ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற நான்காம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!

ஈஷா யோக மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறவிருக்கிறது. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய நான்காம் நாள் கொண்டாட்டத்தில் திரு.ஸ்ருதிசாகர் மற்றும் செல்வி.கீர்த்தனா ஆகியோரின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6.45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். மனதை மயக்கும் பல்வேறு தெய்வீக கீர்த்தனைகளை செல்வி.கீர்த்தனா பாட, தனது தேனிசை சிந்தும் புல்லாங்குழலால் அனைவரின் நெஞ்சங்களையும் இசையால் வருடினார் ஸ்ருதிசாகர்.

ஸ்ருதிசாகர் (புல்லாங்குழல் இசை)

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு, இசையில் முதுநிலை பட்டம் பெற்ற J.B.ஸ்ருதிசாகர் புல்லாங்குழல் இசையில் வளர்ந்து வரும் ஒரு துடிப்புமிக்க இளம் கலைஞராவார். அகில இந்திய வானொலியில் B High கிரேடு கலைஞரான இவர், கலைமாமணி டாக்டர். S.சுந்தர் மற்றும் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசை மேதை பலசை ஆகியோரின் மாணவர் ஆவார்.

ரோட்டரி அமைப்பிடமிருந்து குழந்தை திறமையாளருக்கான விருதை பெற்றுள்ள இவர், இளம் சாதனையாளருக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்பை பெற்றுள்ளார். தனது குருவுடன் இணைந்து மூன்று இசை தொகுப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தியாவின் சார்பில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டி கிராமத்தில் தனது குழலிசையை வழங்கிய பெருமைக்குரிய ஸ்ருதிசாகர் அவர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஷண்முகானந்தா சபா, மைசூர் கானபாரதி, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், ஸ்ப்ரிட் ஆஃப் யூத் இசைநிகழ்ச்சி, HCL-மியூசிக் அகாடமி, ராஜலட்சுமி ஃபைன் ஆர்ட்ஸ் கோவை என இந்தியா முழுவதிலும் பல்வேறு சபாக்கள் மற்றும் அமைப்புகளில் தனது இசைநிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.

கேரளாவில் பல்வேறு பாரம்பரிய திருவிழாக்களில் தொடர்ந்து தனது இசை நிகழ்ச்சியை வழங்கி வரும் ஸ்ருதிசாகர், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் புதுப்புனல் மற்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகளிலும், விஜய் தொலைக்காட்சியில் சங்கீத சங்கமம் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

கீர்த்தனா (குரலிசை)

ஸ்ருதிசாகரின் சகோதரியான செல்வி.J.B.கீர்த்தனா இசையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். கர்நாடக குரலிசையில் தேர்ச்சிபெற்றவரான இவர், அகில இந்திய வானொலியில் B கிரேடு கலைஞராவார். கலைமாமணி டாக்டர். S.சுந்தர் அவர்களின் மாணவியான கீர்த்தனாவின் அரங்கேற்ற இசைநைகழ்ச்சி, அவரது 18ஆம் வயதில் திரு.லால்குடி ஜெயராம் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தேறியது.

ரோட்டரி அமைப்பிடமிருந்து குழந்தை திறமையாளருக்கான விருதை 1999ல் பெற்றுள்ள இவர், இளம் சாதனையாளருக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்பை பெற்றுள்ளார். மேலும், 2010 மற்றும் 2011க்கான கிருஷ்ண கான சபாவின் சிறந்த இசைநிகழ்ச்சிக்கான பரிசையும் மியூசிக் அகாடமியின் இசைப் போட்டியில் பக்தி பாடல் பிரிவில் முதல் பரிசை வென்றுள்ளார். இன்னும் பல்வேறு முதல்பரிசுகளை எண்ணற்ற இசைப்போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ள பெருமைக்குரியவர் கீர்த்தனா.

லிங்க பைரவி ஊர்வலம்...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-10

நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொலு...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-12

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

நாளை (06-10-2016)

  • ஐந்தாம் நாள் விழாவான நாளை திரு.K.S.ரகுநாத் அவர்களின் புல்லாங்குழல் மற்றும் வயலின் இசைநிகழ்ச்சி நிகழவுள்ளது.
  • நவராத்திரி நாட்களில் அக்டோபர் 2,5,8 ஆகிய நாட்களில் மாலை 5:30 முதல் 6:10 வரை லிங்கபைரவியில் நடைபெறும் நவராத்திரி சிறப்பு பூஜையின் நேரடி இணைய ஒளிபரப்பில் இணைந்து, தேவியின் அருள்மழையில் நனைந்திடுங்கள்!