பெண்தன்மையின் தெய்வீக வெளிப்பாடான லிங்கபைரவிக்கு பெண்கள் 21நாள் சிவாங்கா விரதமிருந்து முளைப்பாரி எடுத்து பாதயாத்திரையாக வந்து தேவிக்கு அர்ப்பணிப்பது வழக்கம். பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மரபின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு கள்ளிபாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கி, முளைப்பாரி, பாதயாத்திரையாக லிங்கபைரவிக்கு வந்தடைந்தது. நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு தேவிக்கு 21நாள் சிவாங்கா விரதமிருந்து முளைப்பாரி எடுத்து தேவியின் அருள்பெற்றனர்.

மேளதாளங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவியை அமர்த்தி அதை ஆண்கள் இழுத்து வர, பெண்கள் முளைப்பாரியுடன் "ஜெய் பைரவி" லிங்க பைரவி" என்று கோஷமிட்டு பாதயாத்திரையாக நடந்து வந்தனர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்த இந்த பாதயாத்திரையில் தேவியுடனான அவர்களின் தொடர்பு உச்சத்திலிருந்ததைக் காணமுடிந்தது. கற்கள் நிறைந்த பாதைகள், சுட்டெரிக்கும் உச்சி வெயில் என பல இன்னல்கள் இருந்த போதிலும் தேவியிடம் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வந்த அவர்களின் மனதில் சிறிதும் தடுமாற்றமில்லை. தேவிக்கு ஆங்காங்கே கிராம மக்கள் சார்பாக சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேவி பல்லக்கில் பவனி வர பக்தர்கள் எட்டு கிலோமீட்டர் பாதயாத்திரையாக உடன் வந்தனர். கள்ளிபாளையத்தில் துவங்கி மத்வராயபுரம், தொம்பிலிபாளையம், இருட்டுபள்ளம், செம்மேடு, முட்டத்துவயல் மலைவாசல் வழியாக லிங்கபைரவி தேவி அழைத்துவரப்பட்டாள்.

பலதரப்பட்ட வாழ்க்கைச்சூழலில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து ஆனந்தக்கண்ணீருடன் தேவிக்கு அர்ப்பணித்தனர், எந்த தடங்கல் வந்தாலும் தேவி தங்களுக்கு துணை நிற்பாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் பூரிப்பும் தென்பட்டதை அவர்களின் முகத்தில் காணமுடிந்தது.

பெண்களுக்கான சிவாங்கா சாதனாவின் நிறைவாக தைப்பூசமன்று சந்திரகுண்டத்தில் குளித்து தேவிக்கு தேங்காய், தானியங்கள் மற்றும் 11நாணயங்கள் கொண்ட முடிப்பை அர்ப்பணித்தனர். பக்தி குறித்த சத்குரு அவர்களின் உரையும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. சிவப்பு நிறத்தில் உடையணிந்து உற்சாக மிகுதியில் தென்பட்ட பெண்கள் ஆரவாரத்துடன் தங்கள் சாதனாவை நிறைவு செய்தனர்.

21 நாள் சிவாங்கா சாதனா இருந்து முளைப்பாரி எடுத்து பாதயாத்திரையாக வந்த அனுபவத்தை சிலர் பகிர்ந்துகொண்டனர், அவர்களின் பகிர்வுகளை கீழே காண்போம்.

ஹேமலதா,பேராசிரியர்
பெங்களூரூ

Hema

நான் முதன்முதலாக இந்த பெண்களுக்கான சிவாங்கா சாதனா செய்கிறேன், பல யோகப் பயிற்சிகள் செய்தாலும் தேவியுடனான தொடர்பை எல்லாவற்றையும் விட மிகப்பெரியதாகக் கருதுகிறேன். முதன் முதலாக நான் தேவி சந்நிதிக்குள் சென்றபோது ஏதோ கோவிலுக்குச் செல்கிறோம் பிரார்த்திக்கிறோம் என்று மட்டுமே எண்ணினேன். ஆனால் நான் தேவியை நினைத்து கண்மூடி அமர்ந்தபோது தேவியின் கண்களை உணரமுடிந்தது, பின் தேவியின் பக்தையாகிவிட்டேன். எப்போது இன்னல் வந்தாலும் தேவி எனக்கு துணை நிற்கிறாள். அதனாலேயே நான் இந்த சாதனா எடுக்க முடிவெடுத்தேன். எனக்கு பாதயாத்திரை இருக்கும் என்று தெரியாது, முதலில் சிறிய முளைபயிராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், பின்னர்தான் தெரிந்தது அது ஒரு செடி தொட்டி என்று. தொடக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தது தேவி அருளால் என்னால் சுமந்து வரமுடிந்தது. கடைசியாக அந்தத் தொட்டியை கீழிறக்கி வைக்கும்போது எது என்னால் எட்டு கிலோமீட்டர் சுமக்க இயலாது என்று நினைத்தேனோ அது தேவி அருளால் சாத்தியமானது. தைப்பூசம் நிறைவு நிகழ்ச்சிக்காக மிகுந்த ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மீனாட்சி, இல்லத்தரசி
சென்னை

