'குப்பை’ – கிராமங்களில் அரங்கேறும் விழிப்புணர்வு நாடகம்!
சுத்தம், சுகாதாரம் குறித்து ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் கிராமங்களில் அரங்கேற்றும் விழிப்புணர்வு நாடகம் ‘குப்பை’! இந்த நாடகம் பற்றியும் அதனோடு மாணவர்கள் கிராமங்களில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்தும் சில வரிகள் இங்கே!
 
 

ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் ஈஷா யோக மையத்தின் அருகாமையிலுள்ள செம்மேடு கிராமத்தில், சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'குப்பை' என்ற நாடகத்தை மார்ச் 11ம் தேதி (ஞாயிற்றுகிழமை) அரங்கேற்றினர்.

இம்மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமைகளில் ஈஷா யோக மையத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இந்த 'குப்பை' நாடகத்தை அரங்கேற்றி கிராம மக்களிடத்தில் ஆரோக்கியமான வாழ்விற்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கி வருகின்றனர்! கூடவே, கிராமங்களில் துப்புரவு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான கதையமைப்புடன் நகைச்சுவையும் சிந்திக்க வைக்கும் கருத்துக்களும் நிறைந்த இந்த நாடகத்தில், ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் பலர் தங்கள் அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி, மக்களின் கரகோஷங்களையும் பாராட்டுக்களையும் பெறுகின்றனர்.

ஈஷா அவுட் ரீச் சார்பில் 2016ம் ஆண்டுமுதல் ஈஷா யோக மையத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளைப் பிரித்து போடுவதற்காக வீடுதோறும் பிரத்யேகமான குப்பைக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது! மேலும், ஈஷா அவுட் ரீச் மூலம் இக்கிராமங்களில் அன்றாடம் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஈஷா இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1