கியதோடு, அதே நாளில் அவர்கள் வீட்டிற்கு சத்குரு சந்நிதியையும் பெற்றுச்சென்றனர். எங்கள் இல்லம் திரும்புகையில் அவர்கள் பொழிந்த அன்பினாலும் நன்றியுணர்வினாலும் நனைந்திருந்தோம். தேவியின் அருளினால்தான் அவர்களின் வாழ்க்கை இவ்வளவு சிறப்பான மாற்றம் கண்டது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!

ஆசிரியர் குறிப்பு: டிசம்பர் 13ஆம் தேதி யந்திரா வைபவம் நடைபெற இருக்கிறது. சத்குரு முன்னிலையில் லிங்கபைரவி யந்திரம் வழங்கப்படுகிறது. யந்திரத்தை பெறும்போது சக்திவாய்ந்த யந்திர செயல்முறைக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நீங்கள் நேரடியாகப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, மின்னஞ்சல் செய்யவும் yantra@lingabhairavi.org அல்லது கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 94890 45133

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1