Meenaமுதன்முதலாக தேவி சாதனா செய்கிறேன், 21நாள் சாதனா இதன் தீட்சை எனக்கு சென்னை தாம்பரம் மையத்தில் வழங்கப்பட்டது. சாதனாவில் இருக்கும்போதே என்னுள் பல மாற்றங்களை உணரமுடிந்தது. இருவேளை உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும் அதனால் உடல் சுறுசுறுப்பானது மனதளவில் ஒரு அமைதி நிலவியது. எந்நேரமும் தேவியின் நினைவு இருந்துகொண்டே இருந்தது. சாதனா குறிப்புகளை சில நேரங்களில் பின்பற்ற இயலாமல் போகும்போது சிறிது மன உளைச்சல் ஏற்படும். இந்த சாதனாவிற்காக முளைப்பாரி எடுக்க விருப்பமுள்ளவர்கள் எடுக்கலாம் என்று கூறினார்கள், எனக்கு முளைப்பாரி என்னவென்று தெரியாது. பக்தியாக இருக்கவேண்டும் என்று தோன்றியதால் நான் முளைப்பாரி சுமந்து வந்தேன். மிகவும் தர்க்க ரீதியாக யோசிப்பதால் பக்தி என்ற ஒன்றை இழந்துவிட்டேன் சத்குரு யோக வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகுதான் பக்தி என்றால் என்ன என்பதை உணரமுடிந்தது.

 

 


சுப்புலட்சுமி, இல்லத்தரசி
திருநெல்வேலி

subbuநான் ஆறாவது முறையாக சிவாங்கா சாதனா செய்கிறேன், எனக்கு நீரிழிவு நோய் உள்ளது மதியம் 12மணிவரை உண்ணாமல் இருப்பது உடலில் சர்க்கரையளவை அதிகரிக்கச் செய்யும் நீங்கள் விரதம் இருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தேவியின்மேல் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு நான் விரதம் இருந்தேன், இதுவரை எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. சில நேரங்களில் மதியம் 1மணி 2மணியைத் தாண்டி உணவு உண்ட நாட்களும் உண்டு, தேவியின் அருள் என்றுதான் சொல்வேன். 21 நாளும்தேவி என்னுடன் இருந்ததைப்போல் உணர்ந்தேன். இன்று தேவியை முளைப்பாரியாகக் கொண்டுவந்து இறக்கி வைக்கும்பொழுது, ஏதோ தேவியை என் உடலில் இருந்து பிரித்தெடுப்பதைபோல் உணர்ந்தேன். நம் தாயிடம் கேட்டால் கிடைக்காதவற்றைக்கூட தேவி தந்து அருள்புரிகிறாள். இந்த 21நாள் சாதனாவிலும் உங்களை நம்பி வருகிறேன் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியே நான் வந்தேன். பாதயாத்திரையாக முளைப்பாரி சுமந்து வருவது எனக்கு இது மூன்றாவது முறை. தேவி ஒரு குழந்தையை கைபிடித்து அழைத்து வருவதைப் போலவே என்னை அழைத்து வந்தாள். சத்குரு அவர்கள் ஆண்களுக்காக சிவாங்கா வெள்ளியங்கிரி மலை யாத்திரையை உருவாக்கியதைப்போல பெண்களுக்குக்காக இந்த எட்டு கிலோமீட்டர் பாதயாத்திரையை உருவாக்கியுள்ளார்.


நித்யா, அலுவலக பணியாளர்
சென்னைnithya

ஐந்தாவது முறையாக பெண்களுக்கான சிவாங்கா சாதனா செய்கிறேன். ஒவ்வொரு முறை சாதனா செய்யும்போதும் ஏதாவது ஒரு தடங்கல் இருக்கும், அலுவலகத்தில் விடுமுறை கிடைக்காது அல்லது வீட்டில் ஏதாவது ஒரு தடங்கல் இருக்கும் அல்லது குழந்தையை கவனித்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த முறை மிகவும் சுமுகமாக இருந்தது, தேவியே கைபிடித்து என்னை அழைத்து வந்ததைப்போல் உணர்ந்தேன். நான் எதுவுமே செய்யவில்லை தேவியே என்னுள் செயாலாற்றினாள். கடந்தமுறையை விட இந்த முறை தேவி இன்னும் அழகாக தெரிகிறார்கள். காலையில் தேவியைப் பார்த்தபோதே கண்களில் கண்ணீர்வந்து விட்டது. எனக்கு இந்த வருடம் மிகப் பிரகாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. தேவி எனக்குஒரு தாய் மாதிரி என்னை எந்தத் துயரும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறாள். வீட்டில் கூட செருப்பில்லாமல் நடந்ததில்லை ஆனால் இப்பொழுது தேவிக்காக செருப்பில்லாமல் வீதிகளில் நடக்கிறேன். என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

 


ஷாலினிShalini
பொறியாளர்
சென்னை

பலமுறை தேவி சாதனா எடுத்திருந்தாலும் பாதயாத்திரை செய்வது இதுவே முதல்முறை, கடந்த ஆண்டே முளைப்பாரி எடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் சில காரணங்களினால் முடியாமல் போனது. இம்முறை என்ன தடங்கல் வந்தாலும் சரி பாதயாத்திரை நடக்க வேண்டும் என்று என்னை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு இங்கு வந்தேன். இன்று பாதயாத்திரையில் பட்டாசு வெடித்தார்கள்சிதறிக்கிடந்த பட்டாசில் 2முறை கால் வைத்து சூடு வாங்கினேன், இவ்வளவு தூரம் நடந்து பழக்கமில்லை ஆனால் மிகுந்த ஈடுபாடுடன் செய்தேன், தேவியின் அருளால் எல்லாம் சாத்தியமானது. காலையில் தேவி மிகவும் அழகாக இருந்தார்கள். கடந்த ஆண்டு தன்னார்வத்தொண்டாற்ற இங்கு வந்தேன் அப்பொழுதே முடிவெடுத்திருந்தேன் அடுத்தமுறை கண்டிப்பாக முளைப்பாரி எடுக்க வேண்டுமென்று. தேவியின் அருளால் அது இந்த முறை சாத்தியமானது.


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.