விளையாட்டுப் பருவத்தில் உள்ள ஒரு குட்டிப்பெண் யோகா ஆசிரியராக ஆகியுள்ளதைப் பற்றி ஒரு சுவாரஸ்ய பதிவு இங்கே! உலக யோகா தினத்திற்காக உப-யோகா வகுப்பு வழங்கி வரும் சிறுமி குஷி, தனது அனுபவத்தை பகிர்கிறாள்!

தனது சக மாணவர்கள் விடுமுறையை அனுபவித்தபடி இருக்க, 11 வயதே ஆன சண்டிகரைச் சேர்ந்த குஷி உபயோகா வகுப்புகளை கற்றுக்கொடுப்பதில் தன்னை ஈடுபடுத்தி பரபரப்பான யோகா ஆசிரியராக ஆகியுள்ளார். வீடியோ கேம்ஸ், டிவி என பிற குழந்தைகள் களித்திருக்க குஷி தற்போது ‘அனைவருக்கும் யோகா!’ எனும் முழக்கத்துடன் களமிறங்கி உள்ள ஈஷாவின் செயல்திட்டத்தில் தனது பங்களிப்பை வழங்குகிறாள். குஷி சொல்வது என்ன, வாருங்கள் கேட்போம்!

11 வயதே ஆன நான், இந்த வகுப்பை வழங்குவதைப் பார்த்த பல பங்கேற்பாளர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தனர். ஆனால், அவர்கள் வகுப்பு துவங்கியதும் மிகவும் ஆர்வத்துடன் அனுபவித்து கற்றுக்கொண்டனர்.

“ஈஷா யோகாவில் கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகளை எனது தாய் பயிற்சி செய்வதை நான் தினமும் பார்ப்பேன். இதன்மூலம் அவர் அடையும் பயன் என்ன என நான் கேட்கும்போது, யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் அமைதி, சாந்தம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றைப் பெறுவதாக எனது தாய் கூறுவார். ஏப்ரலில் நிகழ்ந்த உபயோகா வகுப்பை பற்றி அவர்தான் எனக்குப் பரிந்துரை செய்தார். நான் அந்த வகுப்பில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், அதைக் கற்றுக்கொடுக்கவும் பயிற்சி பெற்றுக்கொண்டேன். எனக்கு இருந்த ஒருசில சந்தேகங்களை வகுப்பு ஆசிரியர்கள் தீர்த்து வைத்தார்கள். அதன்பிறகு எனக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சமீபத்தில், ஸ்நேகாலயாவில் நான் 80 மாணவர்களுக்கு உபயோகா பயிற்சி வகுப்பை வழங்கினேன். அதில் நான் ஆரோக்கியம், அமைதி, அன்பு, வெற்றி போன்ற ஏழுவிதமான தன்மைகள் கொண்ட பயிற்சிகளை வழங்கினேன். 11 வயதே ஆன நான், இந்த வகுப்பை வழங்குவதைப் பார்த்த பல பங்கேற்பாளர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தனர். ஆனால், அவர்கள் வகுப்பு துவங்கியதும் மிகவும் ஆர்வத்துடன் அனுபவித்து கற்றுக்கொண்டனர். ‘நாத யோகா மற்றும் திடா சடிலஜா’ ஆகிய பயிற்சிகள் பல பங்கேற்பாளர்களுக்குப் பிடித்தமான பயிற்சியாக இருந்தது.

தற்போது நான் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் உபயோகா வகுப்புகளை நடத்தி வருகிறேன்.” தனது உபயோகப் பயிற்சியை செய்யத் தயாராகிக்கொண்டே குஷி பெருமையுடன் இதனைப் பகிர்ந்துகொண்டாள்.

உபயோகா என்றால்...

சத்குரு:

‘உபயோகா’ என்று அழைக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், அதனை அனைவரும் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பது குறித்தும், யோகா செய்துவரும் மக்கள் உட்பட உலகின் பெரும்பான்மையான மக்கள் அறிந்துகொள்ளாமலே உள்ளனர். உடல் மற்றும் மனநிலை சார்ந்த பலன்களை வழங்கக் கூடிய இந்த உபயோகா, ஆன்மீக பரிமாணத்தை தொடுவதில்லை!

‘யோகா’ என்பது ஒரு உடற்பயிற்சி முறையன்று. அது மிக சூட்சும நிலையான ஒரு பரிமாணமாகும். உடல்நிலை கடந்த ஒரு பரிமாணத்தை உங்களுக்குள் உயிர்ப்புள்ள ஒரு அனுபவமாக உணர்வதற்கான ஒரு தொழிற்நுட்பமாகும். யோகா உங்கள் வாழ்வில் ஒரு உயர்ந்த சாத்தியத்தை வழங்குகிறது. உள்நிலைப்பரிமாற்றம் நிகழ்த்தவல்ல எந்தவொன்றும் தவறாக கையாளப்படுமானால், அது பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே மிகவும் ஏதுவான சூழலில் மட்டுமே யோகாவை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. ஆனால், உபயோகாவை மேற்கொள்வதற்கு அந்த அளவிற்கான ஒரு உகந்த சூழல் அவசியமில்லை! அதை நீங்கள் முறையின்றி செய்யும்போதும் கூட, அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், அது மிகவும் எளிய பயிற்சி. ஆதலால், உங்களால் அதனை முறையற்று செய்ய இயலாது.

இந்திய பேச்சுவழக்கில் உபயோகா எனும் வார்த்தை பயன்படக்கூடியது / உபயோகமானது எனும் பொருள் தருகிறது. ஆனால் உண்மையில் அதன்பொருள், உப-யோகா அல்லது துணை-யோகா என்பதாகும். இதனை நீங்கள் ஐந்து நிமிடங்களில் கற்றுக்கொள்ள முடியும். இதனை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் பயிற்சி செய்யமுடியும், அதேவேளையில் இதன் பலன்கள் அளப்பரியதாகும். இதன்மூலம் நீங்கள் உடல் மற்றும் மனநிலையில் சிறந்து விளங்குவீர்கள். மேலும், இதற்கென எந்தவித துணைக்கருவிகளும் தேவையிருக்காது.

உபயோகாவின் பலன்கள்

  • தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி, மூட்டுகளுக்கு உயவுத்தன்மை, நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சிகொள்ளச் செய்தல்
  • மூளையில் நியூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல், நினைவாற்றல் மற்றும் புத்திக் கூர்மை
  • தூக்கத்தின் அளவு குறைதல் மற்றும் முதுகுத்தண்டில் புத்துணர்ச்சி
  • ஆழ்ந்த அமைதியை உணர்தல், புதுவித உயிர்சக்தியை உணர்தல் மற்றும் நல்வாழ்வு

நீங்களும் இதில் பங்கேற்கலாம்!

5 நிமிட யோகா - உள்நிலை மாற்றத்திற்கான கருவி - அன்பு, அமைதி, ஆனந்தம், நல்வாழ்வு, வெற்றி என பலவித நன்மைகளை வழங்கக் கூடிய எளிய உப-யோகா பயிற்சிகளை கற்றுக்கொள்ளுங்கள். உலக யோகா தினத்திற்காக ஒரு பயிற்சி வகுப்பை நிகழ்த்துங்கள் அல்லது உப-யோகாவை கற்றுத் தருவதற்கான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay