உஜ்ஜெய்னில் நடைபெற்றுவரும் மஹாகும்பமேளாவிற்காக ஈஷா சார்பாக நிகழ்ந்த சிறப்பு யாத்திரை பற்றியும், கும்பமேளாவில் சத்குரு கலந்துகொண்டது பற்றியும் சில துளிகள் இங்கே!



கும்பமேளா - ஈஷா உஜ்ஜெயின் யாத்திரை!

கும்பமேளாவில் அடிப்படை அம்சமாக உள்ள பூதசுத்தி எனும் யோக விஞ்ஞானத்தைப் பற்றி எடுத்துக்கூறி, இந்த ஆண்டு உஜ்ஜெய்னில் நிகழும் மஹா கும்பமேளாவிற்கு ஈஷாவின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை சத்குரு தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த மே 8ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்ட சிறப்பு இரயிலில் சுமார் 1200 பேர் உஜ்ஜெய்னில் நிகழும் சிம்ஹஸ்த்த மஹாகும்பமேளாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் உஜ்ஜெய்னில் பாயும் ஷிப்ரா நதியில் புனித நீராடி, மஹா காலேஷ்வர் மற்றும் காலபைரவர் கோயிலில் தரிசனம்பெற்று, மே 13ஆம் தேதி தமிழகத்தை வந்தடைந்தனர்.

உஜ்ஜெய்ன் மஹாகும்பமேளாவில் சத்குரு!

உஜ்ஜெய்னில் நிகழும் மஹாகும்பமேளாவில் மே 13 அன்று கலந்துகொண்ட சத்குரு, அங்கு பத்திரிக்கையாளர் பவ்தீப் காங் அவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். கடந்த 27 வருடங்களாக பத்திரிக்கையாளராக உள்ள பவ்தீப் காங் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி சண்டே அப்சர்வர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி பயோனியர், தி டெலிகிராஃப், இந்தியா டுடே மற்றும் அவுட் லுக் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளதோடு, அரசியல், விவசாயம் மற்றும் உணவுக்கொள்கை போன்றவற்றைப் பற்றி எழுதிவருகிறார்.

பஞ்சபூதங்கள் நிகழ்த்தும் அதிசயங்கள் (Elemental Magic), தட்பவெப்ப மாற்றத்தால் நிகழும் சவால்கள் மற்றும் மாற்றுவழிகள் ஆகியவை குறித்து பவ்தீப் காங் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், “வெற்றிக்கான யோசனைகளை நாம் துரதிர்ஷ்டவசமாக வேறுபல இடங்களிலிலிருந்து பெறுகிறோம். நாம் அதை மறுஉருவாக்கம் செய்யாவிட்டால் அது அழிவை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.