ஒரு ஊரில் தங்கியிருந்த காலத்தை சொல்லும்போது சிலர் தாங்கள் அவ்விடத்திடத்தில் எத்தனை வருடங்கள் குப்பை கொட்டினார்கள் என வேடிக்கையாகச் சொல்லுவதுண்டு! மனிதர்கள் வாழும் இடம் ஒவ்வொரு மணிநேரத்திலும் பல்வேறு குப்பைகளால் நிறைகின்றன. விலங்குகளைப் போல் இயற்கையோடு இயைந்து வாழ்வோமேயானால், நமது குப்பைகளை இயற்கையே பார்த்துக்கொள்ளும்! ஆனால் நாம் இன்று பல்வேறு தொழிற்நுட்ப வசதிகளுடன், நாகரீக வளர்ச்சிபெற்ற சமுதாயமாக பரிணமித்துவிட்டோம்; கூடவே நாம் போடும் குப்பையும் பல்வேறு நிலையில் சேரத்துவங்கிவிட்டன.

இந்தியாவில் ஒருநாளில் உருவாகும் குப்பைக் கழிவுகளை டிராக்டர்களில் நிரப்பி, அந்த டிராக்டர்களை கன்னியாகுமரியிலிருந்து வரிசையாக நிறுத்தினால், அதன் நீளம் டெல்லி வரை போகும் என கணக்கிடுகிறார்கள்.

மட்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகள் எனப்பிரித்து அதற்குரிய குப்பைத் தொட்டியில் போடும் வழக்கம் இன்னும் பெரும்பாலான வீடுகளில் இல்லையென்றே சொல்லாம். குப்பையை சாலையோரங்களில் ஏதோ ஒரு இடத்தில் கொட்டுவதும், அதிலுள்ள ப்ளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுடன் சேர்த்து தீவைத்து எரிப்பது சுற்றுச்சூழலை மாசடையச் செய்வதும் அன்றாட நிகழ்வாகிவருகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குப்பைகளை முறையாகக் கையாள வேண்டுமென்ற பொறுப்புணர்வை பள்ளிக் குழந்தைகளிடத்தில் ஒரு விளையாட்டின் மூலம் ஊட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம்! ‘சீட்டு எடு விளையாடு!’என்று பொருள்படும் விதமாக அமைந்த இந்த 'Pick it up' கேம் மூலமாக மட்கும் குப்பைகள் மட்காத குப்பைகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் பெறுகிறார்கள். மேலும் இதில், குப்பையை கையாளும் இரண்டு முறைகளை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுத்தருகின்றனர். அதாவது, மறுசுழற்சி செய்து மீண்டும் நாம் குப்பைகளை உபயோகித்துக்கொள்ளும் மறுசுழற்சி நுட்பங்கள் பற்றியும், அடுத்ததாக, சிலவகை குப்பைகளை எப்படி பணமாக மாற்றுவது என்பதையும் இவர்கள் புரிய வைக்கிறார்கள்.

உணவுக் குப்பைகள், ப்ளாஸ்டிக் குப்பைகள், உலோகக் குப்பைகள், எலக்ட்ரானிக் குப்பைகள் என ரகம் ரகமாக பிரித்து, எப்படி அவற்றை கையாள்வது என்பதைச் சொல்லும்போது, உணவுக் குப்பைகளை மட்கச்செய்து, அவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்பதையும் அதனால் நம் சுற்றுச்சூழலுக்கு நிகழும் நன்மைகள் என்னென்ன என்பதையும் விளக்குகிறார்கள். மேலும், ப்ளாஸ்டிக் குப்பைகளை எப்படி மறுசுழற்சி செய்வது மற்றும் உலோகக் குப்பைகளையும் எலக்ட்ரானிக் குப்பைகளையும் மறுசுழற்சி செய்வது மற்றும் விற்று பணமாக மாற்றுவது போன்ற நுட்பங்களையும் செயல்முறை விளக்கத்துடன் தன்னார்வத் தொண்டர்கள் கற்றுத்தருகின்றனர்.

பணமாக மாறும் குப்பைகள் குறித்து சொல்லும்போது, ஒரு மாதத்தில் நம் வீட்டில் சேகாரமாகும் ப்ளாஸ்டிக், நோட்டுப் புத்தகங்கள், நியூஸ்பேப்பர் போன்ற குப்பைகளின் எடை குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் பால்பாக்கெட், ஷாம்பு பாட்டில்கள், மது மற்றும் குளிர்பான பாட்டில்கள் மற்றும் சிலவகை உலோக மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் போன்றவற்றை அருகிலிருக்கும் பழைய பொருட்களை வாங்கக் கூடிய விற்பனையாளர்களிடம் மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று, அவர்களிடம் எப்படிப் பேசி விற்பது என்பதை தன்னார்வத் தொண்டர்கள் கற்றுத்தருகின்றனர். இவர்கள் விற்கும் அந்த குப்பைகளை வியாபாரிகள் வேறுபல இடங்களில் மறுசுழற்சிக்கு அனுப்புவதால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளைவதாக இருக்கும்.

பசுமைப் பள்ளி இயக்கம் பற்றி…
ஈஷாபசுமைக்கரங்களின்பசுமைப்பள்ளி இயக்கம் பள்ளி மாணவர்களிடையே சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏட்டுப்படிப்பாக இல்லாமல், களப்பணியாக கொண்டுசேர்க்கிறது!

நாம் என்னதான் புரியும் படியாக வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் சொல்லிப்புரியவைத்தாலும், களத்தில் செயல்முறையாக ஒன்றைக்கற்கும் போது அதன் தாக்கம் முற்றிலும் ஆழமானதாக இருக்கும். மேலும், பல்வேறு விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் அறிவை புகட்டுவதில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் திறம்பட செயல்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் கல்வித்துறையுடன் இணைந்து 2,200 பள்ளிகளின்சுமார் 1 லட்சம்மாணவர்கள்பசுமைப் பள்ளி இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் சுமார் 35 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இம்மாணவர்கள் காரணமாகியுள்ளனர் என்பது நம்ப இயலாததாக இருக்கலாம்!

இந்தஇயக்கமானதுகுழந்தைகளுக்குஇயற்கையோடுதொடர்பிலிருக்கும்வாய்ப்பினைநல்குவதோடு, அவர்களைசிறப்புமிக்கதலைமுறையாய்உருவாக்குகிறது.

உங்களுக்குவிருப்பமும்நேரமும்இருந்தால்ஈஷாஅன்பர்களுடன்இணைந்துநாற்றுப்பண்ணைகளில்தன்னார்வத்தொண்டுபுரிந்திடமுடியும். பசுமைப்பள்ளிஇயக்கம்பற்றிமேலும்தகவல்பெறவும், ஈஷா நாற்றுப்பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளை குறைந்தவிலையில் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
தொ. பே. 94425 90062